Skip to main content

Posts

Showing posts from July, 2025

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம்.

ராமாயணத்தில் ரகசியங்கள் - ஒரு உபன்யாச அனுபவம். ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்கள் ‘ராமாயணத்தில் ரகசியங்கள்’ (Secrets of Ramayana) என்று தொடர் சொற்பொழிவை பெங்களூருவில் பல பகுதிகளில் ஆங்கிலத்தில் நிகழ்த்தினார். நேற்று பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று கடைசி சொற்பொழிவைக் கேட்கச் சென்றிருந்தேன். ராமாயணத்தில் சரணாகதி என்ற தலைப்பில் சரணாகதிகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு சென்ற போது பத்துக்கு மேல் எண்ணுவதை விட்டுவிட்டு கடைசியில் விபீஷண சரணாகதியில் முடித்தார். வைணவத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பு உள்ளது. அதைப் படிப்பவர்கள் பெரும்பாலும் ரிடையர் ஆன/ஆகப் போகிறவர்கள். இன்றைய 'பைத்தான்’ இளைஞர்கள், பரமாத்மா பக்கம் வருவார்களா என்ற சந்தேகம் (கலந்த கவலை ) என்னைப் போலவே உங்களுக்கும் இருக்கலாம். ஆனால் நேற்று துஷ்யந்த அவர்களின் உபயனாசத்தை கேட்ட போது அவரை சுற்றி கல்லூரி படிக்கும் இளைஞர் பட்டாளம் கையில் பேப்பரும் பேனாவுமாக அவரை சுற்றிக் குழுமியிருந்தது, உற்சாகமாக ரசித்துக் கேட்டு நோட்ஸ் எடுத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் சோர்வில்லாமல் அனுபவித்தார்கள். நிச்சயம் நம் இளைய சமுதாயம் வருவார்கள் என்று நம்பிக்கை துள...

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்! உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம். ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார். பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? பல்லாண்டு, ஆண்டாளின் தகப்பனார், விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல். இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம். ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார். அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி...

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம் சென்ற வருடம் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கவலைப் படாதீர்கள். இந்தக் கட்டுரை அதைப் பற்றியது இல்லை. மொழிபெயர்த்த சமயம்  ‘பிபேக் டெப்ராய்’ (Bibek Debroy) என்ற பெயர் அடிபட்டது. (விவேக் டெப்ராய் என்றும் பாடம்). அவரைக் குறித்துத் தேடிய போது, கிட்டத்தட்ட எல்லா இதிகாசப் புராணங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். இவரை வியந்துகொண்டு இருந்த சமயத்திலேயே இந்தப் பூவுலகை விட்டு(நவம்பர் 2024) சென்றுவிட்டார். இவர் எழுதிய புத்தகங்களை வரிசையாகப் பார்த்த போது  ’Manmatha nath dutt - translator extraordinaire ’ ( மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர்) என்ற புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. கீழடியில் தோண்டி எடுத்த அழுக்கு புத்தகம் ஒன்றை அமேசான் அனுப்பியது. திருப்பி அனுப்பினேன். மேலும் ஆழமாகத் தோண்டி எடுத்த வேறொரு புத்தகத்தை அனுப்பினார்கள். திருப்பி அனுப்பும் விளையாட்டை நிறுத்துவிட்டு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  இந்தப் புத்தகம் சீரியஸ் ரீடிங் வகையைச் சார்ந்தது. நி...

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர்

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர் பொதுவாக வெப் சீரீஸ் வகையராக்களில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்ட வார்த்தை, கெட்ட காட்சிகள் மலிந்து கிடக்கும். சமீபத்தில் ’சோனி லிவ்’ல் குல்லக் ( உண்டியல் ) என்ற தொடரைப் பார்க்க நேரிட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நல்ல தொடரைப் பார்த்த நினைவில்லை. கதை என்று எதுவும் இல்லை. அது தான் இதன் USP. வெற்றி. ஓர் உண்டியலில் எப்படி சிறுகச் சிறுக சேமிப்போமோ அது போல அன்றாடம் நடக்கும் சிறு சந்தோஷமோ, பிரச்சனையோ, வருத்தமோ அதைச் சேமிக்கிறது இந்தத் தொடர். ஒரு சராசரி இந்திய மத்தியமர் குடும்பத்தின் அன்றாட வாழ்வை மிக யதார்த்தமாகவும், மனதை நக்காமல் ஜெஸ்ட் தொட்டு விட்டுப் போகும் காட்சிகளைக் கொண்ட தொடர். ஓர் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட மிஷ்ரா குடும்பத்தில் நாமும் இணைந்துவிடுகிறோம். இந்தக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், சண்டைகள், கேலிகள் என அனைத்தும் நம் வீடுகளில் நடப்பதைப் போலவே இருப்பதால், ஒரு புன்னகையுடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஹிந்தியில் வந்திருந்தாலும், தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். டப்பிங் என்று தெரியாத வண்ணம் மிக ...