தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை பற்றி பத்ரி எழுதியிருந்தார். ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் சுற்றிப் பார்க்க போகிறார்கள் என்று தெரிந்து ஒரு நாள் மட்டும் அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்று வந்தது இனிய அனுபவம்.
தாத்தா, பாட்டி, மாமி மாமா, இளைஞர்கள், இளைஞிகள் என்று அவியல் மாதிரியான ஒரு குழு. குழு என்று சொல்லுவதை விட குடும்பம் என்று சொல்லலாம். .
காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கு இடையில் அரங்கம் அமைத்து அதற்கு நடுவில் இருக்கும் கோயில்; கோயிலைச் சுற்றி நகரம் ஸ்ரீரங்கம்.
ஒரு காலத்தில் ஆசார்யர்கள், ஜீயர்கள் முதலானோர் ஸ்ரீரங்கம் நகருக்குள் தங்க மாட்டார்கள். ஊருக்கு வெளியே காவிரிக் கரைக்கு அந்தப் பக்கம்தான் தங்குவார்கள். இரு நதிகளுக்கு இடையே உள்ள மொத்த இடத்தையுமே அவர்கள் கோயிலாகக் கருந்தினார்கள். அதை அசுத்தப்படுத்த நேரலாம் என்பதால் அங்கே தங்கவில்லை என்று சொல்லுவார்கள். ஆனால் இன்று?
* - *
"கோபுரம் பக்கம் இருக்கும் பெரியார் சிலை எதிரே வந்துவிடு, அங்கிருந்து 8:30 மணிக்கு எல்லா சந்நிதிகளையும் சுற்றிப் பார்க்கப் போகிறோம்" என்றார் பத்ரி.
பெங்களூரிலிருந்து பஸ் பிடித்து பக்கத்து சீட் நண்பர் சாக்ஸ் வாசனையை இரவு முழுவதும் நம்பெருமாளுக்காக சகித்துக்கொண்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தேன். எல்லா சந்நிதியும் சின்ன வயதில் அப்பாவுடன் விலாவாரியாகச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். பிறகு சுஜாதாவின் ஸ்ரீரங்கம் கதைகளுக்கு ஓவியம் வரையச் சென்ற போது கொஞ்சம் நிதானமாகச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். மற்ற சமயங்களிலெல்லாம் ஒரு குறிப்பிட்ட கோடாகத்தான் கோயிலுக்குள் போய்வருவது இருந்திருக்கிறது.
வந்திருந்த அனைவருக்கும் பத்ரி, கோயில் மேப்புடன், 'திருவரங்க உலா' என்ற அருமையான கையேடு ஒன்றையும் தயாரித்துக் கொடுத்திருந்தார். சில வருஷம் முன்பு ஸ்ரீரங்கம் செவதற்கு வசதியாக ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் அதையும் அதில் நன்றியுடன் சேர்த்திருந்தார்.
அன்று கண்ட காட்சிகளைப் பற்றிய குறிப்புக்கள் படங்களுடன் கீழே தந்துள்ளேன்.
காலை முரளிஸ் காபி சாப்பிட்டேன். அருமை. காபிக்கு பிறகு பல விஷயங்கள் என்னை கவர்ந்தது. கடைக்கு பெயர் இல்லை ஆனால் எல்லோருக்கும் முரளிஸ் காப்பி என்றால் தெரியும். காபி போடுபவர் பெயர் முரளி. காபி கடையில் அழுக்குப்படாமல் வெள்ளை வேஷ்டியுடன் இருப்பது எப்படி என்று அவர் டியூசன் எடுக்கலாம். ஒரு காபி விலை 12/= பார்சல் காபி 14/=. தொங்கவிடப்பட்ட அந்த வாய்ப்பாட்டுக்குக் காரணம் புரிந்தது. அரை மணியில் இரண்டு காப்பி குடித்துவிட்டு கூரத்தாழ்வாரைச் சேவிக்கச் சென்றோம். போகும் வழியில் பூ விற்பவர் என்னைக் கவனிக்காமல் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
பத்ரி ஸ்ரீரங்கத்தில் எல்லா சந்நிதிகளிலும் அதன் சிறப்பு, ஸ்தல புராணம் பற்றிச் சொல்ல ஒரு பெரியவரை ஏற்பாடு செய்திருந்தார். பெரியவர் கூரத்தாழ்வார் பரம்பரை வந்தவர் என்று சொன்னதாக ஞாபகம். பல சந்நிதிகளில் அவர் கிட்டத்தட்ட ஒரு சிறிய கதாகாலக்ஷேபமே செய்தார் என்று சொல்லலாம்.
ஒவ்வொரு சந்நிதியிலும் அங்கே இருக்கும் பட்டர் பேசுவது அதைவிட சுவாரஸியமாக இருந்தது.
"இந்த பெருமாள் ரஜினி மாதிரி ....சூப்பர் ஸ்டார்"
"முதுகில் பை வைத்துக்கொண்டு தீர்த்தம் வாங்காதீங்கோ"
....
....
சிலர் கோபப்படுகிறார்கள், சிலர் அமைதியாக இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதலாம்.
கோயில் கோபுரச் சிற்பங்களைப் பார்த்துக்கொண்டே போனோம்.
"அங்கே பாருங்க சிவன் மாதிரி இருக்கார் ஒருவர்"
"கழுத்தில் பாம்பு இல்லை அதனால் அது சிவன் இல்லை"
"சில சிற்பங்களில் கை இல்லை, சிலவற்றுக்கு கால்; சிலவற்றை கடைகள் முட்டுக்கொடுக்க உபயோகப்படுத்தியிருந்ததை பார்க்கும் போது கோபம்தான் வந்தது.
இந்த முறை கவனித்த போது, எல்லா சுவற்றிலும் ஏதோ ஒரு கல்வெட்டு இருக்கிறது. டிகோட் செய்தால் ஒரு பிடி அரிசி கொடுத்தேன் விளக்கு ஏற்ற எண்ணை தந்தேன் போன்றவைதான் இருக்கும் என்று நினைக்கிறேன். பலவற்றை சிமிண்டு கொண்டு பூசியிருக்கிறார்கள், அல்லது யானைக்குப் போடுவது போல பெரிய நாமம் போட்டு அழித்திருக்கிறார்கள். சுவடுகள் அழிந்துக்கொண்டிருக்கின்றன என்பது வேதனையாக இருக்கிறது. கோயிலில் இருப்பதிலேயே பழையதான பராந்தக சோழனுடைய கல்வெட்டு ஒன்று கொட்டாரம் பக்கம் இருக்கிறது என்று தெரியும். அதைத் தேடிக்கொண்டுபோய் அங்கிப்பவரிடம் கேட்க அவர் அங்கிருக்கும் ஒரு கல்வெட்டைக் காண்பித்தார். கிரானைட் கல்லில் அந்தக் கோயிலைப் புதுப்பித்த புதிய கல்வெட்டு. அதே மாதிரி தாயார் சந்நிதியில் தற்காலக் கல்வெட்டுகள் நிறைய முளைத்திருக்கின்றன. அவற்றைப் பற்றி இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் ஆராய்ச்சி நடந்தாலும் நடக்கலாம்.
வேணுகோபாலன் சந்நிதி. ஸ்ரீரங்கம் கோயிலிலேயே மிகவும் அழகிய சிற்பங்கள் இங்கும் சேஷராயர் மண்டபத்திலும்தான் இருக்கின்றன என்றே சொல்லலாம். கண்ணாடி பார்க்கும் மங்கை, வீணாவாதினி, கிளியை ஏந்தி நிற்கும் பெண் என்று இங்கே இருக்கும் சிற்பங்கள் ஒய்சாளர்கள் நமக்கு விட்டு சென்ற பொக்கிஷங்கள். இந்த முறை அங்கே இருக்கும் பட்டர் எங்களை வரவேற்று பெருமாள் உற்சவர் அழகைப் பாருங்கள் கண்ணின் வேட்டியை விலக்கிக் காண்பித்தார். இடது பக்கம் இருந்த தாயார் காலுக்கு கீழே அவருடைய நோக்கியா மின்னியது.
வெளியே வந்தபோது ஒருவர், எங்களை அழைத்துக்கொண்டு சென்று கல்லில் சின்ன யானை செதுக்கியிருப்பதைக் காண்பித்தார். "உங்க கட்டை விரலை அதுமேல வெச்சுப் பாருங்க, அந்த சைஸ்தான் இருக்கும்" என்றார். பலர் தங்கள் கட்டைவிரலை வைத்ததால் யானைக்கு தினமும் தைலக்காப்பு நடந்து இன்னும் கருப்பாக ஆகிவிட்டது. எப்படியும் யானை கருப்புதானே!
நம்பெருமாளைக் கண்ணாடி அறையிலும் மூலவரைக் கருவறையிலும், சேவித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு உடையவரை சேவிக்கச் சென்றோம். உடைவர் சந்நிதியின் மேற்கூரையில் பல நாயக்கர் கால ஓவியங்கள் காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் உள்ளன. எல்லாம் ஒழுங்காகப் பாராமரிக்கப்படாமல் அழிந்து போய் இன்னும் கொஞ்ச நாளில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் நேரம் என்ன கதையாக இருக்கும் என்று பார்த்து யோசித்துக்கொண்டே போனதில் கழுத்து வலித்தது.
மாலையில் தை மாதம் "படி அளக்கும் உற்சவ"த்தையும் அனுபவித்துவிட்டு பெங்களூர் வந்து சேர்ந்தேன்.
ரிடையர் ஆன பிறகு ஸ்ரீரங்கம் வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை நினைத்துக்கொண்டேன்.
மேலும் சில படங்கள்:

அடடா.. தெரியாம போச்சே.. நீங்க வந்தது..
ReplyDeleteநீங்கள் ஸ்ரீரங்கமா ?
Deleteஉங்கள் பதிவு சிறப்பாக உள்ளது . புகை படத்தில் நானும் இருப்பது விசேஷம் ..
ReplyDeleteபல பேரை ஒரே நாளில் பாத்ததால் யாரையும் நினைவு வைத்துக்கொள்ள முடியவில்லை.
Delete//ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் சுற்றிப் பார்க்க ..// ஸ்ரீரங்கம் மட்டுமே ஒரு நாளில் பார்த்துமுடிக்க முடியாது என்று தெரிந்துகொண்டேன்! சுற்றியுள்ள பகுதிகளையும் பார்த்துவிட்டு எழுதவும்.
ReplyDelete//..உற்சவர் அழகைப் பாருங்கள் கண்ணின் வேட்டியை விலக்கிக் காண்பித்தார். இடது பக்கம் இருந்த தாயார் காலுக்கு கீழே அவருடைய நீக்கியா மின்னியது.// 'கண்ணின் வேட்டி ', ' நீக்கியா' - இரண்டும் புரியவில்லை.
//சுவடுகள் அழிந்துக்கொண்டிருக்கின்றன என்பது வேதனையாக இருக்கிறது// - நீங்களே அதற்கு முன் எழுதியது - // டிகோட் செய்தால் ஒரு பிடி அரிசி கொடுத்தேன் விளக்கு ஏற்ற எண்ணை தந்தேன் போன்றவைதான் இருக்கும் என்று நினைக்கிறேன் !//
முரண்!
-ஜெ .
அன்புள்ள ஜெ, ஒரே நாளில் பார்க்க முடியாது என்பது உண்மை தான். ஒழுங்காக சுற்றி பார்க்க ஒரு வாரம் வேண்டியிருக்கும்.
Deleteகோவிலில் பல இடங்களில் மாற்றங்கள்....
ReplyDeleteம்ம்ம்....
// கோயில் மேப்புடன், 'திருவரங்க உலா' என்ற அருமையான கையேடு ஒன்றையும் தயாரித்துக் கொடுத்திருந்தார்//
இந்தப் புத்தகம் கிடைக்குமா? கிடைக்குமிடம் தெரிவித்தால் வாங்க வசதியாக இருக்கும்.... சொல்லுங்களேன்.
அந்த புத்தகம் Only for Private Circulation.
Deleteசார், கடைசி படத்தில் இருக்கும் பாரிஜாத பூ,மேல உத்திர வீதியிலே எடுத்ததுதானே ?
ReplyDeleteசார், கடைசி படத்தில் இருக்கும் பாரிஜாத பூ,மேல உத்திர வீதியிலே எடுத்ததுதானே ?
ReplyDeleteIf you will provide a PDF version of "thiruvaranga ulaa", it will be of great help to all. Thank you for the information. The writing reminds me of Sujatha, the great one
ReplyDeleteDear Radhika, The handout was for private circulation only as it has some copyright material. The one which I had written in that I am planning to bring it as a small book. I will share the details once it is ready.
DeleteHello Sir, Please send me one copy of Thiruvaranga Ula to me also at gurusamy.rengasamy@gmail.com
Delete//he one which I had written in that I am planning to bring it as a small book. I will share the details once it is ready.//
ReplyDeletePlease do.. that will be great.
Hi Desikan,
ReplyDeleteGlad to have met you during the trip.
Nice to see you've brought out the essence of our trip in a single post!
//உடைவர் சந்நிதியின் மேற்கூரையில் பல நாயக்கர் கால ஓவியங்கள் காமிக் ஸ்டிரிப் வடிவத்தில் உள்ளன. எல்லாம் ஒழுங்காகப் பாராமரிக்கப்படாமல் அழிந்து போய் இன்னும் கொஞ்ச நாளில் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும் என்று நினைக்கிறேன். கொஞ்சம் நேரம் என்ன கதையாக இருக்கும் என்று பார்த்து யோசித்துக்கொண்டே போனதில் கழுத்து வலித்தது.// - I was behind you and we were the ones discussing on those frescoes! :)
Bhusha's INDIA TRAVEGUE
அன்புள்ள தேசிகன்,
ReplyDeleteவ்ணக்கம். கோவில் மேப் ஒன்னு இருந்தால் நல்லா இருக்குமுன்னு இப்போதான் துளசிதளத்தில் எழுதி இருந்தேன். போனவருசம் செப்டம்பர் மாதம் அரங்கனை ஸேவிக்கப்போன பயணம் இப்போதுதான் துளசிதளத்தில் தொடராக வந்து கொண்டிருக்கின்றது.
அந்த மேப் ஒன்னு எனக்கு(ம்) கிடைக்க ஏதாவது வழி உண்டா?
அந்த மேப் காப்பி அனுப்ப பார்க்கிறேன். உங்க முகவரியை எனக்கு அனுப்புங்கள். சின்னது செய்து PDF அல்லது ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன்.
Deleteenakum ondru pls! ram1903@yahoo.co.in
Deleteரொம்ப நன்றி தேசிகன்.
ReplyDeletegopal.tulsi@gmail.com
please also send me one sampathmv@gmail.com
ReplyDelete