Skip to main content

மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி


இது காதல் படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. காதல் படத்தின் விமர்சனங்களை பற்றிய விமர்சனம்.


சமீபத்தில் 'காதல்' படத்தை பார்தேன். பார்க்க தூண்டியது இரண்டு விமர்சனங்கள்.


அதற்கு முன் படம் பார்க்காதவர்களுக்கு சின்னக் கதை சுருக்கம்.


மதுரை. பணக்கார வீட்டுப் பெண். சந்தியா.அப்பா ஒயின் ஷாப் ஓனர். +2 படிக்கிறாள்.
மதுரை. பரத். தெருவோர வொர்க் ஷாப் மெக்கானிக் பையன். இருவரும் காதலிக்கிறார்கள். சென்னைக்கு ஓடிப்போகிறார்கள். கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். பெண்ணின் அப்பாவால் பரத் அடித்துத் துவைத்துக் கிழிக்கப்படுகிறார். அவனை சந்தியா தாலியைக் கழட்டி பரத்தை காப்பாத்துகிறார். சிலவருடம் கழித்து சந்தியா பரத்தை பையித்தியமாக பார்க்கிறாள் .கதறுகிறாள். இதைப் பார்த்த சந்தியாவின் இரண்டாவது கணவன். இருவரையும் அழைத்துச் செல்கிறான். அங்கே ஒரு பெரியார் சிலை லாங் ஷாட்டில் வருகிறது.


படம் ஆரம்பித்த உடனேயே கிளைமாக்ஸ் காட்சிக்கு காத்திருந்தேன். காரணம் இரண்டு விமர்சனங்கள்...அதுவும் கடைசி காட்சியில் லாங்ஷாட்டில் தெரிந்த அந்தப் பெரியாரின் சிலையை பற்றி ...


1. புதிய பார்வை(ஜனவரி 2005) இதழில் வந்த 'மண்ணின் கதை' என்ற தலைப்பில்
வந்த விமர்சனம்:


[ .....படத்தில் காட்டப்படும் இன்னொரு சிலை ( திண்டுக்கல்லில்) பெரியார் சிலை.மனிதநேய உறவுகள் மலர்வதற்குக் காரணமாகிற அத்தனை நிகழ்வுகளும் அந்தச் சிலையருகில் நிகழ்கின்றன. தீண்டாமைக்கெதிராக மனிதநேயம் முன்னிறுத்தப்படுவதற்குகான அச்சாரம் அந்தச் சிலையருகில் நிகழ்கிறது. பாலாஜி சக்திவேல் மனசில் நிகழ்ந்த இரசாயன மாற்றங்களில் எளிய குறியீடுகள்தாம் இவை....]


2. உயிர்மை (பிப்ரவரி 2005) இதழில் வந்த 'காதல்: உண்மையின் மீது கட்டப்படும் விமர்சனம்'
[... பெரியாரின் மீது முக்கியமான ஒரு விமர்சனத்தை வைக்கிறது இப்படம் ...பைத்தியக்காரனாக, தன் கைவிரல்களில் சுற்றிய தாலிக் கயிற்றோடு அலையும் முருகனை(பரத்) ஐஸ்வர்யாவின்(சந்தியா) கண்கள் மட்டும் காண்பதாக அந்தக் காமிராவின் கோணம் அமையவில்லை. தன்னுடைய சாயலில் தாடியும் தலைமுடியும்கொண்டவனாக அலையும் ஒரு பைத்தியக்கார இளைஞனைப் பெரியாரின் சிலையும் காண்பதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. பெரியாரின் அறிவு வாதத்தை நம்பிய இளைஞர்களுக்கு நேரக்கூடிய கதி பைத்தியக்காரத்தனம் என்பது பாலாஜி சக்திவேலின் விமர்சனம்.....]


படம் பார்த்தவர்களிடம் இதைப் பற்றி கேட்டேன், எல்லோரும் "ஓ அப்படியா? "பெரியார் சிலையா? ஜோக் அடிக்காதீர்கள்" என்று கூறினார்கள்.


புதிய பார்வையில் விமர்சனத்தை எழுதியது மு.ராமசாமி, உயிர்மையில் விமர்சனத்தை எழுதியது அ.ராமசாமி. இவர்கள் ஈ.வெ.ராமசாமி பற்றி எழுதிய குறிப்பு எனக்கு அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகிறது.


இந்த விமர்சனங்கள் இரண்டுமே என்னை போன்ற இண்டர்வல்லில் பாப்கார்ன் சாப்பிடும் சாதாரண சினிமா ரசிகனுக்கு சிந்தித்து கூட பார்க்க முடியாத கோணத்தில் எழுதப்பட்டுள்ளது. இலக்கிய பத்திரிகையில் வரும் சினிமா விமர்சனமும் புரியகூடாது என்ற நோக்கத்தில் எழுதப்படுகிறது என்று தோன்றுகிறது.


ஒரு குறிப்பிட்ட விஷயத்தின்மீது பல்வேறு பார்வைகள் இருப்பது இயல்புதான். ஆனால் அதற்காக தான் விரும்புகிற எந்த அர்த்தைத்தை வேண்டுமாலும் ஒருவர் திணிக்க முடியுமா? பொதுவான பார்வையாளர்களின் கோணத்தில் இல்லாத ஒன்றை விமர்சனத்தின் வழியே அந்தப் படத்தில் புகுத்த முடியும் எனில் ஒரு சினிமாவின் ஒவ்வொரு. பிரேமிலும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ள முடியும். பெரியார் சிலைக்குப் பதில் கண்ணகி சிலை, காந்தி சிலை அல்லது பசும்பொன் தேவர் சிலை அந்த ·பிரேமில் வந்துபோயிருந்தால் வரக்கூடிய விமர்சனத்தை இந்த பிளாக்கில் யாராவது எழுதலாம்


மு.ராமசாமிக்கு வெள்ளையாக இருக்கும் ஒன்று அ.ராமசாமிக்கு முற்றிலும் கறுப்பாக மாறிவிடுகிறது. இவர்கள் இருவருக்குமே ஈ.வெ.ராமசாமி மீண்டும் பிறந்து வந்தால் நல்லது என்று தோன்றுகிறது.


தொழில் நுட்ப ரீதியாகவோ கதை அம்சத்திலோ ஏதேனும் புதுமையைக் கையாளும்படங்கள் மட்டும் ஏன் தமிழ் அறிவு ஜீவிகளின் தொடர்ச்சியான கடும் கண்டனத்திற்கு ஆளாகின்றன ?


கடைசியாக இவ்வளவு நுட்பமாக திட்டமிட்டு உருவாக்கும் அளவுக்கு தமிழ்ச் சினிமா இயக்குனர்கள் புத்திசாலிகள் என்றால் வரவேற்கவேண்டியதுதான். ஆனால் அதற்கான தடயங்கள் அந்தப் படத்தில் இருக்கின்றனவா?.


விமர்சனங்களை படித்தால், வெய்யகாலம் ஆரம்பித்துவிட்ட அறிகுறி தெரிகிறது...Old Comments from my previous Blog


This comment is nothing related to this blog. But about a novel (short novel) by sujatha. Have you seen the film zoolander? Watch it. And, can you please let me know if you see the resemblance this story has with sujatha's 'nillungaL rAjAvE' - that i see? if possible, mail at harilama at gmail dot com.
thanks


By புலம்பல்ஸ், at Wed Feb 23, 03:01:21 PM IST  


அ. ராமசாமி, மு. ராமசாமி இருவரும் எழுதிய காதல் திரைப்பட விமர்சனத்தை நான் படிக்கவில்லை. அது குறித்து மேற்கோள் காட்டப் பட்ட வரிகளை மட்டுமே படித்திருக்கிறேன். அதனால் இருவரும், குறிப்பாய் அ. ராமசாமி எழுதியிருக்க கூடிய உருப்படியான விமர்சன வரிகளை குறித்து சொல்ல எதுவும் இயலவில்லை. அ. ராமசாமி எழுதியுள்ளது (அதாவது மேலே உள்ள வரிகள்) மிகவும் அபத்தமான விமர்சனம் என்பது சந்தேகமில்லை. எனக்கு சுவாரசியம் அளிப்பது அதை முன்வைத்து மற்றவர்கள் தங்கள் அரசியலை அஜண்டாக்களை நிறைவேற்றி கொள்வதுதான். இரண்டாவது இதை முன்வைத்து திரைவிமர்சனம் என்பது குறித்து முன்வைக்கப் படும் ஒரு அபத்தமான பார்வை. அதன் குழப்பமற்ற நேரடி வெளியீடுதான் தேசிகனின் இந்த பதிவு.


அ. ராமசாமி இது வரை எத்தனையோ உருபடியான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்த கட்டுரையில் கூட வேறு பல உருப்படியான வரிகள் இருக்கலாம். ஆனால் ஒரு ஒற்றை வரி மட்டும் மேற்கோள் காட்டப் பட்டு, அதை முன் வைத்து ஒரு தர்க்கமற்ற ஒரு வாதம் மற்ற விமர்சனங்களை மறுக்க பயன்படுத்த படுகிறது. அதாவது இதை முன்வைத்து, விமர்சனம் என்பதே இப்படித்தான் என்பது போல் பேசுவதும், முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுப்பது போல் பேசுவதும். உதாரணமாய் ராகாகி அபத்தங்களை சொல்லலாம். ரஜினி ராம்கி ஞாநியையும் இத்துடன் இணைத்து ஞாநியின் பாபா விமர்சனத்தை மறுக்க முனைகிறார். இங்கே தேசிகன் "ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி" என்று ஒரு தலைப்பு வைத்து வேறு ஏதோ சொல்ல வருகிறார். இந்த தலைப்பின் மூலம் என்ன எழவை சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். பெரியார் எழுதியது பேசியதெல்லாம் அ. ராமசாமி சொல்வது போன்ற அபத்தம் என்று சொல்லவருவதாக எனக்கு தோன்றுவதை எடுத்து சொன்னால், என் இஷ்டத்திற்கு வாசிப்பதாக அவருக்கு தோன்றலாம். ஆக இவர்கள் அ. ராமசாமியின் ஒரு அபத்தமான வரிகளை வைத்துகொண்டு, இருக்கும் அத்தனை விமர்சனங்களையும் நிராகரிக்க பயன்படுத்தும் ஒரு அசட்டு வெறிதான் தெரிகிறது. உதாரணமாய் காத்ல் விமர்சனம் குறித்து நான் கூட ஒரு முக்கிய விமர்சனம் வைத்துள்ளேன். இதை யார் கண்டுகொள்ளுவார்கள்?


இது இப்படியிருக்க தேசிகன் விமர்சனம் என்பது குறித்து எழுதியுள்ளதும் இன்னும் மற்றவர்களும் சொல்ல வருவது என்ன? ஒரு குறிப்பிட்ட காட்சியில் "பெரியார் சிலைக்குப் பதில் கண்ணகி சிலை, காந்தி சிலை அல்லது பசும்பொன் தேவர் சிலை அந்த ·பிரேமில் வந்துபோயிருந்தால்' அதை முன்வைத்து எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்பதுதான். அ. ராமசாமி படத்தில் இறுதிகாட்சியில் வரும் பெரியார் சிலையை முன்வைத்து எழுதியது எவ்வளவு அபத்தமோ, அதை விட அபத்தம் இப்படி ஒரு குறிப்பிட்ட ஃப்ரேமில், வரும் பெரியார் சிலையையும் அதன் காமிரா கோணங்களையும் முன்வைத்து விமர்சனமே கூடாதென்பது. ஒரு திரைப்படத்தை விமர்சிக்கும் போது நிச்சயமாய், அதில் இடம்பெரும் காட்சி பிண்ணணிகளையும், காமிரா கோணங்களையும் குறித்து நிச்சயமாய் பேசலாம். உதாரணமாய் மு. ராமசாமியின் விமர்சனம் (அதாவது மேற்கோள் காட்டப் பட்ட வரி) நிச்சயமாய் ஒரு சாத்தியமுள்ள வாசிப்பு. தமிழ் சினிமா பார்வையாளர்களின் வாசிப்புகளில் (ஒரு வேளை பாப் கார்ன் தின்றுவிட்டு தேசிகன் இது குறித்து யோசிக்காவிட்டாலும்) பிண்ணணியில் வரும் சிலைகள், நபர்கள், அடையாளங்களுக்கு நிச்சயமாய் வாசிப்புகள் உண்டு. ஞாநி பாபா விமர்சனத்தில் முக்கியமான ஒன்றை சொல்லியிருப்பார். 'நண்பர் பகைவர் யார் வந்தாலும்..' என்ற பாடல்வரியின் போது பகைவர் என்பதன் குறியீடாய் இஸ்லாமியர் வருவார். படத்தில் தெளிவாகவே இது காட்சி படுத்த பட்டிருக்கும். ஞாநி சொல்லும் இந்த விமர்சனத்தை மறுக்க அ.ராமசாமியை பயன்படுத்தி மறுப்பதை போன்ற அபத்தம் உண்டுமா? அ. ராமசாமி முன்வைத்துள்ளது ஒரு அபத்தமான over interpretations. அதை முன்வைத்து இப்படி பட்ட விமர்சனங்களையே நிராகரிப்பதும், கிண்டலடிப்பதும், இன்னும் முக்கியமாய் வேறு விமர்சனங்களை மறுக்க நினைப்பதும் நம் சூழலின் அழுகலை மட்டுமே காண்பிக்கிறது.


இதை அவசரமாய் அடிக்க வேண்டுயுள்ளது. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை. எதிர்வினையே வைக்காமல் போய்விட கூடுமாதலால் இப்போதைக்கு இதை தட்டி வைக்கிறேன்.


By ROSAVASANTH, at Wed Feb 23, 06:03:54 PM IST  


aiyaa rosavasanth... kadaseela enna solla vareenga?


By Anonymous, at Wed Feb 23, 08:11:13 PM IST  


Desikann. Ippo tamilnadu konjam munneritu irukku. Periyar vandhaa avlo dhaan. Hindi edhirpu, brahmin edhirpu, hindi board kku thaar poosi azhikaradhu, pillayar kku seruppu maalai podaradhu idhu ellam start aagidum. Avlo dhaan. Kurangilirindhu vandha manidhanai marubadiyum kurangu aaki viduvaargal namadhu dravidar kazhaga pagutharivu vyadhigal


By Cho Rasigan, at Wed Feb 23, 08:41:54 PM IST  


மு.ராமசாமி மற்றும் அ.ராமசாமி இருவரும் ஈ.வெ.ராமசாமியைப் பற்றி எழுதியிருப்பது தனக்குப் புரியவில்லை என்று தேசிகன் தன் பதிவில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். இதில் குழப்பம் என்ன வந்தது? மேலும் பொதுவாக அறிவுஜீவிகள் எப்போதும் புரியாமல் எழுதுவதைப் போன்றத் தோற்றமும் வருகிறது.
மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமி என்பது மேலே கூறியக் கருத்தைத்தான் முன்னிறுத்துவதாக நாஞ் புரிந்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்


By dondu(#4800161), at Wed Feb 23, 09:05:27 PM IST  


This post has been removed by the author.


By dondu(#4800161), at Wed Feb 23, 09:37:19 PM IST  


hahaha nalla irukku desi....enna ithu?eatho oru scene la vantha periyar silaiyai vachi orrula madha kalavarathia undu panniduvanga pola irukku intha ramasaminga? vera velai thozhil illaya ivangalukku? may be like a cheap poloticians these guys are doing the things ma...just put them in dust bin....cheap adverticement tactics use panranga, pugazh vangaravanga 2 vitham, onnu, thaan seithu per vangarathu, else aduthavangala kurai solli per vangarathu, ithula ivanga entha vithamnu nan sollavendiyathu illai thane? :-P
endrendrum anbudan
srishiv...assamil irunthu


By srishiv, at Wed Feb 23, 11:50:35 PM IST  


இதைப் போன்ற பதிவுகளின் பின்னூட்ட களத்தில் ரோசா வசந்த் குதிக்காவிட்டால், ஏது சுவாரசியம்? இதற்கு மறுமொழி இடுவதென்பது அவருக்கு தி.அல்வா சாப்பிடுகிற மாதிரி :-)


//
உதாரணமாய் காத்ல் விமர்சனம் குறித்து நான் கூட ஒரு முக்கிய விமர்சனம் வைத்துள்ளேன். இதை யார் கண்டுகொள்ளுவார்கள்?
//
ரோசா,
நீங்கள் எழுதிய விமர்சனத்தை, என்னை மாதிரி ஆட்கள் தான் கண்டு கொள்வார்கள்! ஏனெனில், நீங்கள் சிறுபத்திரிகை எழுத்தாளர் இல்லையே, சுற்றி ஒரு கூட்டம் வைத்திருப்பதற்கு :-)


மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமிஇந்த தலைப்புக்கு என் மனதில் பட்ட interpretations-ஐ கூறுகிறேன்!


1. சிலை வரும் காட்சியை ஒருவர் பாஸிடிவாக பார்க்கிறார். மற்றவர் நெகடிவாகப் பார்க்கிறார்! இதிலிருந்து, ஈ.வெ.ரா வும், நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார், தவறுகளும் செய்திருக்கிறார் என்று கொள்ளலாம். அவரது, மூடநம்பிக்கை ஒழிப்பு, பிராமண ஆதிக்க எதிர்ப்பு, தலித் மேம்பாட்டுக்கான உழைப்பு போன்றவைகள் பாஸிடிவ் வகை! பிற மத மூடநம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கண்டு கொள்ளாத ஓரவஞ்சனையான அதி தீவிர இந்துக் கடவுளர் எதிர்ப்பு (வீரமணி செய்வதும் இது தான்!), தமிழ் மொழியை காட்டுமிராண்டிகளின் பாஷை என்று சாடியது போன்றவைகள் நெகடிவ் வகை என்பேன்!


2. இரண்டு முரண்பட்ட விமர்சனம் தந்த ஆசாமிகளை கூட்டினால் ஈ.வெ.ரா வருவதால், ஈ.வெ.ரா விடமும் முரண்பாடுகள் இருந்தன என்றும் கொள்ளலாம்!


பொதுவாக, இலக்கியவாதிகளின் திரை விமர்சனம் கூட தலைக்கு மேலே ஓடும் வகையில் (over the head) உள்ளன என்ற தேசிகனின் கூற்று ஓரளவு சரியானதே எனத் தோன்றுகிறது! எனவே, இலக்கியப் பத்திரிகைகளில் வரும் திரை விமர்சனங்களை படித்தல் ஆகாது :-) அப்படியே படித்தாலும், அவை பற்றி விமர்சனம் செய்தல், வம்பை விலைக்கு வாங்குவதற்கான சிறந்த வழி :-(


என்றென்றும் அன்புடன்,
பாலா


By enRenRum-anbudan.BALA, at Thu Feb 24, 12:03:14 AM IST  


Dear Desikan


I agree with you. Please read some of the 'Abatha' posts that I posted in RKK on the same topic, if you've not already read them.


Thanks
S.Thirumalai


http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10807


http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/10815


By Anonymous, at Thu Feb 24, 12:18:51 AM IST  


i agree that the cited paras are problematic.i have not read the reviews but prima facie such interpretations seem to be too far fetched to be taken seriously.
and is it difficult to find nonsense in sujathas writings.we all know the stupid and
irrelevant comment he made on blogs and bloggers.one can find many absurd, false and totally irrelevant views in his writings and illogic in his works of fiction.i think it is better to catalog them also.and the silly remarks about periyar are too old and stale.some people will neither try to learn nor try to understand and they are fit to be fans of fools only.


By ravi srinivas, at Thu Feb 24, 03:48:45 AM IST  


தேசிகன் எழுதியதற்கும் இங்குள்ள பின்னூட்டங்களுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
ரோஸாவசந்த்,
உங்கள் கடைசி வரியை மிகவும் ரசித்தேன்.
".. குடும்ப சூழலில் என்னால் விரிவாய் இது குறித்து எழுத முடியவில்லை".
இந்த வாரம் படித்த நல்ல நகைச்சுவையாக இதை கருதுகிறேன். - ஷங்கர்


By Shankar, at Thu Feb 24, 09:20:52 AM IST  


The following are some of the disparaging epithets that Mr.Ravi Srinivas has chosen to employ to flame the writings of the inimitable Sujatha.


//quote//


nonsense
stupid
irrelevant
absurd
false
totally irrelevant
illogic
silly
stale
fools


//unquote//


This pattern smacks of some serious disturbance.
May be a subject for a pro shrink.
S.K
http://www.cyberbrahma.com/


By S.K, at Thu Feb 24, 10:51:05 AM IST  


Ravi's disparaging and off-the-cuff (personal) remarks on a person of Sujatha's calibre is totally unwarranted and irrelevant to the topic of discussion!He MUST realize that this is not the forum to settle personal animosity with people for whom he has ONLY hatred. He needs to tone down a bit. Abuse should never become the order of the day :-(


May be, Kichu's advice would be of some use to him :-)


enRenRum anbudan
BALA


By Anonymous, at Thu Feb 24, 11:14:49 AM IST  


ஷங்கர், உங்கள் நகைச்சுவை உணர்வை நானும் ரொம்பவே ரசித்தேன். குறிப்பாய் "தேசிகன் எழுதியதற்கும் இங்குள்ள பின்னூட்டங்களுக்கும் எதுவும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. " என்று சொல்லும்போது. ஆமாம் நான் இலங்கை பிரச்சனை பற்றிதானே எழுதியிருக்கிறேன்.


By ROSAVASANTH, at Thu Feb 24, 12:17:20 PM IST  


Ravi is probably going through serious identity crisis and thinks to trigger a serious debate here with baseless arguments.


Cool Down Ravi !! After all each one of us has our own share of nonsensical idiosyncrasies. How can Sujatha be kicked off from thet list. He too has his own ups and downs. Take a breather and come back to blogging. Better luck next time.


Others, In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one.


By Lazy Geek, at Thu Feb 24, 01:35:38 PM IST  


//In the last years, we've seen enough ways and means which bloggers/people employ to grab attention to their blogs. This one could be skipped as yet-another-one. //


Hear! Hear!!


By Anonymous, at Thu Feb 24, 07:36:34 PM IST  


by viewing this film kaadhal hero not gets mad but we also get mad.And we r creating more boostness for this film.just waste of time.


By Anonymous, at Mon Feb 28, 07:31:28 PM IST  


nice to see u r blog . I think u have touched the senstive part of the film .good job


By knrr, at Mon Feb 28, 07:35:12 PM IST  


தேசிகன் வலைப்பதிவில் காதல் திரைப்படம் சம்பந்தமாக எழுதிய குறிப்பை ஒட்டி எழுதபட்ட பின்னூட்டங்களையும் ரோஸாவசந்த் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிய எதிர்வினைகள், விவாதங்கள் ஆகியவற்றை படித்தபோது இந்த சண்டை எதற்காக என்று உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது. தேசிகன் அந்தத் கட்டுரைக்கு வைத்த தலைப்பு தேசிகனின் சாதி அடையாளத்தோடு சேர்த்துவைத்து பார்க்கும் ஒரு மனோபாவத்தை இந்த விவாததில் அவதானிக்க முடிந்தது. அது ஒரு விமர்சனத்தின் அபத்தத்தை குறிப்பதற்காக பயன்படுத்தபட்ட எளிய அங்கதமான வாக்கியமே அல்லாமல் அது பெரியாருக்கு எதிரான அல்லது நவீன சிந்தனைகளுக்கு எதிரான ஒரு கூற்று அல்ல. இப்படி ஒருவருடைய பிறப்பு அடையாளங்கள். ஈடுபாடுகளை அடிப்படையாகக் கொண்டே ஒரு பிரசினையை விவாதத்திற்கு எடுக்க முடியும் என்றால் அவை விவாதங்கள் அல்ல தீர்ப்புகள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டில் 'கட்டுடைப்பு' என்ற பெயரில் 'வாசிப்பு' என்ற பெயரில் நிகழ்த்தப்ப்பட அபத்தங்கள் பற்றிய ஒரு விவாதத்தின் தொடர்ச்சியாகத்தான் நாம் இதை பேசமுடியுமே தவிர ஒரு தனிநபரை தாக்குவதன் மூலம் அல்ல. ரவி ஸ்ரீனிவாஸ் சுஜாதாவின் அபத்தங்களை முதலி பேசு என்ற ரீதியில் ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். ரவி ஸ்ரீனிவாஸ் தன்னுடைய வாழ்க்கையில் உள்ள எல்லா அபத்தங்களையும் போக்கிவிட்டுத்தான் பிறர்மீதான் அபிப்ராயங்களைக் கூறிவருகிராரா?


By vinothini, at Wed Mar 02, 07:42:52 AM IST  


அறிவிஜீவி வினோதினி அவர்களே!


என் பதிவிலிருந்து ஒரு வரியை கூட நேர்மையாய் எதிர்கொள்ளாமல் எதையெல்லாமோ ஒளரி கொட்டியிருக்கும் உங்கள் மறுமொழியின் உளவியல் மிகவும் சுவாரசியமானது. நிச்சயம் நான் இதிவரை தேசிகனின் ஜாதி அடையாளத்தை முன்வைத்து ஒரு வார்த்தை எழுதவில்லை. இப்போது உங்கள் மறுமொழியின் வினோதமான வாதங்களை (நான் சொல்லாததை எல்லாம் வலிந்து சொல்லும் வாதங்களை) உங்கள் சாதி அடையாளத்தை வைத்து ஒருவேளை புரிந்துகொள்ள முடியும்.


"தேசிகன் அந்தத் கட்டுரைக்கு வைத்த தலைப்பு தேசிகனின் சாதி அடையாளத்தோடு சேர்த்துவைத்து பார்க்கும் ஒரு மனோபாவத்தை இந்த விவாததில் அவதானிக்க முடிந்தது. " இதற்கு ஆதாரமாய் ஒருவரி என் பதிவிலிருந்து எடுத்து காட்டமுடியுமா? அல்லது வேறு யாராவது அப்படி சொன்னார்களா? ஆனால் அ. ராமசாமியை தன் வாசிப்பாக சொன்னதை முன்வைத்து எதையும் பேசுவீர்கள். இதை ஜாதி புத்தி என்று சொன்னால்(கவனிக்கவும் இப்போதுதான் சொல்கிறேன்) அதில் என்ன மிகை?


இப்பாடி நான் *சொல்லாத ஒன்றை முன்வைத்தே*, கட்டுடைப்பு விவாதம் எதை பற்றியெல்லாமோ தீர்ப்பு சொல்லும் அளவிற்கு உங்கள் வாதங்கள் போகிறது. இதைத்தானே நான் இவ்வளவு நேரம் பேசி வந்தேன்.


By ROSAVASANTH, at Wed Mar 02, 11:20:56 AM IST  


 

Comments