சா·ப்ட்வேர் என்ஞ்சினியருக்கு எல்லாம் தெரியும் என்ற சிலர் நினைக்கிறார்கள். அது தவறு. உதாரணத்துக்கு என் மகளை தூங்க வைக்க எனக்கு கதை சொல்ல தெரியவில்லை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் அவளுக்கு கோபம் வருகிறது. தினமும் ராத்திரி பெரும் பாடாக இருக்கிறது. சொல்லும் கதையில் சிங்கம், புலி எல்லாம் கட்டாயம் வரவேண்டும். முக்கியமாக அவள் கேட்கும் பல கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும்.
என் பாட்டி எனக்கு நிறைய கதை சொல்லியிருக்காள் - ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரா, கர்ணன், கஜேந்திர மேட்சம் போன்றவை. சொன்ன கதையை திருப்பி சொன்னால் முகம் சுளிக்காமல் கேட்பேன். என் மகள் அப்படியில்லை அவளுக்கு தினமும் ஒரு புது கதை தேவைப்படுகிறது. போன ஞாயிற்றுக்கிழமை 'லேண்ட் மார்க்' புத்தக கடைக்கு போய் 'பெட் டைம் ஸ்டோரிஸ்' புத்தகம் வாங்கினேன்.
முதல் கதையை படித்து என் மகளுக்கு செல்ல ஆரம்பித்தேன்...
"ஒரு ஊர்ல ரெண்டு பேர் இருந்தா. ஒர்த்தர் பேர் பூபி, இன்னொருத்தர் பேர் பாபி!". அவா dwarfs ரொம்ப குள்ளமா இருப்பா..."
"அப்பா, அவா எவ்வளவு குள்ளமா இருப்பா?"
"ரொம்ப குள்ளமா... உன்னோடா குள்ளமா... உன்னோட பென்சில் சைஸ்க்கு இருப்பா.பூபி உன்னமாதிரிதான். அதுக்கு ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். அது பாபிக்கிட்ட எனக்கு ஸ்வீட் செஞ்சிதான்னு கேட்டுது. பாபி ஸ்வீட்டுக்கு அரிசி, வெல்லம், முந்திரிபருப்பு, பால் எல்லாம் வேன்னும் போய், வாங்கிண்டு வா சொல்லித்து. உடனே பூபி கடைக்கு போய் அரிசி, வெல்லம், முந்திரிபருப்பு எல்லாம் வங்கிண்டு வந்தது"
"அப்பா பாலை விட்டுட்டையே"
"மறந்துட்டேனே, பாலையும் வாங்கிண்டு வந்தது. பாபி பூபிகிட்டே சொல்லித்து, அடுப்பு பத்தவைக்கனும் அதுக்கு விறகு வேண்னும் போய் மரத்தை வெட்டி எடுத்துண்டு வா"
"ஏம்பா அவா கிட்ட கியாஸ் இல்லையா"
"அவா ஒரு காட்டுல இருக்கா இல்லையா அதனால அங்கே கியாஸ் கிடையாது. பூபி பக்கத்துல காட்டுல போய் மரத்த வெட்ட ஆரம்பிச்சிது. அப்போ அந்த சத்ததை கேட்டு ஒரு புலி அங்க வந்தது...."
"zooல பார்த்தோமே அதேமாதிரியா ?"
"கரெக்ட் அதே மாதிரிதான்.புலியை பார்த்து பூபி பயந்துபோயிடுத்து. புலி, பூபிக்கிட்டே இது என்னோட காடு, என் கிட்டே கேக்காம ஏன் மரத்தை வெட்டினன்னு கேட்டுது. உடனே பூபி அடுப்பு பத்த வைக்க விறகு வேணும்னு சொல்லித்து. அடுப்பு பத்த வெச்சு என்ன பண்ண போறன்னு கேட்டுது புலி. பாபியும் நானும் சேர்ந்து ஸ்வீட் பண்ணப் போறான்னு சொல்லித்து. உடனே புலி நான் மத்தியானம் வருவேன் எனக்கு ஸ்வீட் எடித்து வைன்னு சொல்லித்து. அதுக்கென்ன தாராளமா வா உனக்கும் வெக்கிறேன்னு சொல்லித்து பூபி"
"ம்ம் அப்பறம் என்னாச்சு"
"பூபியும் பாபியும் சேர்ந்து ஸ்வீட் பண்ண ஆரம்பிச்சிது. ஸ்வீட் பண்ண பண்ண ரொம்ப வாசனையா இருந்தது. பூபியும் பாபியும் ஸ்வீட்டை கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சுது. கடைசியில பார்த்தா எல்லாம் காலியாடுத்து"
"ம்ம்.அப்புறம்"
"அமாம். அப்போ புலி பூபி-பாபி வீட்டுக்கு வந்தது"
"ம்ம்"
"புலி எங்கே என்னோட ஷேர்ன்னு கேட்டுட்டுது"
"ம்"
"பூபிக்கும் பாபிக்கும் என்ன செயற்துன்னு தெரியலை. பூபிக்கும் பாபிக்கும் ஒரே பயம்."
".. "
என் மகள் தூங்கிவிட்டாள். மீதி கதையை நாளை சொல்கிறேன். குட்நைட்
Old Comments from my previous blog.
Post by Meenaks
அடப்பாவிகளா, இந்த மாதிரி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க?
Wed, Jul 28 2004 1:55
Post by Haranprasanna
சே.. இதைப் படிக்கிறதுக்கு முன்னாடியே தூங்கியிருக்கலாம்.
Thu, Jul 29 2004 12:57
Post by Mathy Kandasamy
grrrrrrr.....
Thu, Jul 29 2004 10:57
Post by பத்ரி
கதை முக்கியமில்லை. குழந்தையோடு பேசும் அந்த அனுபவம்தான் முக்கியம். மேலே மறுமொழி கொடுத்த யாருக்கும் அந்த அனுபவமில்லையல்லவா! என் பெண்ணுக்கு நான் கதை சொல்வது கூட இப்படித்தான் போகும்.
Fri, Jul 30 2004 3:57
Post by Eelanathan
எனக்கு நள தமயந்தி படத்தில் உள வளர்ச்சி குறைந்த பையனுக்கு அவனது ரசனைக்கு ஏற்றமாதிரி கதை சொல்வாரே அந்த ஞாபகம் வருகின்றது
Fri, Jul 30 2004 4:59
Post by Haranprasanna
குழந்தைகளை விட என் மனைவிதான் அதிகம் இரசித்தாள். :P
Fri, Jul 30 2004 6:59
Post by Haranprasanna
பத்ரி, கதையைப் பற்றிச் சொல்லவில்லை. அனுபவம் சரியாக, இன்னும் விரிவாக, அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். எங்களுக்கு அனுபமில்லைன்னு எப்படி முடிவு பண்ணீங்கன்னு தெரியலை. எங்க அண்ணன் குழந்தைங்க, அக்கா குழந்தைங்களுக்கெல்லாம் நாங்க கதை சொல்லமாட்டோமா, அவங்க கேக்க மாட்டாங்களா? நான் ஆன்மீகத்தையும் சயன்ஸையும் கலந்துகட்டி கதை சொல்லியிருக்கிறேன்.
Fri, Jul 30 2004 6:59
Post by Geetha
¸¨¾Â¢ý ÓÊ× ±ýÉ?
Mon, Aug 9 2004 3:56
Post by Geetha
கதையின் முடிவு என்ன?
Mon, Aug 9 2004 4:57
Post by Ibrahimshah
you should be very proud of your daughter.You daughter might be knowing the proverb "Pooli pachithalum sweet thinathu" That is the reason She dont want to hear further story... ha ha ha ha
Tue, Aug 10 2004 3:56
Post by அன்பு
இப்பல்லாம் கதையில என்ன கதைபாத்திரங்கள் வரணும், சொன்னதையே திரும்ப சொல்லக்கூடாது போன்ற விதிமுறைகள்ளாம் சொல்ல ஆரம்பிச்சுட்டதால ரொம்பவும் திணரத்தான் வேண்டியிருக்குது. அதிலும் உங்களுக்கே அந்தபாடுன்னா நம்ப கதையை கேட்கவே வேணாம்.!?
எங்க வீட்டிலயும் இதே கதைதான் நடக்குது. ஒரு 3 வயதுவரை கதைன்னு என்ன சொன்னாலும் கேட்டுட்டு தூங்கிடுவாங்க.
Mon, Oct 18 2004 5:19
Comments
Post a Comment