Skip to main content

இரண்டாம் பதிப்பு - பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022

பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022



பணம் அனுப்பிவிட்டேன், எனக்கு எப்போது Tracking Number  வரும் ? 

பத்து நிமிடம் முன் பணம் அனுப்பியவர்களுக்கு கூட Tracking Number அனுப்பிவிட்டோம்.  இனி பணம் அனுப்புகிறவர்களுக்கு டிராக்கிங் நம்பர் அன்றே அனுப்பப்படும். 

எனக்கு டிராக்கிங் நம்பர் வரவில்லையே ? 

கீழே கமெண்ட் அல்லது rdmctrust@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்பவும். 

சரி, ஏன் இந்த தாமதம் ? 

புத்தகம் அறிவிப்பு வந்தவுடன் பலர் புக் செய்ததால் எல்லாவற்றையும் வங்கி கணக்கில் சரி பார்த்து, டிராக்கிங் நம்பர் அனுப்ப தாமதம் ஆகிவிட்டது. 

எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்க திட்டம் ? 

ஆயிரம்  புத்தகங்கள் அச்சடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அறிவித்த சில நாட்களில் பலர் புக் செய்த்தால்,  கூடுதலாக  புத்தகம் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.  தற்போது 1500 புத்தகங்கள் அச்சடிக்கிறோம். 

இரண்டு மாதம் கழித்து புத்தகம் கிடைக்குமா ? 

புத்தகம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்த பதிப்புக்கு காத்திருக்க வேண்டும். 

சரி, பணம் அனுப்பிவிட்டேன், டிராக்கிங் நம்பர் கிடைத்துவிட்டது, புத்தகம் எப்போது கைக்கு வரும்  ?

தற்சமயம், புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, தைத்து, பைண்டிங் செய்ய படுகிறது. இந்த மாதம் இறுதியில் மூன்று புத்தகங்களும் ரெடியாகிவிடும். ( பார்க்க படம் ) 

ஜூன் முதல் வாரத்திலிருந்து அனுப்பப்படும். 

- சுஜாதா தேசிகன்

17.05.2022

Comments