Skip to main content

’பயிலும் சுடர் ஒளி’ - உள்ளர்த்தம்

 ’பயிலும் சுடர் ஒளி’ - உள்ளர்த்தம்

அடியார் ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் கூப்பிட்டார்.

“சாமி எனக்கு புத்தகம் இன்னும் வரவில்லை. எப்போது வரும்?”

”அடுத்த வாரம் அனுப்புவோம் அதற்கும் அடுத்த வாரம் உங்கள் கைக்கு கிடைக்கும்” என்றேன்.

“சரிங்க” என்று சொன்னவர் “எங்கள் ஊரில்

இருப்பவர்களுக்கு மொத்தமாக அனுப்பிவிடுங்கள். நான் என் டூவீலரில் கொண்டு போய் கொடுக்கிறேன்” என்றார்

“உங்களுக்கு கஷ்டமாக இருக்குமே?” என்றேன்.

அதற்கு அவர் “சாமி இதில என்ன கஷ்டம். இதனால் பல அடியார்களை தரிசிக்கும் பாக்கியம் அடியேனுக்கு கிடைக்கும்” என்றார்

நம்மாழ்வாரின்

பயிலும் சுடர் ஒளி மூர்த்தியை,* பங்கயக் கண்ணனை*
பயில இனிய* நம் பாற்கடல்-சேர்ந்த பரமனை**
பயிலும் திரு உடையார்* எவரேலும், அவர் கண்டீர்*
பயிலும் பிறப்பிடைதோறு* எம்மை ஆளும் பரமரே

என்ற பாசுரத்தின் உள்ளர்த்தம்

நமக்காகத் திருப்பாற் கடலில் துயில் கொண்டிருக்கும் எம்பிரானை வணங்கும் அடியார்கள் who ever they may be, they are my masters, through seven lives

என்கிறார் நம்மாழ்வார்

- சுஜாதா தேசிகன்

28.05.2022

Comments

  1. Such offers can come only from blessed ‘adiyārs’! Fallin at their feet!

    ReplyDelete

Post a Comment