Skip to main content

Posts

Showing posts from August, 2022

ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு

 ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு 

வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு

 வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு 

இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு

  இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு 

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! ‘தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !’ மீண்டும் பதிப்பிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து அதை ஆர்டர் செய்து, யாம் பெற்ற இன்பம் பெருக.. என்று கல்கி கடைசிப் பக்கத்தில் எழுதியது நினைவு இருக்கலாம். ( இல்லாதவர்கள் இங்கே படிக்கலாம் )  என் அப்பாவுடன் அந்தக் கால அச்சகத்துக்குச் சென்றிருக்கிறேன். அழுக்கு முண்டா பனியனுடன் , வேட்டியா லுங்கியா என்று அடையாளம் தெரியாத  வஸ்துவை உடுத்திக்கொண்டு  60 வாட் விளக்கு வெளிச்சத்தில், சோடா புட்டி கண்ணாடியுடன்,  கையெல்லாம் மைக் கறையுடன் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக்கோப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி கஷ்டமான வேலைக்குப் போக கூடாது என்று நினைத்ததுண்டு.  இந்தக் காலத்தில் ஏசி அறையில் கணினியின் உதவியுடன் DTP போன்றவை வளந்தாலும், அந்தக் கால அச்சுப்புத்தகங்கள் குறிப்பாக உரைகள் போல இந்தக் காலத்தில் டைப் செட் செய்ய ஆட்கள் இல்லை. இன்று ஒரு வித டெம்பிளேட் வைத்துக்கொண்டு கட் & பேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியே மீண்டும் டைப் செட் செய்தாலும் பிழைகள், அலைன்மெண்ட் என்று அனுமார் வால் போல வேலை நீண்டு கொண்டு போகும்.  60 ஆண்டுகளுக்

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில் இருந்தது!) பிறகு அது நூலாக வந்தது. பல வருஷங்கள் மறுபதிப்பு இல்லை. ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள், இதைப் பற்றி வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்களிடம் மெரினாவில் நடையின்போது சொல்ல, அவர் உடனே டி.கே.சியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அந்த நூலின் மூன்று பாகங்களையும் தேடிப் பிடித்து வெளியிட்டார். இந்த விஷயத்தை என்னிடம் கூறிய சுஜாதா “புத்தகம் வரும். ஒரு பிரதி வாங்கிவிடுங்கள் பொக்கிஷம்” என்றார். புத்தகம் வந்தபோது பதிப்பகத்துக்குச் சென்று வாங்கியது இன்றும் நினைவு இருக்கிறது. அந்தச் சமயம் சுஜாதா என்னிடம் ‘டி.கே.சியின் கடிதங்கள்’ புத்தகம் படித்திருக்கிறார்களா ? என்று கேட்டார். உங்கள் மூலம் தான் டி.கே.சியே எனக்குத் தெரியும் என்றேன்.அப்போது அவரிடம் இருந்த ‘டி.கே.சி. கடிதங்கள்’ என்ற புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்து “படித்துப் பாருங்கள். திரும்பத் தரவேண்டாம்” என்றார். டி.கே.ச

மதி நலம்

 மதி நலம்  சமீபத்தில் ‘மதி நலம்’ என்று ஆழ்வார்களே சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.  அதற்குப் பதில் சொல்லுவதற்கு முன்  திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிற்கு எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இப் பகுதியைப் படித்துவிடுங்கள்.  “திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்பு பற்றி சமீபகாலமாக கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட்டத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் தப்பாக வியாக்கியானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக்கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர். இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், ஆசாரியர்கள் ஆழ்வார்களின் ப

75ஆம் சுதந்திர தினம் சில சிந்தனைகள்

75ஆம் சுதந்திர தினம் சில சிந்தனைகள் இன்று எங்கள் அடுக்ககத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ராஜஸ்தான் பாலைவனம், காஷ்மீர், சீனா எல்லை போன்ற இடங்களில் நம் தேசத்துக்கான சேவை செய்து ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஒருவர் கொடியேற்ற ’பாரத் மாதா கி ஜே’, ’வந்தே மாதரம்’ என்ற கோஷம் எதிரொலித்தது. அந்தச் சமயத்தில் என்னைப் போல் கண்ணீரைப் பலராலும் கட்டுப்படுத்த முடியாததைப் பார்க்க முடிந்தது. கொடியேற்றிவிட்டு பிரிகேடியர் சில நிமிடங்களே பேசினாலும், அவர் பேச்சில் நம் பாரதத் தேசத்தின் பெருமையைச் சொல்லச் சொல்லக் கைத்தட்டல் ஓயாமல் இருந்த வண்ணம் இருந்தது. இன்றைய திறமையான இந்திய அரசினால் நம் பாரதத் தேசம் வேறு லெவலுக்கு செல்லும் என்றார். இந்த ஆண்டு நாடு முழுவதும் ’ஹர்கர் திரங்கா’ என்ற பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று மோதி அரசு அறிவித்ததால் எங்கள் ஊர் முழுக்க எல்லா இடங்களிலும், வாகனங்களிலும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தமிழ் நாட்டில் ? ரஜினி வீட்டில் கொடியை ஏற்றிவிட்டார், ’அட விஜய் வீட்டில் தேசியக் கொடி என்று ஆச்சரியமாக செய்தி வெளியிட்டு நாட்டுப் பற்றை ‘சங்கி’ அரசியல் பேசும் ஓர

கீரையைக் கைகூப்பி வணங்கினாளே !

கீரையைக் கைகூப்பி வணங்கினாளே ! ஸ்ரீ ஆளவந்தார் வாழி திருநாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. ’பச்சை இட்ட’ என்ற சொல் இன்றும் கிராமங்களில் கீரையைக் குறிக்கிறது. வாழி திருநாமத்தில் ’பச்சை இட்ட’ என்பது ’தூதுவளை’ கீரையைக் குறிக்கிறது. மணக்கால் நம்பி லால்குடி அருகில் அவதரித்தார். இன்றும் அந்த ஊர் மணக்கால் நம்பி பெயரைக் கொண்டே விளங்குகிறது. அதற்கு முன் அவ்வூருக்கு என்ன பெயர் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல் தான் தூதுவளைக் கீரையும். தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்). சில வருடங்கள் முன் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்” “சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?” “பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்” கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க “முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க” மறுநாள் ஒரு பை நிறையத் தூதுவளை கீரையைத் தருவித்துத் தந்தா

தி ‘Great’ காவிரி

தி ‘Great’ காவிரி மேலே பார்க்கும் இந்த வரைபடம் வெள்ளை காரன் காலத்தது. அதில் காவிரி நதிக்கு முன் ‘Great’ என்று இருப்பதை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். Great என்றால் ’பெருமையான’, ’பெரிய’ என்று பல அர்த்தங்கள் இருக்கிறது.  அக்பர், அலெக்சாந்தர் போன்றவர்களுக்கு இருக்கும் இந்த ’கிரேட்’ அடைமொழி ஏனோ ராஜ ராஜ சோழன் போன்றவர்களுக்கு இல்லை. யோசிக்கலாம்.  வாஞ்சியின் உயிர்தியாகத்தை மறந்து ஆஷ்துரைக்கு நினைவிடம் அமைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். போகட்டும். வெள்ளைக்காரன் காலத்து மேப்பில் இருக்கும் இந்த ’கிரேட்’ இப்போது இல்லை ஏன் என்று யோசிக்கலாம். கிரேட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்குக் காவிரி என்றுமே புனிதமானவள்.  பட்டினப் பாலை, புறநானூறு, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், மணிமேலகை, பாரதம், கம்பராமாயணம் என்று எல்லாவற்றிலும் ஓடுகிறது. ஸ்ரீரங்கத்துக்கு எந்த வழியாகச் சென்றாலும், முதலில் நம் கண்ணில் படுவது காவிரி தான். பார்த்தவுடன் அதை வணங்க வேண்டும்.   காவிரிக்கு பல பெருமைகள் இருந்தாலும், காவிரி நீரை ஒரு முறை பருகிவிட்டால் அருள் கொடுக்காமல் இருக்காது. ஜேஷ்டாபிஷேகம் போது குடங்க

மாலைக் கதை(5) - திருமலையிலிருந்து மேல்கோட்டை வந்த மாலை

 மாலைக் கதை(5) - திருமலையிலிருந்து மேல்கோட்டை வந்த மாலை ( நிறைவு ) இந்தக் கதை திரைப்படம் போல இரண்டு பகுதிகள் கொண்டது. பகுதி 1 இடம்: ஜூலை 7, திருமலை அன்று திருப்பதியில் இருந்தேன். இந்த முறை திருமலையில் ஸ்ரீராமானுஜர் சந்நிதியை பொறுமையாக சேவித்துவிட்டு வர வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். ஸ்ரீராமானுஜரின் திருமேனி மூன்று பிரசித்தம், ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர், மேல்கோட்டை. திருமலையில் இருக்கும் திருமேனிக்கும் ஏற்றம் உண்டு. பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் போல் ஸ்ரீ அனந்தாழ்வான் உடையவர் உகக்க திருவேங்கடனுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஸ்ரீராமானுஜர் திருமலை விஜயத்துக்கு பிறகு புறப்பட்ட சமயம், அவர் பிரிவை தாங்க முடியாமல் அவர் அனுமதியுடன் ஸ்ரீராமானுஜருடைய விக்ரஹத்தை சமைத்து, பிறகு அதை திருவேங்கடமுடியான் நியமனத்தால் அதை சந்நிதி உள்ளே பிரதிஷ்டை செய்தார். பெருமாளைச் சேவித்துவிட்டு அடியவர்களின் அலைகளில் தள்ளப்பட்டுக் கரையில் ஒதுங்கி அங்கே இருந்த ஒரு காவலரிடம் அனுமதி வாங்கி உடையவரை நிதானமாக சேவித்துக்கொண்டு இருந்தேன். அப்போது கோயில் சிப்பந்தி போன்ற ஒருவர் என் அருகில் வந்து

மாலைக் கதை(4) - குளிந்த மதுரகவி

மாலைக் கதை(4) - குளிந்த மதுரகவி இடம் : திருக்கோளூர், ஜூன் 12, 2022   கோவிட்டுக்கு பிறகு மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், வானமாமலை, திருக்குறுங்குடி திவ்ய சேதங்களை ஒரு சுற்றி சுற்றினேன். நவதிருப்பதிகள் என்று பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் சிலவற்றை சேவித்துவிட்டு வைகாசி விசாகம் - நம்மாழ்வார் திருநட்சத்திரம் அன்று ஆழ்வார் அருளால் ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு சுமார் 1200 வருடங்கள் முன் பிரபந்தம் கிடைத்த புளியமரத்தில் ’ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம்’ ( இரண்டாம் பதிப்பு ) புத்தகத்தை வைத்துச் சேவித்தது ஓர் அனுபவம். அன்று ஆழ்வாருடன் தீர்த்தவாரி அனுபவத்துக்கு பிறகு ஆழ்வாரின் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு பிரபந்தம் கிடைக்க காரணமான ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ அருளிய ’தேவு மற்று அறியேன்’ என்று ஆசாரியனே எல்லாம் என்று நமக்கு முதன்முதலில் காட்டிக்கொடுத்த மதுரகவி ஆழ்வார் அவதார ஸ்தலமான திருக்கோளூருக்கு அவசர அவசரமாக சென்ற போது மதியம் 12.30மணி. நடை சாத்தியிருந்தார்கள். மாலை இரயிலை விட்டாலும் பரவாயில்லை மதுரகவியைச் சேவிக்காமல் ஊருக்குத் திரும்பக் கூடாது என முடிவு செய்து என்று மாலையே மீண்டும் திரு

மாலைக் கதை(3) - சூடிக்கொடுத்த கோதையின் ஜடை

மாலைக் கதை(3) - கோதையின் ஜடை இடம் : ஸ்ரீவில்லிபுத்தூர் மே 12- 2019 ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லும் முன் ஸ்ரீகோதா ஸ்துதி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்வாமி தேசிகன் எப்படி அருளினார் என்ற கதை சுவாரசியமானது. வைகாசி பிரதோஷம். ஸ்வாமி தேசிகன் அன்று மௌன விருதம். மாலை விரதம் முடிந்த பின் ஆண்டாள் சந்நிதிக்கு சென்று மங்களாசாசனம் செய்யலாம் என்று எண்ணியிருந்தார். அச் சமயம் மங்கள வாத்தியங்கள் முழங்க அகத்துக்கு வெளியே வந்தார். அவர் வசிக்கும் தெரு வழியாக ஆண்டாள் வந்துகொண்டு இருந்தார். பொதுவாக ஆண்டாள் ஸ்வாமி தேசிகன் வசிக்கும் தெரு வழியாக புறப்பாடு கண்டருளும் வழக்கம் இல்லை. ஆனால் அன்று அவள் வழக்கமாகச் செல்லும் தெருவில் போக முடியாத சூழ்நிலை அதனால் ஸ்வாமி தேசிகன் திருமாளிகை நோக்கி ‘இன்றுயாம் வந்தோம்’ என்று வந்த போது. அர்ச்சா மூர்த்தியான ஆண்டாள் அவர் கண்களுக்கு ஆண்டாளாகவே தெரிய மௌன விரதத்தைக் கலைத்து ’குளிர் அருவி’ போலக் கோதா ஸ்துதி சாதிக்க அதைக் கேட்ட ஆண்டாள் மனது குளிர்ந்து இனி ஒவ்வொரு வருடமும் இந்த உற்சவத்தின் போது ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதி கேட்க பிரியப்பட்டாள். அன்று ஆண்டாள் சன்னதி வந்தடைந்த சமயம் கோதா ஸ

மாலைக் கதைகள்(2) - மாலையின் ரகசியம்

 மாலைக் கதைகள்(2) - மாலையின் ரகசியம் ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில் நற்பாமாலை; பூமாலை என்பதை கோதா, கோதை என்று பொருள் கொள்ளலாம். மாலையில் ஏதோ ரகசியம் இருக்கிறது. தன் சித்தத்தில் எப்போதும் விஷ்ணுவையே வைத்திருந்த விட்டுசித்தர் என்ற பெயர் கொண்ட பெரியாழ்வார் வேதங்களின் சாரத்தைக் கொண்டு பாண்டியன் கொண்டாடப் பரதத்துவத்தை நிலை நாட்டினார். அவரை வேத வித்து என்றே கூறலாம். அப்பேர்பட்டவர் தினமும் என்ன செய்தார் ? பெருமாளுக்கு நந்தவனம் அமைத்து, மாலைகளைத் தன் கையால் தொடுத்து அதை பெருமாளுக்கு சமர்ப்பித்தார். பெருமாளுக்கு பூமாலை கட்டி ஆசையும் ஆர்வத்துடன் சமர்பிப்பதைக் காட்டிலும் பெரிய மெடிடேஷன் இல்லை என்பதை உணர்த்தினார். பெருமாளுக்கு மாலைகளைக் கட்டி அதை சமர்ப்பிப்பது தான் வேதத்தின் சாரத்தைப் புரிந்துகொண்டதன் பயன். காரணம் பாகவதத்தில் இருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முதல் முதலில் மதுரா விஜயத்தின் போது ஊரைச் சுற்றி வருகிறார்கள். நல்ல துணியை உடுத்த எண்ணி ஒரு சலவைக்காரனிடம் கேட்க அவன் மறுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்ததாக ஒரு பூக்கடைக்குச் சென்று அங்கே ’சுதாமா’ என்ற ஒரு மாலை கட

மாலைக் கதைகள்( 1 ) - அவதாரிகை

மாலைக் கதைகள்(1) - அவதாரிகை முன் குறிப்பு: ’சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்ற பெயரில் ’மாலை’ ஒளிந்துகொண்டு இருக்கிறது. அந்த மாலையில் சில ரகசியங்கள் இருக்கிறது. அதை இன்று சிறு சிறு பதிவுகளாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முக்கிய குறிப்பு, இதில் என் சொந்த அனுபவம் சிலவற்றையும் கூறப்போகிறேன். வாசகர்கள் அதைப் பொருத்தருள வேண்டும். ’ஆண்டாள்’ என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாக சொல்லி வருகிறோம். ஆனால் ஆண்டாள் தன்னை ‘ஆண்டாள்’ என்று எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. பெரியாழ்வாரும் ஆண்டாள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. ஆண்டாள் தன்னை ‘சுரும்பார் குழல்கோதை’ (நாச்சியார் திருமொழி) என்றும் ‘பட்டர்பிரான்கோதை’ (திருப்பாவை) என்றும், தன்னை ’கோதை’ என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறாள். நந்தவனம் அமைத்து, தானே மலைகளை தொடுத்து தினமும் பூமாலை கைங்கரியம் செய்து வந்த பெரியாழ்வார் ‘கோதை’ என்ற பெயரை ஆண்டாளுக்குச் சூட்டினார். கோதை என்றால் ’மாலை’ என்று பொருள். கோதை சமஸ்கிருதச் சொல் கிடையாது. அதை சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘கோதா’ என்று வரும் (உதாரணம் - ஸ்வாமி தேசிகனின் கோதாஸ்துதி) ’கோதா’ என்றால் ‘நல் வார்த்தையை அருளிச்செய்தவ