அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்பதை நம்பிச் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது தலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் இருந்தது.
அலுவலகம் செல்லும் வழி எல்லாம் பொன்னியின் செல்வன் நாடகம் பற்றி விளம்பரத்தைப் பார்த்து டிக்கெட் முன்பதிவுச் செய்யலாம் என்று முயற்சி செய்த போது டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார்கள்.
எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று மியூசிக் அகாடமிக்கு சென்ற போது டிக்கெட் கவுண்டர் பக்கம் ஒருவர் என்னை அணுகி
“என்ன சார் டிக்கெட் வேணுமா ? என்றார்
“ஆமாம்”
“கொஞ்சம் எக்ஸ்டரா ஆகும்”
“அவ்வளவு ?”
“பார்த்துக் கொடுங்க... என்று ஒரு டிக்கெட் கொடுத்தார்”
( எவ்வளவு கொடுத்தேன் என்பது இங்கே தேவையில்லை என்பதால் அதை பற்றி நோ கமெண்ட்ஸ்)
பிளக்கில் டிக்கெட் வாங்குவது குற்றம், படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று உள் மனது சொன்னாலும், கல்கியின் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தப்பை செய்தேன்.
நாடகம் எப்படி இருக்கும்... ஐந்து பாகங்களை எப்படிச் சுருக்க போகிறார்கள், காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தவர்கள் பலர் மனதில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது.
பத்து நிமிடத்துக்கு முன் நண்பரான பக்கத்துச் சீட் மாமா “முதல்ல எம்.ஜி.ஆர் சார்... அப்பறம் கமல்... மணிரத்தினம்....யாராலையும் முடியலை” என்றார்.
உள்ளே நுழைந்தவுடன், நம்மைக் கவர்வது மேடையில் இருக்கும் கோட்டை அமைப்பு. நாவலில் வீரநாராயண ஏரியில் ஆடிப்பெருக்கு அன்று தொடங்கும் கதையை நாடகத்திலும் அதே மாதிரி அமைத்திருக்கிறார்கள். ஆட்டம், பாட்டம் என்று நாடகம் தொடக்கத்திலெயே களைக்கட்டுகிறது.
வந்தியதேவன், ஆழ்வார்க்கடியான் வரும் போது அரங்கில் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள். அந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் சிறப்பாக செய்துள்ளார்கள். (நாடகத்துக்கு ரஜினியும் வந்திருந்தார். “ரஜினி” என்றவுடன் எல்லோரும் கைத்தட்டினார்கள் )
பெரிய பழுவேட்டரையர் நாடகத்தில் சிறியவராக இருக்கிறார், ஆனால் நடிப்பு, வசன உச்சரிப்பில் அதை மறக்கச் செய்கிறார். ஆதித்த கரிகாலனாகப் பசுபதி வந்த பிறகு நாடகம் வேறு கட்டத்துக்குச் செல்கிறது. வந்தியதேவன், ஆழ்வார்கடினான் என்று முக்கியமான பாத்திரங்கள் மறைந்துப் போகிறார்கள். படிக்கும் போது ரவிதாஸன் வரும் காட்சிகளில் ஒரு திகில் இருக்கும் அது நாடகத்தில் இல்லை. அதே போல பொன்னியின் செல்வன் வரும் காட்சியில் ஒரு தாக்கம் இல்லை.
பூங்குழலி படகு தள்ளும் காட்சி, யானை வரும் காட்சி மனதில் நிற்கிறது.
இடைவேளையின் போது சின்னப் பழுவேட்டரையர் தன் படையுடன் வந்து காபி குடிப்பவர்களிடம் ”இடைவேளை முடிந்துவிட்டது கோட்டைக்குள் செல்லவும்” என்று எல்லோரையும் அதட்டுவது, அவரிடம் “சமோசா முடிந்துவிட்டதாம்... கொஞ்சம் உதவி செய்யுங்கள்” என்று கேட்பதும் ஒரு மாலைப் பொழுது இனிதே நிறைவடைந்தது.
You are lucky to be at chennai.
ReplyDeleteI always wanted to see Ponniyin selvan at screen/Stage sir.. I read it many times... lucky you :)
ReplyDeleteஇனிமையான பொழுது என்று தெரிகிறது. சென்னையில் இது ஒரு சௌகரியம் - தில்லியில் நல்ல நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பில்லை...
ReplyDeleteதலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் - :))))
கண்ணியமான விமர்சனம் ....உங்களுடையது !
ReplyDelete....ஆனால் எதோ ஒன்னு
படிக்கும் போதிலிருந்த ரசனைக்கு பக்கத்தில்
வரவிடாமல் செய்துகொண்டேயிருந்தது ....
( ஒரு வேளை எனக்கு மட்டுமோ?)
Drama over ah ? when it was start ? when it will end how many parts of ponniyin selvan covered.
ReplyDeletewhen it was start when it will end. how many parts of ponniyin selvan covered .
ReplyDelete