Skip to main content

இராமானுசன் அடி பூமன்னவே - கிளம்பலாம் வாருங்கள் !



அன்பான வாசகர்களே! 

இன்றைக்கு சுமார் 1200 வருடங்கள் பின்னோக்கி ஒரு வித்தியாசமான பிரயாணத்துக்கு உங்களை அழைக்கிறேன்.

இந்தப் புண்ணிய பூமியில் பல கோயில்களுக்குச் சென்று, 'கிடந்த, இருந்த, நின்ற, நடந்த'  பெருமாள்களைத் தரிசிக்க இருக்கிறோம்.புண்ணிய நதிகளில் நீராடி, பல ஆசாரியர்களுடன் பழக இருக்கிறோம். இயற்கையை ரசிக்கப் போகிறோம் 

இந்தப் பிரயாணம் பல நாள், மாதங்கள், ஏன் பல வருடங்கள் கூட ஆகலாம். செல்லும் இடங்களில் தங்க வேண்டியிருக்கலாம். அதனால் பிரயாணத்துக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொள்வது உசிதம். அதிகம் சுமக்க வேண்டாம், கையில் ஆழ்வார்களின் அருளிச் செயல் புத்தகமும் மனத்தில் ராமானுஜரும் இருந்தால் போதும். கிளம்பலாம். உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் கூட்டமாக வரலாம். கவலை இல்லை.

நாளை ஆடிப் பூரம் ! எல்லோரும் வீரநாராயணப்  புரத்துக்கு வந்துவிடுங்கள். பயணத்தை அங்கிருந்து துவங்கலாம்.
 
சொல்ல மறந்துவிட்டேனே...நம் பயணம் முழுவதும் நம்முடன் ஸ்ரீராமானுஜரும் வரப் போகிறார்! 

- சுஜாதா தேசிகன் 
23-07-2020

Comments

  1. நமஸ்கராம் ...

    பொறுமையாக மனதில் நிறுத்தி படிக்க சுவாமி ஸ்ரீராமானுஜர் அருள் புரிய வேணும் ...


    ஆச்சாரியார் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  2. புண்ணிய பயணத்தில் உங்கள் பின் அன்புடன் பயணிக்கிறோம்.மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இன்னொ திருவாடிப்பூரம் என்று நாளைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
  4. ஆரம்பமே அமர்க்களம். தயாராகி விட்டோம் இனிய பயணத்துக்கு.

    ReplyDelete
  5. கிளம்பியாச்சு

    ReplyDelete
  6. உய்ய ஒரே வழி
    நம்மிராமாநுஜன் திருவடி

    ReplyDelete
  7. Wow, we are ready for the spiritual n educative journey🙏

    ReplyDelete
  8. எங்கள் பாக்கியம். தாசன். 🙏🙏

    ReplyDelete

Post a Comment