Skip to main content

Posts

Showing posts with the label இராமாயண

திருப்பதிக்கே லட்டு

திருப்பதிக்கே லட்டு பிரசாதம் என்பது தமிழ்ச் சொல் கிடையாது. அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படத் தேவை இல்லை. ஆகமத்தில் என்ன சொல்லியிருக்கிறது, என்ன என்ன பிரசாதங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற டிக்னிக்கல் விஷயங்களுக்குள் எல்லாம் போகாமல் குழந்தை ஆண்டாள் சொல்லுவதைப் பார்க்கலாம் ”தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” வேண்டும் என்கிறாள். அதாவது அன்புடன் பூவையோ, தீர்த்ததையோ எதையோ அவனுக்குப் படைக்கும் போது நமக்கும் பெருமாளுக்கும் ஒரு அழகான பரஸ்பர உறவு ஏற்படுகிறது. அவன் தொட்டுச் சாப்பிட வேண்டாம், பார்த்தாலே அதில் அவனுடைய அருள் பொதிந்துவிடுகிறது. அந்த அருள் பெற்ற வஸ்துவை நாம் ”கூடி இருந்து” எல்லோருக்கும் பகிர்ந்தளித்து அனுபவிக்க வேண்டும். பிரசாதம் அவன் அருளின் உறுதியான வெளிப்பாடாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை. மிக உயர்ந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருந்த நம் ஆசாரியர்கள் இதை எல்லாம் தங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கு அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சில உதாரணங்களை மட்டும் இங்கே தர...

பரதனும் நம்பாடுவானும்

பரதனும் நம்பாடுவானும் திருப்பாவையின் முக்கியமான பாசுரம் நடுவில் இருக்கும் ‘எல்லே இளங்கிளியே’ என்ற இந்த பாசுரம் தான். திருப்பாவையில் மொத்தம் 30 பாசுரம் என்றால் இந்தப் பாசுரம் எப்படி நடுவில் வரும் என்ற கேள்வி எழும். மார்கழித் திங்கள் தொடங்கி சிற்றங் சிறுகாலை முடிய ஆண்டாள் கோபிமார்கள் பாவனையில் பாடுகிறாள். முப்பதாம் பாசுரமாகிய ”‘வங்கக் கடல் கடைந்த” என்ற பாசுரம் ”பட்டர்பிரான் கோதை சொன்ன” என்று கை எழுத்திட்டு ஆண்டாளாகவே பாடுகிறாள். அதனால் இதைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. ஆக 29 பாசுரத்தில் பதினான்கு பாசுரங்களை இப்படியும் அப்படியும் பதினான்கு பாசுரங்களை ஒதிக்கிவிட்டால் நடுவில் இருக்கும் பாசுரம் ’எல்லே இளங்கிளியே’. இதில் என்ன விஷேச அர்த்தம் ? ஸ்ரீ வைஷ்ணவத்தின் மிக உயர்ந்த லக்ஷனம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. அடியேன், தாசன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது மற்றவர்களின் அபராதங்கள் ( தவறுகளை) தங்கள் மீது போட்டுக் கொண்டு பரஸ்பர நீச பாவத்துடன் இருக்க வேண்டும். இந்த மிக உயர்ந்த ஸ்ரீவைஷ்ணவ ‌லக்ஷணத்தை ஆண்டாள் ‘நானே தான் ஆயிடுக’ என்று இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டாள். ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம...