Skip to main content

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

 ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி



பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது.

ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்)

சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது.

ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள்.


முதல் ஸ்லோகத்தைப் படித்தேன்.

I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud, (ii) whose left flank is beautiful with a lady, (iii) who is ever-awake to protect His devotees, and (iv) whose "jnaana-mudraa posture" (a special positioning of fingers) endows us with special knowledge.

இப்படியே சமஸ்கிருத ஸ்லோகங்களைத் தாவிக் குதித்து ஆங்கில உரைநடையை ரென் & மார்டின் உதவி இல்லாமல் சுலபமாகப் படித்துக்கொண்டு போகலாம்.

கிட்டத்தட்டக் கடைசியில்

May (you) all remember me in (your) heart, and may the good read my work. May Sri Venkatanatha, the respectable preceptor and the lion of poetry and polemics, shower his grace!

இந்த நூலை அருளிய ஸ்ரீ உ.வே கோபாலசாரியாரின் ஜீன் அவரின் தம்பியின் பேத்தியான திருமதி மீரா ரமணனினுக்குள் எங்கோ ஒளிந்துகொண்டு இருந்திருக்க வேண்டும். அவரை நினைவு வைத்துக்கொண்டு நமக்கு இந்தப் புத்தகத்தை அருமையான வடிவமைப்புடன் கொடுத்து நமக்கு ஸ்வாமி தேசிகனின் அருள் கிடைக்க வழி வகுத்துள்ளார்.

அவருக்கு என் வந்தனங்களும் பாராட்டுக்களும் .

புத்தகம் குறித்த மேல் விவரங்களுக்கு ramananmeera@gmail.com அனுப்புங்கள்.

- சுஜாதா தேசிகன்
14.2.2024



Comments

  1. அதனுடைய பொருளையும் தமிழில் தந்திருக்கலாம்

    ReplyDelete

Post a Comment