Skip to main content

ரத்த நிலா உருவான கதை

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம்.

ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள்.

“உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?”  போன்ற கேள்விகளை கடந்து
தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு  பிளாஸ்டிக் !

ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது.

நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான்.

இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன்.

பால் பாக்கெட்
டூத் பிரஷ்
பேஸ்ட் டியூப்
டங்க் கிளீனர்
சோப்பு டப்பா
பக்கெட், மக்
சீப்பு
பீரீத்தி காபி பர்குலேட்டர்
வீட்டு குப்பை தொட்டி
குப்பை போடும் கவர்
சுவர் கடிகாரம்
பேனா
மொபைல் மற்றும் அதன் சட்டை
கவுத்து வைத்த தண்ணீர் கேன்
பார்சலில் வாங்கும் சாம்பார் சட்னி
பதினைந்து ரூபாய் ரயில் நீர்; பத்து ரூபாய் அம்மா குடிநீர்
(சில) ஸ்ட்க்கர் போட்டு.
பொம்மைகள்
பிளாஸ்டிக் பூ, மாலை
அடையார் ஆனந்த பவன் காபி கப்
காரில் இருக்கும் சாமி  உள்ளே மாமியின் தோடு
குமுதம் இலவசமாக தரும் ஷாம்பு பாக்கெட், அது விழாமல் இருக்க பிளாஸ்டிக் கவசம்
அலுவலக அடையாள அட்டை,
டெபிட், கிரெடிட் அட்டைகள்
விழா  நாற்காலிகள்.
உப்பு பாக்கெட், பருப்பு பாக்கெட்...
வீட்டு மின்சார சுவிட்ச்
துணி ஹாங்கர்
துணிகளை உலர்த்தும் கிளிப்
மவுஸ், கீபோர்ட்
சாவி கொத்து
டிவி ரிமோட்
வாழை இலைக்கு மாற்றாக பட்டர் பேப்பர்.
சாலையில் தோண்டும் இடங்களில் அதில் நாம் விழாமல் இருக்க சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் ரிப்பன்கள்
கட்சி கொடிகள்
கடைசியாக சரவணா ஸ்டோர்ஸ் !

பிளாஸ்டிக் இல்லாமல் வாழ அமேசான் காடுகளில் முயற்சிக்கலாம், ஆனால் அங்கே தலைமுடி தைலம் ஏதாவது பிளாஸ்டிக் பாட்டிலில் கிடைக்கும் அபாயம் இருக்கிறது. நம்மூர் காடுகளில்  பிளாஸ்டிக் புலி, சிங்கம் ஏதாவது வரலாம் ( சீனா தயாரிப்பு )

எனக்கு தெரிந்து பிளாஸ்டிக் இல்லாமல் வாழுவது ஸ்ரீரங்கம் நம் பெருமாளும், ஜீயர் ஸ்வாமிகளும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை பெருமாளுக்கு பூ கொண்டு போக மற்றும் பிரசாதம் வாங்கிக்கொண்டு வர கேரி பேக் இல்லாமல் சென்றால் அதுவே பெரிய கைங்கரியம்.

இந்த கட்டுரை எழுதும் போது தான் ‘ரத்த நிலா’ என்ற சிறுகதை எழுத தோன்றியது. 

Comments

  1. Great Revelation. Fairly exhaustive list.. I have stopped using/do not use.. at least 8 in the above list..

    ReplyDelete

Post a Comment