போன வருஷம் என்ன செய்தேன்? பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. கிச்சனில் தேதி கிழிக்கும் காலெண்டர் கூட 2.1.12 என்று காட்டிக்கொண்டு இருக்கிறது. சில அருமையான சிறுகதைகள் படித்தேன். ஆகஸ்ட் மாதம் கடைசியில் திடீர் என்று 4 சிறுகதைகள் எழுதினேன்.
தாராளமாய் சொல்கிறேன் தேசிகன் சார்உங்கள்
போராளி ஸ்டோரி பிரமாதம் - ஏராள
மாக எழுதுங்கள், மற்று மொருசுஜாதா
ஆகயென் வாழ்த்துக்கள் அன்பு.
....என்று கிரேஸி மோகன் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது.
நல்ல க்ரைம் கதை ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனைவி, "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்றாள்.
புது காரை எடுத்துக்கொண்டு ஊட்டி, உடுப்பி என்று சுற்றினேன். இரண்டு முறை பஞ்சர் ஒட்டினேன். நிறைய சினிமா பார்த்தேன். இரண்டு மூன்று முறை தப்பாக ஓட்டியதற்கு யார்யாரிடமோ திட்டு வாங்கினேன்.
'ஹம் ஆப் கே ஹை கோன்' ஹிந்தி படத்திற்குப் பிறகு மீண்டும் தலாஷ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். குழந்தைகளுடன் டிவி ரிமோட்டுக்கு சண்டை போட்டேன். டிவியில் கோசாமி, ஏர்டெல் சூப்பர் சிங்கர், நீயா நானா?, சமையல் எண்ணெய் விளம்பரம் பார்த்தேன்.
ஃபேஸ்புக்கினால் நிறைய சொந்தகாரர்கள் நண்பர்கள் ஆனார்கள். எதற்கு லைக் போட வேண்டும் என்று புரியாமல் போட்டேன். எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது என்று அவர்கள் போட்டோ பார்த்துத் தெரிந்துக்கொண்டேன். ஆண்கள் கூட தங்கள் படங்களை அழகாக போட்டுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
ஐந்து முறை ஜுரம் வந்தது. 2 முறை டாக்டரிடம் சென்றேன். ஒரு முறை ஆலோசனை செய்த பிறகு ஒரு சிறுகதைக்காக மருத்துவம் சார்ந்த சந்தேகம் கேட்க அவர் பீஸை இரட்டிப்பு செய்தார். மாதத்திற்கு இரண்டு மூன்று முறை மாத்திரை சாப்பிடுவதை மறந்து போனேன். தினமும் வாக்கிங் போனேன். போகாத நாளிலும் போனேன் என்று மனைவியிடம் பொய் சொன்னேன். கோயிலில் ஒரு செருப்பு, வீட்டு வாசலில் ஒரு செருப்பு காணாமல் போனது. எல்லா கல்யாண சாப்பாடும் ஒரே மாதிரி இருந்தது.
ரா.கி.ரங்கராஜன் மரண செய்தி கேட்டு வருத்தப்பட்டேன். நியூஸ் பேப்பர் தினமும் படித்தேன்; டிசம்பர் மாதம் முதல் இரண்டு நியூஸ் பேப்பர் வாங்க ஆரம்பித்து டாய்லெட்டில் நிறைய நேரம் கழித்தேன். கத்தரிக்காய் வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டேன். தினமும் கொய்யா வாங்கி சாப்பிட்டேன். எம்.ஜி.ரோட்டில் இருக்கும் பிருந்தாவன் ஹோட்டல் மூடியதால் வருத்தப்பட்டேன். அண்ணபூர்னாவில் அடிக்கடி சாப்பிட்டதால் பலர் நண்பர்கள் ஆனார்கள். நிறைய விஷயங்கள் மறந்து போனேன். "இந்த ஹீரோயின் பேர் என்ன?" என்று டிவி பார்க்கும் போது கேட்டுத் தெரிந்துகொண்டேன். மறக்காமல் செய்தது சரவண பவன் அளவு சாப்பாட்டிற்கு 'புழுங்கல்' அரிசி என்று கேட்டதுதான். JS.Raghavan, பாலஹனுமான், நட்பு கிடைத்தது.
சென்ற வருடமும் பர்வீன் சுல்தானா பாட்டைக் கேட்டு பிரமித்தேன். போதீஸ், நல்லி என்று எந்தக் கடைக்கு உள்ளேயும் போகாததும், நிறைய புத்தகங்கள் வாங்காததும் தான் சென்றவருட சாதனைகள். ஃபிலிப் கார்ட்டில் சில பொருட்கள் வாங்கினேன். குழந்தைக்கு என்று பொய் சொல்லி, அமர் சித்திரக் கதா முழு செட் வாங்கி தினமும் இரவு 12 மணி வரை படித்தேன். iPhone, iPad விலை எறங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு இருந்தேன்.
நினைவில் நின்ற பாடல் என்று எதுவும் இல்லை. சென்னையில் சொந்தக்காரர் வீட்டில் 70" டிவி ஹோம் தியேட்டர் செட்டப்பில் கங்கா படத்தில், 'ஆணா பெண்ணா சரித்திரம்' என்ற பாடலில் ஜெய்சங்கர் துப்பாக்கியால் சுட டான்ஸ் ஆடும் பெண்ணின் டிரஸ் ஒவ்வொன்றாக அவிழும் பாடல் கடைசியில் என்ன ஆகப் போகிறதோ என்று பயந்து போய் வால்யூமை கம்மி செய்தேன்.
இந்த வருஷம் நிறைய எழுத ஆசை. இந்த கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
எல்லோருக்கும் புது வருட வாழ்த்துகள்

Happy new year sir,
ReplyDeleteI liked this line//ஒரு முறை ஆலோசனை செய்த பிறகு ஒரு சிறுகதைக்காக மருத்துவம் சார்ந்த சந்தேகம் கேட்க அவர் பீஸை இரட்டிப்பு செய்தார். //
continue writing very frequently
nice :)
ReplyDeleteஇராயிரத்து பதிமுன்றை அருமையான தொடங்கியுள்ளீர்கள்..வாழ்த்துகள்
ReplyDelete//குழந்தைக்கு என்று பொய் சொல்லி, அமர் சித்திரக் கதா முழு செட் வாங்கி தினமும் இரவு 12 மணி வரை படித்தேன்.//
ReplyDeleteJealous. :) அப்படியே ஒரு கேள்வி, அமர் சித்ர கதா வெப்சைட்டிற்கு போனால், நிஜமாகவே ஹார்ட் காப்பி ஷிப் செய்வார்கள் போல தெரிகிறது. pdf மாதிரி டவுன்லோட் பண்ற வசதி எங்கே இருக்குன்னு உங்களுக்கு எதுவும் விபரம் தெரியுமா..? Thanks in advance.
//இந்த வருஷம் நிறைய எழுத ஆசை. இந்த கட்டுரையிலிருந்து ஆரம்பிக்கிறேன்.//
ஆரம்பம் க்யூட்டா இருக்கு. Waiting!
PDF இருப்பதாக தெரியவில்லை. ஆன்லைனில் பழைய அம்புலிமாமா வந்திருக்கிறது. ஆனால் எனக்கு புத்தக வடிவில் தான் படிக்க ஆசை. ஆன்லைனில் படித்தால் ஏதோ ஆபீஸ் வேலை மாதிரி ஒரு ஃபீலிங் வந்துவிடுகிறது.
Delete