ஆழ்வார் + ஆசாரியன் ஆசீர்வாதம் !
கருமையான மேகங்கள் சூழ சில மணி நேரம் முன் பெங்களூரில் பலத்த மழை. எங்கும் குளுமை பரவ அப்போது எனக்கு சில படங்கள் வந்தது.
"நின்ற ஆதிப்பிரான் நிற்க, மற்றைத் தெய்வம் நாடுதிரே" என்ற சந்நிதியிலிருந்து வந்த படங்கள் அவை.
திருவாய்மொழி திருநாள் ஏற்படுத்திய திருமங்கை மன்னன் காலையில் ஆசீர்வதிக்க ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம்மாழ்வார் இன்று மாலை புத்தகத்தை ஆசீர்வதித்தார்.
இந்த கோவிட் சமயத்திலும் மருத்துவர்களாக இருக்கும் ஸ்ரீ உ.வே கோகுல் தம்பதிகளாக சென்று ஞானபிரான், பொலிந்த நின்ற பிரான், ஆதிப்பிரான் சந்நிதிகளிலும், நம்மாழ்வார் மூலவர், உற்சவர் திருவடிகளிலிருந்தும், ஆதிக்ஷேனாக விளங்கும் உறங்காப்புளி பொந்தில் பதினாறு வருடங்கள் நம்மாழ்வார் தவம் இருந்து நமக்கு நாதமுனிகள் மூலம் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் கொடுத்த இடத்திலும் புத்தகம் ஆசீர்வாதம் பெற்றது.
அதே சமயம் எனக்கு சேலையூர் அஹோபில மடத்திலிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு. ஸ்ரீமத் அழகிய சிங்கர் இப்போது தான் சென்னை ஏளினார், தபால்களை பார்த்த போது உங்கள் புத்தகம் வந்திருந்தது. ஸ்ரீமத் அழகிய சிங்கர் புத்தகத்தை பார்த்து மிகவும் நன்றாக இருக்கிறது அவர் அட்ரஸ் அதில் இல்லை தொலைப்பேசியில் கூப்பிட்டு இதை சொல்ல சொன்னார் என்றார்.
அடியேன் ஆசாரியனிடமிருந்து இந்த வார்த்தையும், உறங்காப்புளி மரத்துடன் புத்தகத்தைப் பார்ப்பது ஒரு விதமான குளுமையான அனுபவத்தைக் கொடுக்கிறது.
- சுஜாதா தேசிகன்
23-04-2021
மழையுடன் கூடிய இனிய மாலை
வேறென்ன வேணும்
ReplyDeleteஉழைப்பில் பட்ட ஆயாசம் ஆசாரியன் கடாஷத்தால் பனி போல் விலகி மனம் குளிர்ந்திருக்கும் .மகிழ்ச்சி
Excellent Desikan. Sriman Narayanan Kadaksham umakkum ungalai serndhavargalukkum arulattum. Ungal seria pani valarga, vaazhga, Acharyan kirubai eppovum and anaivarukkum siddhikkattum
ReplyDeleteKindly let me know how i can get a copy of this book
ReplyDeleteDear Sundar, pl send a mail to rdmctrust@gmail.com and we will getback if there are copies available.
Delete