Skip to main content

Posts

Showing posts from May, 2023

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை கோயில் என்றால் அது திருவரங்கம் தான். இன்றும் நாராயணா என்று சொல்லுவதைக் காட்டிலும், திருவரங்கம் என்றால் மனதில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கும் போது சின்ன அளவில் ’மினியேச்சர் மாடல்’ ஒன்று வைத்திருப்பார்கள். குட்டியாக பார்க்க அழகாக இருக்கும். திருவரங்கம் வைகுண்டத்தின் மினியேச்சர் மாதிரி. அதனால் தான் பூலோக வைகுண்டம் என்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்யச்* செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்* மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா* கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே. அதாவது ஸ்ரீராமருக்கு ஏற்ற இடம் திருவரங்கம் ‘பெரிய’ கோயில். திருவரங்கம் என்று சொல்லவில்லை என்றால் நீங்க பிறந்ததே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். திருவரங்கம் என்ற சொல் எப்படி நம் மனதை வசீகரிக்குமோ அதைவிட வசீகரிப்பவர் நம்பெருமாள். அந்த நம்பெருமாளை அரையர் ”மந்தாரம் கண்டால் மறையும் பெருமாள்” என்பார். அதாவது நம்பெருமாள் புறப்பாட்டின் போது ’மப்பும் மந்தாரமாக’ மழை வருவது மாதிரி இருந்தால் உடனே நம்பெருமாள் கோ