Skip to main content

Posts

Showing posts from January, 2006

Book(not)fair

[%image(20060120-desikan_at_bookfair.jpg|328|246|At the BookFair)%] புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை போனேன். அங்கு வாங்கிய புத்தகங்களள  பற்றிச் சொல்ல போவதில்லை பயப்படாதீர்கள். * புத்தகக் கண்காட்சி பின்வாயிலில் ஓர் இளைஞர் நம்முடைய பெயரை அரிசி, கடுகு போன்றவற்றில் எழுதி (ரூ 20/= ) ஒரு சாவிக் கொத்தில் போட்டுத் தருகிறார். இந்த முறை இது புதுசு. அதைக் கடந்து வந்தால் டெல்லி அப்பளம், சூப், ஆவின் கடை, மிளகாய் பஜ்ஜி என்று சுவாரசியமாக இருக்கிறது. முதல்முறை போனபோது இருந்த அருமையான விவேகானந்தா காப்பி (விலை 6/-)  இரண்டாவது முறை போன போது இல்லை. * உள்ளே வந்தால் எது நல்ல புத்தகம் (அல்லது எனக்குப் பிடித்த புத்தகம் எது) என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம். இந்த முறை ஒன்று கண்டுபிடித்தேன், புத்தகம் 100 பக்கம் என்றால் அதனுடைய விலை ரூ 50/-; 200 பக்கம் என்றால் ரூ100/=. கெட்டியட்டை என்றால் ஒரு ரூ20/= சேர்த்துக் கொள்ளுங்கள். * நக்கீரன் பத்திரிகையில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய, 'இந்து மதம் எங்கே போகிறது?' அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியது புத்தக வடிவில் நன்றாகப் போகிறது. "சார், எனக்

உதவி தேவை !!

சுஜாதா அவர்கள் சென்னை ( கிண்டி) MIT கல்லூரி வெள்ளி விழா மலரில் எழுதிய கட்டுரையை தேடிக்கொண்டிருக்கிறேன்.  ஆங்கில கட்டுரை என்று நினைக்கிறேன். அந்த கட்டுரையின் பிரதியை  யாராவது  வைத்திருந்ததல் எனக்கு அனுப்புங்கள்.  மகிழ்ச்சியடைவேன். சில MIT நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம். அன்புடன், தேசிகன்

விடுபட்டுபோன வி.சி - தம்பி

நண்பர் அதியமான் சில வாரங்களுக்கு முன் அம்பலம் அரட்டையில் முன்பு எப்போதோ படித்த ஒரு விஞ்ஞான சிறுகதையை உயிர்மை வி.சி தொகுப்பில் காணவில்லை என்றார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அந்த கதையின் அவுட்லைனையும் சொன்னார். பிறகு சுஜாதாவிடம் பேசிக்கொண்டிருந்த போது அது முன்பு கணையாழியில் எழுதியது என்று நினைக்கிறேன் என்றார். அடுத்தவாரம் அதிர்ஷ்டம் என் பக்கம் அடித்தது. 1977 ஆகஸ்ட் மாதம் கணையாழியில் அந்த கதை கண்டுபிடித்தேன். கதையின் பெயர் தம்பி. படிக்க விரும்புபவர்கள் இங்கு கிளிக் செய்யவும். அடுத்த உயிர்மை வி.சி பதிப்பில் இந்த கதை இடம்பெறும். நண்பர் அதியமானுக்கு என் நன்றி. [ Update 21st Jan 2006] நண்பர் ஸ்ரீகாந்த் 'தம்பி'யின் ரிஷிமூலத்தை ஆராய்ந்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அது இங்கே

சீரியஸான காமெடி

சனிக்கிழமை உயிர்மையின் இரண்டாவது கூட்டம், இரண்டு கூட்டமாக நடந்தது. எனக்கு இந்தக் கூட்டங்களில் அவ்வளவாக ஆர்வம் கிடையாது. இவர்கள் உலகம் வேறு; என் உலகம் வேறு. இந்தக் கூட்டத்திற்கு போனதற்கு இரண்டு காரணங்கள்- ஒன்று, நண்பர் மனுஷ்யபுத்திரனின் அழைப்பு; மற்றொன்று நான் பெரும் மதிப்பு வைத்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர திரு.நல்லக்கண்ணு அவர்களுடைய பேச்சைக் கேட்க. கூட்டம் நான் போனபோது ஆரம்பித்திருந்தது. எழுத்தாளர்களின் புத்தகங்களை நல்லக்கண்ணு வெளியிட, அதைப் பற்றி மதிப்புரை என்று கூட்டம் போய்க்கொண்டிருந்தது. எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகத்தை பி.ஏ.கிருஷ்ணன் பாராட்டியும் சில இடங்களில் உள்ள மொழிபெயர்ப்புக் குறைகளையும் மிக அழகாகச் சுட்டிக்காட்டி தன் பேச்சை முடித்துக்கொண்டார். அப்போது பின்வரிசையில் உள்ள பெண்கள்(பத்து நிமிடம் முன்பு வந்தவர்கள்) திடீர் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு சத்தம் போட்டனர். ( கூச்சல் போட்டார்கள் என்பதுதான் சரியான வார்த்தைப் பிரயோகமாக இருக்கும் ). 'சண்டக் கோழி' என்ற படத்தில் 'குட்டிரேவதி' என்று பெயர் வைத்து வசனம் எழுதியதைக் க

சுஜாதாவின் நூல்கள் வெளியீட்டு விழா

வெள்ளிக்கிழமை மாலை சுஜாதாவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அதை பற்றி நான் எழுதுவதை விட மற்றவர்கள் எழுதுவதே சிறப்பு. அந்த விழாவை பற்றி  ஆசாத் அருமையாக எழுதியிருக்கார். அதை இங்கு படிக்கலாம் தினமலரில் அதை பற்றிய சிறு குறிப்பை இங்கு காணலாம். தினமலர் செய்தி [%popup(20060108-07_01_2006_006_005_001.jpg|779|492|தினமலர் புகைப்படம்)%] நான் அந்த விழாவில் வைரமுத்து வெளியிட 'சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம்' என்ற புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். அதை பற்றி வைரமுத்து பேசினார். (நான் பேசவில்லை பயப்படாதீர்கள் )  [%popup(20060108-desikan_small.jpg|400|300|என்னுடைய படம்)%] அடுத்த நாள் விழாவில் சீரியஸான காமெடிகள் பல நடைபெற்றன. எழுதிக்கொண்டிருக்கிறேன். சீக்கிரம் பதிவில் போடுகிறேன்.  காத்திருங்கள். [ Update 1: 9th Jan 2005, 10:45am ] இந்த நிகழ்ச்சி பற்றி அந்திமழையில் வந்திருக்கும் குற்ப்பு. [ எனக்கு என் புகைப்படத்தை அனுப்பி வைத்த என் நண்பர் சாமிநாதன் மற்றும்  புகைப்படத்தை எடுத்த உப்பிலிக்கு நன்றி ]

இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்

உயிர்மை பதிப்பகம் 2006ஆம் ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இரண்டு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை ஜனவரி 6-7 தேதிகளில் அடுத்தடுத்த தினங்களில் நடத்தவிருக்கிறது. ஜனவரி 6 அன்று மாலை சென்னை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில்  மாலை ஆறு மணிக்கு சுஜாதாவின் பத்துப் புத்தகங்கள் ஒரே மேடையில் வெளிடப்படுகின்றன. 1.சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம், 2.திரைக்கதை பயிற்சிப் புத்தகம், 3.சுஜாதாவின் நாடகங்கள்(முழுத் தொகுப்பு), 4.சுஜாதாவின் மர்மக் கதைகள் (முழுத் தொகுப்பு), 5.சுஜாதா பதில்கள்(இரண்டாம் பாகம்), 6.புதிய நீதிக் கதைகள் ஆகிய புதிய நூல்களுடன்  7.ரத்தம் ஒரே நிறம், 8.வஸந்த் வஸந்த், 9.வண்ணத்துப் பூச்சி வேட்டை, 10.திருக்குறள் புதிய உரை ஆகிய நூல்கள் மறுபதிப்பாகவும் வெளிவருகின்றன. இவ் விழாவில் வைரமுத்து, இயக்குனர் ஷங்கர், ரா.கி.ரங்கராஜன், ஜெயமோகன், மதன், கு.ஞான சம்பந்தன், வாஸந்தி, திலகவதி, சுதாங்கன், பூர்ணம் விஸ்வநாதன் ஆகியோர் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றுகின்றனர் ஜனவரி 7ஆம் தேதி மாலை சென்னை புக் பாயிண்ட் அரங்கில் 10 நவீன எழுத்தாளர்களின் பத்து நூல்களை உயிர்மை பதிப்பகம் வெளியிடுகிறது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !