Skip to main content

சம்பிரதாயத்தை வளர்க்க…

சம்பிரதாயத்தை வளர்க்க… 
சமீபத்தில் சம்பிரதாய வைணவ இதழ் ஒன்றைப் படித்துக்கொண்டு இருந்தேன். அதில்

வடகலை தென்கலை என்ற எந்தப் பேதமும் இல்லாமல்  மணமகள்/மகன் தேவை என்ற விளம்பங்களில் பல ஒற்றுமைகளைப் பார்க்க முடிந்தது. 

பெரும்பாலும் எல்லாமே  'Kalai no bar’, ‘subsets no bar'  என்று கேட்பதில் ஒரு  ‘desperation’ பார்க்க முடிந்தது. நரசிம்மராவ் பிரமராக இருந்த சமயம் வெளிநாட்டுக்குச் சென்ற என் வயது ஐயங்கார்களின் குழந்தைகளுக்கு  ‘MS USA seeking US settled..' 'seeking at Toronto', 'H1B visa holder seeks employed/employable girl in USA' ' seeks bride willing to relocate in Bay area' ... என்று பல வண்ணத்துப் பூச்சிகளின் வேட்டை கண்ணில் பட்டது. 

விளம்பரங்களில் கலை பேதம் மறைந்து வெளிநாடு, உள்நாடு என்ற பேதத்தை மட்டுமே பார்க்க முடிகிறது.  வெளிநாட்டில் இருப்பவர்கள் வெளிநாட்டில் தேடுகிறார்கள். உள்நாட்டில் இருப்பவர்கள் இங்கேயே ஏதாவது கிடைக்குமா என்று தேடுகிறார்கள்.  இன்று  ’ஆமாவா’ என்று தமிழ் பேசும் 'மைசூர் ஐயங்கார்’ பிரிவு இருப்பது போல நாளை வெளிநாட்டு ஐயங்கார் என்ற பிரிவு வந்துவிடும். 

வைஷ்ணவர்கள் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு தங்கள் பெயரில் அர்ச்சனையே செய்ய சொல்லக் கூடாது என்று இருக்கும் போது இன்று சம்பந்தமே இல்லாத பரிகாரம், ப்ரச்னம் எல்லாம் செய்ய தொடங்கிவிட்டார்கள். 

ஒரு தலைமுறை சராசரியாக 25 ஆண்டுகள் என்கிறார்கள். அடுத்த தலைமுறை ஐயங்காருக்கு பெரும்பாலும் கலை என்றால் என்ன என்றே தெரியாமல், கல்யாணத்தின் போது ”என் தாத்தா (நாம தான்!) கல்யாண ஆல்பம் பார்த்துத் தான் நான் வடகலை என்று தெரிந்தது!” என்ற அந்த தலைமுறை கிட்டத்தட்ட ஹரே கிருஷ்ணா இயக்கம் போலக் காட்சி அளிக்கப்போகிறார்கள். 

இன்னும் 25வருடத்தில் கலை பேதம் என்பது அருளிச் செயல் கோஷ்டியிலும், கோயில் சுவற்றின் நாமத்தில் மட்டுமே இருக்கும். பெரும்பாலான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு, தமிழ் எழுதப் படிக்க தெரியாமல்(இன்றே தெரியாது), தாத்தா பாட்டி ஸ்கைப்பில் பேசும் போது சப்-டைட்டில் தேவைப்படும்.  தங்களுடைய ஆசாரியன் யார் என்பதே தெரியாமல், (ஆசாரியன் தனியன் எதிர்ப்பார்ப்பது டூமச்!). பஞ்ச சமஸ்காரம் போன்றவை கூட ஆன்லைனில் அர்ச்சனை செய்த அட்சதை போல தபாலில் வீடு வந்து சேர்ந்தால் ஆச்சரியப்பட கூடாது. 

பீட்சா ஆடர் செய்து, காத்திருக்கும் நேரத்தில் மடத்துக்கும் ஆசிரமத்துக்கும்  அனுப்பப்பட்ட ஐயங்கார் டாலர்கள் நித்தியப் பொங்கலாக கண்டருளப்பட்டு ஆழ்வார்கள் ஆசாரியர்கள் வளர்த்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் வளர்ச்சி அடையுமா ? என்ற கவலை அடியேனுக்கு இருக்கிறது. 

இதைப் படித்துவிட்டு என் மீது கோபம் கொள்ளாமல், உங்கள் குடும்பத்தில் யார் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் பற்றி நிதானமாக ஒரு காபி குடித்துவிட்டு யோசித்துப் பாருங்கள். அவர்கள் பெயர்கள் கூட உங்களூக்கு தெரியாமல் இருக்கலாம் !

- சுஜாதா தேசிகன்

4.3.2022

Comments

  1. Sir, with due respect, what is the necessity for such 'differences' in kalais etc to survive now? All these 'differences' came into existence at some point of time. Will also disappear over a period. why fret upon them? Taitriya Upanishad says 'Sa Ekaha'. Then why this 'Bedha Abedhas'? If we fail to reinvent ourselves, we will be washed over by floods. As I understand, the essence of Sri Vaishnavam is total surrender to God and respecting your Guru or Acharya more than the God. Should we not work hard and concentrate to pass on this to our next generation than worrying about preserving 'Kalais' etc.,

    ReplyDelete

Post a Comment