. ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
சென்ற வருடம் ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் குறித்து எழுதியதும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் உங்களுக்கு நினைவு இருக்கலாம். பலர் அந்தப் புத்தகம் வேண்டும் என்று நேற்று மத்தியானம் வரை ‘புத்தகம் எப்போது வரும்’ என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாகப் புத்தகத்தைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈட்டுப்பட்டு 90% வேலைகள் நேற்றுடன் முடிந்தது. மொத்தமாக ’பிரிண்டவுட்’ எடுத்து இன்று காலை அதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. புத்தகம் பற்றிய விபரம் மற்றும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை கீழே தந்துள்ளேன்.
என்னிடம் ஏற்கனவே பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ?
இது பதம் பிரித்த பிரபந்தம்.
பதம் பிரித்த பிரபந்தமா ? அதில் என்ன உபயோகம் ?
சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.
ஒரு படத்தில் 460 - 8 என்று இருக்கிறது இன்னொன்றில் 460/5.3.8 என்று இருக்கிறதே ?
460 என்பது வரிசை எண் ( சீரியல் நம்பர் ) 5.3.8 என்பது ஐந்தாம் பத்து மூன்றாம் திருமொழி எட்டாம் பாட்டு 5.3.8 என்பதைக் குறிக்கும். பாடலை உடனே தேடுவதற்குச் சுலபமாக இப்படித் தந்துள்ளோம்.
புத்தகத்தில் வேறு வேறு என்ன விசேஷம் ?
ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வாழி திருநாமங்கள், அவர்களுடைய திருநட்சத்திரம் அத்துடன் ''க்யூ ஆர் கோடு' ( QR Code ) உடன் 108 திவ்ய தேச குறிப்புகள் இடம்பெற்றிருக்கிறது.
அது என்ன க்யூ ஆர் கோடு ?
பார்க்கப் படம் அதில் உள்ளதை உங்கள் மொபைலில் ’ஸ்கேன்’ செய்தால் திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அதைச் சுற்றிய திவ்ய தேசங்களை ஜிபிஎஸ் வசதியுடன் சென்று சேவித்துவிட்டு வரலாம். 108 திவ்ய தேசங்களுக்கும் இது போல இருக்கிறது.
108 திவ்ய தேசமா ? 106 தானே போக முடியும் ?
ஆமாம் 106. கையில் இந்தப் புத்தகம் இருந்தால் மற்ற இரண்டும் சுலபம்.
எவ்வளவு பக்கங்கள் ?
800 பக்கங்கள்.
ஏன் அவ்வளவு பக்கங்கள் ?
மூக்கு கண்ணாடி இல்லாமல் படிக்க வசதியாகப் பெரிய எழுத்தில் வார்த்தைகளுக்கு இடையிலும், வரிகளுக்கு இடையிலும் ’பிசினஸ் கிளாஸ்’ டிக்கெட் போல இடம் விட்டு கொஞ்சம் தாராளமாகக் கொடுத்துள்ளோம். இதைத் தவிர எந்தப் பக்கத்திலும் 8 அடி உள்ள பாசுரங்களை ஒரு பக்கத்தில் நான்கு அடியும் அடுத்த பக்கத்தில் நான்கு அடியாகக் கல்யாண இலை வாழைப்பழம் போல வெட்டாமல் முழுசாக கொடுத்துள்ளோம். ( மாதிரி பக்கம் கீழே )
800 பக்கங்கள் என்றால் எடை அதிகமாக இருக்குமோ ?
ஐபாட் உதவியுடன் சந்தை படிக்கும் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு, புத்தகத்தின் எடை ஐபேட் மாதிரி குறைவாக இருக்க வேண்டும் என்று ‘maplitho yellow book printing paper'ல் 14cm x 24cm அளவில் பிரிண்ட் செய்யத் திட்டம்,
எல்லாம் சரி, புத்தகத்தின் விலை பிசினஸ் கிளாஸ் போல அதிகமாக இருக்குமோ ?
ஆழ்வார் பாசுரங்களுக்கு விலை வைத்து விற்பது அபசாரம். அவை விலை மதிப்பற்றது. 800 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை அச்சடிக்கும் செலவு ரூபாய் 300. அதையே நீங்கள் தந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வளவு பிரதிகள் அச்சடிக்கத் திட்டம் ?
தற்போது 500 பிரதிகள் அச்சடிக்கத் திட்டம். புத்தகத்துக்கு நன்கொடை மற்றும் 500 மேற்பட்டவர்கள் விருப்பப்பட்டால் தான் ரூ300க்கு குறைவாகக் கொடுக்க முடியும்.
எந்தப் பதிப்பகம் ?
‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலமாக பிரசுரிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
புத்தகத்தை எப்படிப் பெறுவது ?
சுலபம்.
Your Name :
Address:
Phone No :
How many books you need :
என்ற விபரங்களை rdmctrust@gmail.com மெயில் அனுப்பிவிட்டு புத்தகத்துக்கான தொகையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.
Name: Ramanuja Desika Munigal Charitable Trust
STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034
( For overseas account transfer, pl send a message in inbox )
நன்கொடை அனுப்ப என்ன செய்ய வேண்டும் ?
Your Name :
Address:
Phone No :
Donation amount :
விபரங்களை rdmctrust@gmail.com மெயில் அனுப்பிவிட்டு நன்கொடையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.
Name: Ramanuja Desika Munigal Charitable Trust
STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034
( For overseas account transfer, pl send a message in inbox )
கூகிள் பே/UPI மூலம் அனுப்ப முடியுமா ?
முடியும்.
Bank Name, A/C Number IFSC number கொடுத்து அனுப்பலாம்.
புத்தகம் எப்படி அனுப்புவீர்கள் ?
சென்னை, பெங்களூர், திருநெல்வேலி, மதுரை... போன்ற இடங்களில் என் நண்பர்கள் உதவியுடன் கூரியர் சார்ஜ் இல்லாமல் அனுப்ப முடியுமா என்று பார்க்கிறேன். இல்லை இருக்கவே இருக்கிறது கூரியர்/ஸ்பீட் போஸ்ட்.
பணம் அனுப்பிவிட்டேன். எனக்கு எப்போது கிடைக்கும் ?
பிழை திருத்தம் செய்துகொண்டு இருக்கிறோம். மார்ச் ஏப்ரல் மாதம் வெளி வந்துவிடும்.
வேறு ஏதாவது ... ?
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கி அடியேன் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஸ்ரீ பி.எஸ்.ஆர் என்ற ‘கடுகு’ அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- சுஜாதா தேசிகன்
27-02-2021
மாசி மகம். ஸ்ரீ மணக்கால் நம்பி திருநட்சத்திரம்
Dhanyosmi swami. Adiyen Hari
ReplyDeleteUPI payments (from Amazon / Gpay) could be made to this account by choosing send monty to bank , and entering the account number, name and IFSC number.
ReplyDeleteஅருமை,ஸ்வாமிகள்.உன்னதமான கைங்கர்யம்.பிழைகள் தவிர்க்க விஷயம் தெரிந்த பெரியோர்பலரும்பங்களித்தால் நன்றாக இருக்கும்.சில இடங்களில் பதங்கள் அதிகமாக பிரிக்கப்பட்டுள்ளது.கவனம் தேவை.
ReplyDeleteமுன்பு வந்த புத்தகத்தில் எப்படி இருக்கிறதோ அதே போல தான் வருகிறது. இருந்தாலும் கவனமாக தான் இருக்கிறோம். நன்றி. அடியேன்
Delete🙏
ReplyDeleteAppreciate your excellent effort in bringing out the 4000 in a easier readable format. Wanted to know if a soft copy will also be available.
ReplyDeleteThanks,
Srikanth
அருமை ஸ்வாமி. மிக பெரிய கைங்கர்யம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றியும் பேரன்பும்..
ReplyDeleteதிவ்யப் பிரபந்த நூலுக்கான தொகை செலுத்தி மின்னஞ்சல் முகவரிக்கு செய்தியும் அனுப்பி இருக்கிறேன்.
மிக்க அன்புடன்,
வளநாடு
சே.சுப்ரமணியன்.
நன்றியும் பேரன்பும்..
ReplyDeleteதிவ்யப் பிரபந்த நூலுக்கான தொகை செலுத்தி மின்னஞ்சல் முகவரிக்கு செய்தியும் அனுப்பி இருக்கிறேன்.
மிக்க அன்புடன்,
வளநாடு
சே.சுப்ரமணியன்.
மிக பெரிய கைங்கர்யம்.
ReplyDeleteதிவ்யப் பிரபந்த நூலுக்கான தொகை செலுத்தி மின்னஞ்சல் முகவரிக்கு செய்தியும் அனுப்பி இருக்கிறேன். என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அடியேன் தாசன்
Swamin
ReplyDeleteToday, I have remitted the money and also sent a mail
Thanks and regards
S. Syamsundar
Dhanyosmi.
ReplyDeleteநல்ல சேவை. ஏற்கெனெவே - திரு கடுகு சாரை வீட்டில் சந்த்திது அவர் கையெழுத்துடன் வாங்கி விட்டேன்- அது சில பல ஆண்டுகளுக்கு முன். இப்போது ஒரு புக்கிறகு பணம் அனுப்பிவிட்டேன். நன்றி - நடராஜன்
ReplyDeleteதங்களுடைய sujathadesikan.blogspot.com தொகுப்புகள் அனைத்தும் மிக சிறப்பு. தங்கள் பனி தொடர இனிய வாழ்த்துக்கள் . ரூபாய் 1000 அன்பளிப்பு அனுபியுள்ளேன். அடியேன் சஞ்சீவ்குமார்
ReplyDeleteswamin idhuku oru bashyamum apdiye sethu kuduthutta nanna irukkum...
ReplyDeleteOcerseas payment pls guide
ReplyDeleteYou can as your relatives/friends to pay in Indian Rs. The book can be sent to overseas and the delivery charge will be on actual's. You can send a mail to rdmctrust@gmail.com
Deleteswamin today tranferred by gpay for two Prabhandam pl.
ReplyDeletesundaram ulsoor.
Swami are the books available for purchase? You have published limited copies hence asking. Interested to buy.
ReplyDeleteWe have printed some extra copies. So send a mail to the trust with your requirements and we will reply. thanks.
Deleteநமஸ்காரம். அடியேனுக்கு 5 புத்தகங்கள் தேவைப்படுகிறது. சென்னை அல்லது ஶ்ரீரங்கத்தில் நேரில் பெற்றுக்கொள்ள வசதி உள்ளதா என தெரிவிக்கவும். நன்றி. ராமஸ்வாமி தாத்தம். 19-04-2021.
ReplyDeleteசந்தோஷம்! காத்துக்கொண்டு இருக்கிறேன். ஜீ பே மூலம் ரூபாய் 300+100 (நன்கொடை) இன்று அனுப்பியிருக்கிறேன். ஈமெயிலில் மற்ற தகவல்கள்.
ReplyDeleteநன்றி
ரங்கநாதன்