ஸ்ரீ
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திவ்யப் பிரபந்தமும், அநுபந்தமும் - அறிவிப்பு
கடந்த ஆண்டு ( 2022 ) ’ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம்’ ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடாக வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு கோவிட் இரண்டாம் அலையின் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் பலருக்கு அனுப்பப்பட்டது. ஆழ்வார்கள், ஆசாரியர்கள், தாயார், பெருமாள் அனுக்கிரஹத்துடன் எந்த தடங்கலும் இல்லாமல் சென்றடைந்தது.
கூடிய விரைவில் இரண்டாம் பதிப்பு பிரபந்தம் கூடவே அநுபந்தத்துடன் வரவிருக்கிறது என்பதை இந்தப் பங்குனி உத்திரம் நன்னாளில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்களுடைய கதைகளை திவ்யசூரி சரித்திரம் என்கிறோம். பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த தேசங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது திவ்யமாகிறது!
திவ்யப் பிர’பந்தம்’ என்ற வார்த்தையின் உள்ளே ‘பந்தம்’ அடங்கியிருக்கிறது. அந்த பந்தத்துக்கு தாயார் மிக முக்கியம். அநுபந்ததுடன் பிரபந்தமும் சேர்ந்தால் நிச்சயம் திவ்யமாக இருக்கும் !
அடிக்கடி கேட்க போகும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்திருக்கிறேன்.
ஏன் இரண்டாம் பதிப்பு ?
முதல் பதிப்பு மொத்தமும் தீர்ந்துவிட்டது. பலர் இன்னும் புத்தகம் வேண்டும் என்று கேட்பதால் இரண்டாம் பதிப்பு.
இதில் என்ன விஷேசம் ?
பிழைகள் திருத்தப்பட்டு, மேலும் பதங்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
பிரபந்தம் சரி, அது என்ன அநுபந்தம் என்ன ?
ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய பிரபந்தத்துடன், மேலும் சில விஷயங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால் அநுபந்தம் என்ற தனிப் புத்தகம்.
அநுபந்த உள்ளே என்ன இருக்கிறது ?
- திவ்யப் பிரபந்த அருஞ்சொல் அகராதி
- 108 திவ்ய தேச குறிப்புகளுடன் ஆழ்வார்கள் மங்களாசாசனப் பாசுரங்கள்,
- பாசுரப்படி இராமாயணம்,
- பாசுரப்படி பாகவதம்,
- அவதாரக் கதைகள்,
- திவ்யப் பிரபந்தக் குறிப்புகள்
- திருமாலின் திருநாமங்கள் ஆயிரம்
- இயல் சாத்து, சாற்றுமுறை ...
இரண்டாம் பதிப்புடன் அநுபந்தமும் சேர்ந்து வருமா ?
ஆமாம். இரண்டும் சேர்ந்து தான் வரும்.
என்னிடம் முதல் பதிப்பு இருக்கிறது, அநுபந்தம் தனியாக கிடைக்குமா ?
கிடைக்கும்.
புத்தகத்தின் விலை என்ன ? எப்படிப் பணம் அனுப்புவது ?
அவை விலை மதிப்பற்றது. அதனால் போன முறை போல, புத்தகத்தை அச்சடிக்கும் செலவு மட்டுமே தந்து புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அச்சடிக்கும் செலவு தெரிந்த பின் அறிவுப்பு வரும். அதனால் இப்போதைக்கு பணம் எதுவும் அனுப்ப வேண்டாம்.
முன் பதிவு செய்யலாமா ?
செய்யலாம். rdmctrust@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைப்பேசி எண் , எவ்வளவு புத்தகம் வேண்டும் என்று குறிப்பிட்டு ஒரு மெயில் அனுப்புங்கள். புத்தகம் தயாராகும் சமயம் தெரியப்படுத்துவோம்.
எனக்கு அநுபந்தம் மட்டும் வேண்டும் என்ன செய்ய வேண்டும் ?
rdmctrust@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி, தொலைப்பேசி எண், அநுபந்தம் புத்தகம் எவ்வளவு வேண்டும் என்று குறிப்பிட்டு ஒரு மெயில் அனுப்புங்கள். புத்தகம் தயாராகும் சமயம் தெரியப்படுத்துவோம்.
புத்தகம் எப்போது வரும் ?
வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 2-3 மாதங்கள் ஆகும்.
- சுஜாதா தேசிகன்
18.03.2022
பங்குனி உத்திரம்
Excellent adiyen.
ReplyDeleteExcellent! adiyen.
ReplyDeleteExcellent adiyen.
ReplyDeleteExcellent. I would like to have the anubandam . Please keep us informed
ReplyDeleteமிகவும் சந்தோஷமான செய்தி. இப்பதிப்பும் விரைவில் தீர்ந்து மூன்றாவது பதிவிற்கு வேண்டுகோள்கள் வரவேண்டும். 🙏🙏
ReplyDeleteஅற்புதம் தாஸன் Appreciate your great efforts spending your personal time other than office hours. Great swamin
ReplyDeleteவாழ்த்துகள் நலமும் வளமும்
ReplyDeleteநாளும் சூழ்க
வாழ்த்துகள்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteபதங்கள் இன்னும் பிரிக்கப்பட்டுள்ளதா?
Great job!
Sir - is your book available on Amazon Kindle (edition) For an aged man like me in kindle edition I could increase the size of the fond to read rather comfortable.. Pl. help - K.S.Subramanian My email. drsubramaniannirmala@gmail.com
ReplyDeleteDear Sir, We dont have any plans to bring online version now and in future.
DeleteWe feel that the book itself is sacred and needs to be worshiped.
Also the book should be used by generations.
thanks for your understanding.
எனக்கு முதல் பதிப்பு இரண்டாம் பதிப்பு, மற்றும் அனுபந்தம் இம்மூன்றும் வேண்டும்
ReplyDeleteEagerly Awaiting Sir🙏
ReplyDeleteJust a suggestion... Instead of mails can google forms be used.. users may forget details when sending mail
ReplyDeleteWe had thought about this but not many users are familiar with google forms . So we decided email which was an easy option.
DeleteExcellent. I have purchased 2 sets of the first edition. I too felt that the book can be made in 2-3 volumes separately from the handling point of view. Adiyen will send order for second edition by email. Earlier I had given an email. Thank you!
ReplyDelete