Skip to main content

வேதாளம்'s Day Out

காலை பத்து மணிக்கு , வேதாளம் விக்கிரமாதித்தனை எழுப்பியது.
"நானும் உன்னோட இன்னிக்கு ஆபிஸ் வரேன்" என்றது.
அதிர்ச்சியில் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் கலைந்தது "என்ன நீயா ? No way" என்றன்.
"நான் வ-ரே-ன்" என்று அழுத்தமாக சொல்லியது வேதாளம்.


ஜீன்ஸ்-T-Shirt- Nike ஷூவுடன், காலை பதினோறு மணிக்கு தூக்கக்கலகத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளதுடன் ஆபிஸுக்கு சென்றான். கதவிற்கு பக்கத்தில் தன் ஐடி கார்டை தேய்த்து, "குவிக்" சத்தத்திற்கு பிறகு உள்ளே சென்றான். ஏசி காற்று மேல் அடித்தது. வேதாளம் சினிங்கியது. "இது என்ன நாய் செயின் மாதிரி" என்றது வேதாளம். "நக்கலா ? இது தான் ஐடி கார்ட்" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் "என்ன எவ்வளவு லேட்டா ஆபிஸ் போறேயே" என்றது .விக்கிரமாதித்தன் பெருமையாக "you know we have flexi-timings" என்றான்.


விக்கிரமாதித்தன் தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் தோளின் மேல் வேதாளம் உட்கார்ந்தது. பக்கத்து இருக்கைகள் காலியாக இருந்தது. தூரத்தில் யாரோ இரண்டு மூன்று பேர் கண்ணுக்கு தெரிந்தார்கள்... பிசிக்கு இடது பக்கத்தில் இருந்த பலகையில் விக்கிரமாதித்தனுக்கு வந்த "பர்த்டே கார்டு" பின்னால் குத்தப்பட்டு இருந்தது. பக்கத்தில் பீர் ஒரு கப்பில் நிறம்பி வழிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்று ஒட்டபட்டிருந்தது அதற்கு மேல் ஃசாப்ட்வேர் பற்றி ஒரு அசட்டு ஜோக். பிசிக்கு வலது பக்கத்தில் கறைபடிந்த காப்பி மக்.


விக்கிரமாதித்தன் பிசியின் மேல் ஒரு சின்ன பொம்மை இருந்தது "With love .." என்று கீழே எதோ பெயர் போடப்பட்டிருந்தது. விக்கிரமாதித்தன் பிசியை சுற்றி "Post-it" மஞ்சள் காகிதத்தால் பார்டர் போல் ஒட்டப்பட்டிருந்தது. வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை "உங்களுடைய ஆபிஸ் Paper-less ஆபிஸ்" கிடையாதா ? என்றது. விக்கிரமாதித்தன் சிரித்துக்கொண்டு "இதெல்லாம் ஒட்டினாதான் நான் ரொம்ப பிஸி என்று மற்றவர்களுக்கு தெரியும்" என்றான். விக்கிரமாதித்தன், தன்னிடைய பிசியை Boot செய்தான். "சரி, பிசி boot ஆவதற்குள் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்துவிடலாம்" என்று மக்குடன் பேண்டரி பக்கம் போனான்.


மக்கை அலம்பாமல் அப்படியே வெண்டிங் மிஷினில் காப்பியை நிறப்பிக்கொண்டு, தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தான் விக்கிரமாதித்தன். சிலர் வந்திருந்தார்கள். காப்பியை உறுஞ்சிக்கொண்டே. " hai guys, how do you do ?" என்றான் விக்கிரமாதித்தன்.
"Great, ya, you know y'day we went out... we should go together sometime da" என்றான் பக்கத்தில் இருந்தவன். பக்கத்தில் இருந்த பெண் தனக்கு தன் மேனேஜரிடமிருந்து வந்திருந்த ஈ-மெயிலை படித்து "balls to him" என்றாள். எல்லோரும் சிரித்தார்கள். வேதாளம் அதிர்ச்சியில் பார்த்தது. வேதாளத்தின் டிஜிடல் கைகடிகாரத்தில் சரியாக 11:17am என்று காட்டியது. விக்கிரமாதிதன் தன் பிசியில் தனக்கு வந்திருந்த ஈ-மெயிலை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். முதல் ஈ-மெயில் அண்டார்டிக்காவில் ஒரு குழந்தை Madras-eyeயால் அவதிப்படுவதாகவும், இந்த மெயிலை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் Fwd செய்யும்மாறு வேண்டுகோள் அதில் இருந்தது. விக்கிரமாதித்தன் அந்த ஈ-மெயிலை குப்பையில் போட்டான்.


ஹெட் போனை எடுத்து மாட்டிக்கொண்டான் தலையை ஆட்டிக்கொண்டே, வேலை சம்பந்தமான ஈ-மெயிலை படிக்க ஆரம்பித்தான்.
வேதாளம் "என்ன கேட்க்குற" என்றது. ஹெட் போனை கழட்டி வேதாளத்தின் காதில் வைத்தான் அது "தேவுடா தேவுடா" என்றது.


அதற்குள் பக்கத்தில் இருந்த பெண் "Oh-Shit, I have a delivery today" என்றாள். வேதாளம் பதறியது "இன்னிக்கு டெலிவரியை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்திருக்கா என்ன தொழில் பக்தி" என்றது. "சும்மா இரு, டெலிவரி என்றால் இது அந்த டெலிவரி இல்லை, இது ஃசாப்ட்வேர் டெலிவரி" என்று விளக்கினான் விக்கிரமாதித்தன்.


"You know today, i have not received a single personal mail" என்று வருத்தப்பட்டுக்கொண்டான் விக்கிரமாதித்தன். பக்கத்தில் உள்ள பெண் அதை கேட்டு அவனுக்கு இரண்டு மெயிலை fwd செய்தாள். "Oh - Great-ya" என்று அவள் அனுப்பிய சர்த்தார்ஜி ஜோக்கை மூன்றாவது முறையாக படித்து சிரித்தான். தன் நண்பர்களுக்கு அதை "fwd" செய்தான். வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கிச்சா எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான் அவன் யாருடனும் பேசவில்லை.


"ok-ya, i have lots of work" என்றான் விக்கிரமாதித்தன். "can we go for a coffee" என்றாள் அந்தப் பெண். எல்லோரும் எழுந்தார்கள். விக்கிரமாதித்தன் 'Screen-Saver'ரை ஆன் செய்தான் அதில் "I am busy...." என்று ஓடத்தொடங்கியது.


எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள். காப்பி உருஞ்சிக்கொண்டே

"you-know ya, rajesh who went to SCT is now getting 3K more"
"ya he is in J2EE, he fwd me a joke from his office email id"
போன்ற பேச்சுக்கள் முடிந்தவுடன் திரும்பவும் இருக்கைக்கு வந்தார்கள்.


வேதாளம் மணியை பார்த்தது. 12:45pm என்று காமித்தது. விக்கிரமாதித்தன் ஒரு மெயிலை திறந்தான். அதில் அவன் மேனேஜர்
"Can you give me your estimate for ... " என்று ஏதோ கேட்டிருந்தார்.
"I have to investigate further to give any meaning full estimates.... so ...atleast i need... "என்று ரிப்ளை செய்தான்.
விக்கிரமாதித்தன் பக்கத்தில் இருந்த கிச்சா தொடர்ந்து எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான்.


மணி 1:00pm. "ok-ya- lets grab some thing quickly. I have lots of work to do" என்றாள் அந்த பெண். எல்லோரும் பெல்லடிதார்போல் எழுந்தார்கள். லஞ்ச் முடித்து திரும்பியவுடன் வேதாளம் மணியை பார்த்தது 2:34pm என்று காமித்தது. "oh! its late for the meeting" என்று சிலர் எழுதுப்போனார்கள். சிலர் இண்டர்நெட்டில் இன்றைய தலைப்புச்செய்தியை பார்த்தார்கள், அந்த பெண் லைப்ரரிக்கு போனாள். கிச்சா தொடர்ந்து சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான். கிச்சா போல் சிலர் இருப்பதால் தான் ஃசாப்ட்வேர் தொழில் நடக்கிறது என்று வேதாளம் நினைத்துக்கொண்டது.


மீட்டிங்கில் விக்கிரமாதித்தன் தன் பாஸ்சை பேர் சொல்லி கூப்பிட்டது வேதாளத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. விக்கிரமாதித்தன் தான் செய்யும் வேலைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்றான். எவ்வளவு என்று செல்லவில்லை. எல்லோரும் ஒரு மணி நேரம் கழித்து, அடுத்த வியாழன் 3:00pm திரும்பவும் மீட்டிங் என்று முடிவி செய்தார்கள். பின்னர் விக்கிரமாதித்தன் அந்த டாப்பிக்கை ஆரம்பித்தான். அது "டீம் லஞ்" எல்லோரும் ஒரு மணதாக வரும் வியாழன் அன்று ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று முடிவு செய்தார்கள். இதனால் அவர்களுடைய மீட்டிங்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றி அமைத்தார்கள். வேதாளம் மணியை பார்த்தது 4:17pm என்றது.


மீட்டிங்கை விட்டு வேளியே வந்த விக்கிரமாதித்தன். "It is hectic ya" என்று எல்லோரையும் காப்பிக்கு அழைத்தான். எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள்.
திரும்பவும் வந்த போது விக்கிரமாதித்தனுக்கு அவன் நண்பனிடமிருந்து மெயில் வந்திருந்தது. அதை படித்து ரிப்ளை செய்தான்.


கிச்சா மட்டும் சிரியஸாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

naan ippo busya ..irukken la... not fair....
naane... apparam... call panren saiyaa......

....hows is the chick you told last time....
what else da.....hows work?
call me on my mobile after 7:30pm ok vaa ....
என்று எதோ எழுதி அனுப்பினான். அனுப்பியவுடன் அவனுக்கு ஒரு போன் வந்தது.

"ya. its me. why did you not call me y'day?"
"...."
"oh!, we are also going on thursday.... how is the food out there..."
"...."
"great....how is your new mobile"
"..."
"oh! man......
"...."

வேதாளத்தின் மூஞ்சியில் கலவரம் தெரிந்தது, அது போனை கட்செய்தது. விக்கிரமாதித்தன் கோபமாக அதை பார்த்தான். மணி இப்போது 5:15 என்றது. அவனுக்கு மற்றொரு மெயில் வந்திருந்தது.



 


 


கிச்சா படித்து முடித்து எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.வேதாளம் எட்டிப்பார்த்து அதை படித்தது. படித்தவுடன், தலை லைட்டாக வலித்தது. பாக்கெட்டில் இருந்த சிகப்பு நிற கிரோசின் பெயின் கில்லரை அவசரமாக எடுத்துப் போட்டுக்கொண்டது.


மணி 6:30pm, "gotta go baby... otherwise the traffic is goin to get me crazy" என்று கூறிய விக்கிரமாதித்தன், வேதாளத்தை பார்த்தான். வேதாளம் மண்டியிட்டு கடவுளிடம் பிராத்தனை செய்துக்கொண்டிருந்தது. விக்கிரமாதித்தன் "என்ன பிராத்தனை செய்கிறாய்" என்று கேட்டான். "அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருத்தால் நான் ஒரு ஃசாப்ட்வேர் என்ஜினியர் ஆகவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்" என்றது.


விக்கிரமாதித்தனுக்கு தன்னுடைய ஃசாப்ட்வேர் அனுபவத்தில் மேலும் ஒரு நாள் கூடியது.



Old Comments from my previous Blog


தேசிகன், சூப்ப்ப்பர்ர்ர்ர்..


அப்ப, software கம்பேனிகளில் எல்லாம் இந்தக் கூத்துதான் நடக்கிறதா? :-)


By icarus, at Wed May 11, 11:30:07 AM IST  


நல்லா இருக்கு, நல்லா இருக்கு.


அது சரி, இன்னிக்கு ஏன் வேதாளம் உங்க ஆஃபீசுக்கு வரலை? :P


By க்ருபா, at Wed May 11, 11:55:21 AM IST  


தேசி, நல்ல self-mockery...ஆனா, ப.கே.சம்மந்தம் பட பாட்டு காதில கேக்குது..


:))


By ரவியா, at Wed May 11, 12:37:01 PM IST  


தேசிகன் உண்மையெல்லாம் வெளியே சொல்ல கூடாது.


-ஸ்ரீனிவாசன்


By Srinivasan, at Wed May 11, 01:14:20 PM IST  


தேசிகன், இது உங்களுக்கே நியாயமா இருக்கா? தொழில் ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. உங்களுக்கு டைட் டெட்லைன்ல ஒரு பிராஜக்ட் கிடச்சி பிராஜெக்ட் முடியும் வரை இரவும் பகலும் கண் முழித்து வாழ சபிக்கிறேன்.


By அல்வாசிட்டி.விஜய், at Wed May 11, 02:11:53 PM IST  


அற்புதமான கதையமைப்பு...


நிகழ்கால வாழ்க்கைமுறையை எடுத்துக்காட்ட ஒரு அருமையான சூழல்.


By Ram.C, at Wed May 11, 02:21:11 PM IST  


அல்வாவை நான் வழிமொழிகிறேன்


By ரவியா, at Wed May 11, 02:39:10 PM IST  


You peeping Tom...When did you visit my cube to record all these events? :).


By Raj Chandra, at Wed May 11, 07:04:26 PM IST  


வேடிக்கைகள் தவிர்த்து...மொத்தமாக சுஜாதா நடை எழுத்திலிருந்து விடுபட்டு, உங்கள் சொந்த நடையை அமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். தொடரவும்.


By Raj Chandra, at Wed May 11, 07:09:06 PM IST  


//வேதாளம் மண்டியிட்டு கடவுளிடம் பிராத்தனை செய்துக்கொண்டிருந்தது. விக்கிரமாதித்தன் "என்ன பிராத்தனை செய்கிறாய்" என்று கேட்டான். "அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருத்தால் நான் ஒரு ஃசாப்ட்வேர் என்ஜினியர் ஆகவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்" என்றது.//


:)) :)) சாஃப்ட்வேர் வேலையில் இருக்கும் என் நண்பர்களிடம் இதையேதான் சொல்வோம். அதையேதான் எழுதியிருக்கிறீர்கள். மெயில் பார்க்காமல் அவர்களுக்கு வேலையே ஓடாதாம்!


நல்லா இருங்கடே!


அன்புடன்
பிரசன்னா


By Haranprasanna, at Wed May 11, 08:05:19 PM IST  


என்னைப்போல் ஒருவன் மாதிரி


நம்மைப்போல் பலர்???


தலைப்புச்செய்திகளோட நிறுத்தீருவீகளா? தமிழ்மணமெல்லாம் பாக்குறதில்லையா?


நல்ல நடை, படிப்பதற்கு அறுமையாக இருந்தது.


By Halwacity.Shummy, at Thu May 12, 09:25:05 AM IST  


பின்னுட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி.


Some quotes..


I love deadlines. I especially love the whooshing sound they make as they pass by.
- Said by one of the central characters in the “Hitchhiker’s Guide to the Galaxy” (Written by Douglas Adams)


I love work as long as it does not take too much of my time.
- Dilbert (created by Scott Adams)


By Desikan, at Thu May 12, 12:51:08 PM IST  


Dear Desikan,
Good article on reality of software-pro's. Awesome, we kill time such a way that no one can understand.
I remember Sujatha's comment about Consultant's.
"Consultant is one who borrows your Watch and tell you the time and charge you for that!!!"
You know we knowledge workers need to have frequent breaks to cool off :)


Regards,
Subbu


By Anonymous, at Thu May 12, 01:18:22 PM IST  


Super Desikan...enjoyed a lot....


By Viji, at Thu May 12, 02:09:08 PM IST  


Ultimate…aaanal vikramadhithanukku idhu thinamum saathiyamaagiradhaa enna.
if yes, bore adikalyaa?


By Anonymous, at Fri May 13, 11:19:43 AM IST  


He He Ipdi ellarukkum theriyraa maadhiri pottu kuduthuteengale :)


By Uma, at Fri May 13, 08:30:14 PM IST  


vanakkam desigan,


Good morning. I have visited your blogg and congrats for the great work.


Sathisz
Bangalore


By Anonymous, at Mon May 16, 09:23:06 AM IST  


கலக்கிடீங்க அன்னாச்சி கலக்கீடீங்க!!
ஆனாலும் நீங்க ரொம்பத்தான் உண்மைய சொல்றீங்க!!


அன்புடன்
ராம், பேங்களூர்
ramstvl@gmail.com


By Anonymous, at Thu May 19, 03:16:21 PM IST  


கடைசிவரைக்கும் கிச்சா என்னப் பண்ணிட்டு இருந்தார்னு சொல்லவே இல்லீங்கலலே


By ப்ரியன், at Sat Jun 11, 11:52:56 AM IST  


ப்ரியன்,
கிச்சா என்ன பண்ணிகிட்டு இருந்தார் என்று அந்த லிங்க்கை கிளிக் செய்து பார்க்கவும்.
http://desikann.blogspot.com/2005/04/blog-post_09.html#111302388131682504
அன்புடன்,
தேசிகன்


 

Comments