திருச்சியில் இருந்த போது எங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் வேலிகளை சுற்றி கரும் பச்சை இலைகளுடன் செடிகள் இருக்கும். ஒரு முறை பாட்டி "இந்தத் தழைகளை ஆடு சாப்பிடாது அதனால் இதற்கு 'ஆடு தொடா இலை' என்று பெயர்" என்றாள்.
சின்ன வயதில் இதை நம்பாமல் "என்ன ஆடு சாப்பிடாத தழைகளா?" என்று சில தழைகளை பறித்துக்கொண்டு ஆடுகளைத் தேடித் "சாப்பிடு" என்று சொன்ன போது ஆடுகள் முகர்ந்துவிட்டு சாப்பிடாமல் போய்விட்டது. "ஆட்டுக்கு அதைச் சாப்பிடக்கூடாது என்று யார் சொல்லித்தந்தது" என்று பாட்டியிடம் கேட்ட அந்த கேள்விக்கு இன்று வரை பதில் கிடைக்கவில்லை. எந்த ஊர் ஆடுகளாக இருந்தாலும் அந்தத் தழைகளைச் சாப்பிடாமல் போய்விடும். இயற்கை.
தாவரவியல் பெயர் Adhatoda vasica Nees. நீட்டமான இலைகளும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய புதர்ச்செடி ( Shrub ) வகையைச் சார்ந்தது. எல்லா இடங்களிலும் இருந்த இந்தச் செடி இப்போது கிராமங்களில் மட்டும் தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். சில வாரங்களுக்கு முன் கும்பகோணத்தில் திருக்கண்ணமங்கை கோவிலுக்கு ஏதோ ஒரு கிராமம் வழியாகப் போகும் போது இந்தச் செடிகளும் எங்களுடன் கூடவே வந்துக்கொண்டு இருந்தது.
கபம், பித்தம், ஆஸ்துமா போன்ற வியாதிகளுக்கு இது அரிய மூலிகையாகப் பயன்படுகிறது. இதைத் தவிர இந்த மூலிகை இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தாகவும் இருக்கிறது. சென்னை மாநகராட்சி மூலிகைப் பூங்காத் திட்டதில் இந்த மூலிகையைப் பயிர் செய்யப் போவதாகச் செய்தி படித்து மகிழ்ந்தேன்.
பாட்டிகளும், பூங்காக்களும் அறிதாகி வரும் சூழலில், நம் குழந்தைகளுக்கு இந்த செடி கொடிகளைப் பற்றி நாம் தான் சொல்லித்தர வேண்டும்.
- 0 - 0 - 0 - 0 -
கூடு இதழுக்காக வாரா வாரம் சிறுகதை ஒன்றை எழுதுவதற்கு சில சிறுகதைகளை படித்துவிடுகிறேன். ரிச்சர்டு ஹார்ட்விக் (Richard Hardwick) எழுதிய ஒரு சிறுகதையை படித்தேன். இவர் ஹிட்ச்காக் சிறுகதை தொகுப்பில் சில சிறுகதைகளை எழுதியுள்ளார். ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்த்துள்ளார், அதிலிருந்து ஒன்று இந்த வாரம்.
கதையில் மூன்றே பேர் அப்பா, அவருடைய இரண்டு மகன்கள் - பால், ரோஜர்.
பாலுக்கு பன்னிரண்டு வயது, அவன் தம்பி ரோஜருக்கு பதினோரு வயது. அந்த வயசிலேயே அவர் அப்பா இரண்டு பேருக்கும் பாடம் சொல்லித்தரத் தொடங்கிவிட்டார். வாழ்க்கையில் எப்படி முன்னேறலாம், எப்படி பணம் சம்பாதிக்கலாம், எப்படி வட்டி வாங்க வேண்டும், எப்படி சம்பாதித்த பணத்தைக் காப்பாத்த வேண்டும், பெரிய பதவிகளை எப்படி அடைய வேண்டும். இப்படிப் பல பாடங்கள்.
இருவரும் அப்பாவிடம் பாடம் கேட்டுக்கொண்டாலும், பால் அசடு. ரோஜர் புத்திசாலி. ரோஜர் கற்பூரம் போல எல்லாவற்றையும் சட்டுனு புரிந்துக்கொள்ளுவான். இருவரும் ஒரே வகுப்பு. பள்ளியில் எப்போதும் ரோஜர் தான் தான் முதல் ரேங்க். பரிட்சையில் பால் ரொம்ப கஷ்டப்பட்டுப் தான் படித்தான். ஆனால் எவ்வளவுதான் அவன் படித்தாலும் தம்பியை போல முதன்மையாக வர முடியவில்லை. இரண்டு பேரும் ஹைஸ்கூல் படிப்பை முடித்தார்கள்.
"அப்பா நான் தொழில்கல்வி ஏதாவது கற்றுக்கொள்கிறேன்" என்றான் பால். அப்பா சிரித்துவிட்டு உனக்கு எப்படி தொழில் கல்வி எல்லாம் வரும். நீயோ மக்காக இருக்கிறாய் என்று இருவரையும் ஒரே கல்லூரியில் சேர்த்தார். இவர்களின் அப்பா கல்லூரிகளுக்கு நிறைய உதவி செய்துள்ளார் அதனால் எதற்கு வம்பு என்று பால் பாஸ் பண்ணும்படி மார்க் போட்டார்கள் கல்லூரி பேராசிரியர்கள். ரோஜர் படிப்பில் பேராசிரியர்களைத் திகைக்க வைத்தான்.
அப்பா இருவரையும் தன் வங்கியில் கேஷியராக வேலைக்கு அமர்த்தினார். ஆறே மாதத்தில் ரோஜர் தன் திறமையால் பல பெயர் பலகைகளைச் சம்பாதித்தான். அடுத்த ஆறு மாதத்தில் அஸிஸ்டெண்ட் வைஸ் பிரஸிடெண்ட் என்ற போர்ட் அவன் அறை வாசலில் மினுமினுத்தது.
பால் கேஷியராகவே இருந்தான். ஒரு நாள் அவன் அப்பா "வேற எந்த வேலைக்கு தான் நீ லாயக்கு?" என்று கோபமாக பேச. பால் "எனக்குத் தொழில் கல்வி தான் வரும் என்று நினைக்கிறேன். இந்தக் கூட்டல் கழித்தல் எல்லாம் எனக்குக் கஷ்டமாக இருக்கு" என்று மீண்டும் சொன்னான்.
பால் வங்கியின் வெவ்வேறு டிபார்ட்மெண்டில் போட்டுப் பார்த்தார் அவன் அப்பா. ஆனால் பிரோயஜனம் எதுவும் இல்லை.
ஒரு நாள் பால் "உங்கள் பர்சிலிருந்து ஐம்பது டாலர் எடுத்துக்கொண்டு போகிறேன். 6% வட்டியுடன் விரைவில் திருப்பித் தருகிறேன்" என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு வீட்டை விட்டுப் போகிறான்.
ஒரு வருடம் கழித்து பால் அப்பாவிற்கு 50 டாலர் அனுப்பியிருந்தான். கூடவே கடித்ததில் உங்கள் அறிவுரைகளை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தான். வருடா வருடம் கிறிஸ்துமஸின் போது பால் வாழ்த்து அட்டை ஒன்றை அனுப்புவான். மற்றபடி பாலைப் பற்றி எந்த விதத் தகவலும் இல்லை.
பதினைந்து வருடங்கள் கழித்து ஒரு நாள் கருப்பு நிற பெரிய கார் ஒன்று வங்கிக்கு உள்ளே வந்து நிற்கிறது. சனிக்கிழமை. வங்கி விடுமுறை. அப்பாவின் முன் வந்து நிற்கிறான் பால். அவருக்கு யார் என்று அடையாளம் தெரியாமல்
"யாரது?" என்று எரிச்சலுடன் கேட்க
"நான் தான் அப்பா பால்"
ஆச்சரியப்பட்டு "உன்னை பார்த்தால் வசதியானவன் மாதிரி தெரிகிறது. உன்னை பற்றிச் சொல், உன் தொழில் என்ன? எங்கே தங்கியிருக்கிறாய், நிறையப் பேச வேண்டும்" என்று கேட்க, "ஒரு நாள் பிஸினஸாக வந்துள்ளேன். நிறைய நாள் தங்க முடியாது. வாழ்கையின் உச்சத்துக்கு வர வேண்டும் என்று அடிக்கடி சொல்வீர்கள். எப்படியோ கஷ்டப்பட்டு உச்சத்துக்கு வந்துவிட்டேன். சிரமம் வரும் போது எல்லாம் உங்க அறிவுரையை நினைத்துக்கொள்ளுவேன்"
"பிரமாதம்! பிரமாதம்" என்று அப்பா கைதட்டி விட்டு "என்ன பிஸினஸாக வந்திருக்கிறாய் ?"
"உங்களுடன் தான் பிஸினஸ்"
"என்ன? என்னுடன் பிஸினஸா ? அப்படி என்ன பிஸினஸ்?"
"இதோ இது தான்" என்று பால் தன் பையில் கையை விட்டு ஒரு ரிவால்வர் எடுத்து
"நீங்க உட்கார்ந்து இருப்பது நல்லது அப்பா. வலிக்கிற மாதிரி எதுவும் செய்ய மாட்டேன். அப்படி யாரையும் நான் கொல்லுவதில்லை.." என்று கூற
அப்பா ஒன்றும் செய்ய முடியாமல் தடுமாறி கதவை திறந்துக்கொண்டு அடுத்த அறைக்கு செல்லுகிறார். அந்த அறைக்கதவில் "ரோஜர் - வைஸ் பிரஸிடெண்ட்" என்று இருக்க "ரோஜர் ரோஜர்" என்று தட்டுகிறார்.
பால் நிதானமாக "ரோஜர் வைஸ் பிரஸிடெண்ட்" என்று போட்டிருந்த பலகையை சுட்டிக்காட்டி "எங்கள் நிறுவனத்துடன் காண்ட்ராக் செய்து கொண்டவர் இவர் தான்".
"என்ன?" என்று அப்பா கேட்க
"எத்தனை நாளைக்கு தான் வங்கியில் வைஸ் பிரஸிடெண்ட்டாகவே இருப்பது என்று எங்கள் கம்பெனியுடன் காண்டரக்ட் செய்துக்கொண்டார்"
தொழிலில் தேர்ந்தவனாக பால் ரிவால்வரின் விசையை அழுத்தினான்.
- 0 - 0 - 0 - 0 - 0 -
வீட்டில் விளக்குப் போட்டுவிட்டு பால்கனிக் கதவைத் திறந்து வைத்தால் பூச்சிகள் விளக்கு வெளிச்சத்துக்கு உள்ளே வந்துவிடுகிறது. இதில் கூட பாஸிடிவ் நெகடிவ் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? இதற்கு போட்டோ டாக்ஸிஸ் (phototaxis) என்று பெயர் - ஒளியை நோக்கி வருவதும் போவதும். பாஸிடிவ் நெகடிவ் என்று எப்படி கண்டுபிடிப்பது ? ரொம்ப சுலபம் - விட்டில் பூச்சிகள் பாசிடிவ். அடுத்த முறை விளைக்கை போடும் போது பாருங்கள் கரப்பான் பூச்சிகள் எல்லாம் ஓடிவிடும். இவை நெகடிவ்.

Desikan sir, very happy to read the article. I also went to thriukannamangai on 5th of this month. but next time i will check out for the leaves. We need to educate not only children, but elders also.
ReplyDeletePlease let me know the name of the book by Ra.ki rangarajan. I would like to buy the book.