ஸ்ரீரங்கத்து ஓவியங்கள் ஒரு நாள் சுஜாதா ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம் என்றார். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பத்து பன்னிரண்டு கதைகளுக்குக் குறிப்பு வைத்திருக்கிறேன் என்றும் சொன்னார். ஒவ்வொரு வாரமும், என்னைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அடுத்து எழுதப் போகிற கதையை முழுவதும் சொல்லிவிடுவார். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. கூடவே உண்மை கதையைச் சொல்லிவிட்டு அதை எப்படி ‘கதை’யாக மாற்றப் போகிறேன் என்று விளக்குவார். மற்றவர்களுக்கு உபத்திரம் கொடுக்காமல் கதை எழுதும் பாட வகுப்பாக அமைந்தது. அடுத்த வாரம் அவர் சொன்ன கதை எப்படி எழுத்தாக வருகிறது என்று பார்க்கப் பார்க்கப் பரவசம். அனந்த விகடனில் அவர் முடித்தபின், முன்பு வந்த சாவியில் வந்த ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் + ஆனந்த விகடனில் வந்த ஸ்ரீரங்கத்துக் கதைகளும் சேர்த்து புத்தகமாகப் போடும் பேச்சு வந்தது. ”சார் நடுவில் நிறைய ’ஸ்ரீரங்கத்து கதைகள் ‘எழுதியிருக்கிறீர்கள்” என்றேன் “என்ன இருக்கப் போகிறது... நான்கு அஞ்சு கதை இருக்குமா ?” என்றார் “அதுக்கும் மேலே பத்து, பன்னிரண்டு ...” என்று சொன்னபோது ஆச்சர