இந்த வாரம் விருந்தினர் ஸ்ரீரங்கத்து பெண் லக்ஷ்மியை அறிமுகப் படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லக்ஷ்மி தற்போது ஹைதராபாதில் ஒரு software கம்பெனியில் பணிபுரிகிறார்.
போன வாரம் "ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பானை பற்றி எழுதுங்களேன்" என்றார். "எனக்கு நேரம் இல்லை நிங்கள் எழுதுங்களேன்" என்று ஜகாவாங்கினே.
உடனே பேப்பர் பேனாவை எடுத்து, ராமஜெயம் போட்டு, எழுதி, ஸ்கேன் செய்து, ஈ-மெயிலில் எனக்கு அனுப்பிவிட்டார்!
எதையும் மாற்றாமல் ( மாற்ற முடியாது என்பது வேறு விஷயம்!) அப்படியே போடுவதில் ஒரு விதமான அழகு கலந்த nativity இருக்கு என்பதால் அவர் எழுதியதை அப்படியே போட்டுள்ளேன்.
அன்புடன்
தேசிகன்
[%popup(20050809-lakshmi_letter_1.jpg|750|1031|Lakshmi Letter ( Page 1 ))%] [%popup(20050809-lakshmi_letter_2.jpg|750|1031|Lakshmi Letter ( Page 2 ))%]
Old Comments from my previous blog.
எங்க ஊர்லயும் இந்த சொக்கப்பனை கொளுத்துறது, டயர் கொளுத்துறது உண்டு. ஆனால் சாமியை முன்வைத்தல்ல, (இன்றுவரை, ஏனென்றே தெரியாமல் - அல்லது இவங்க கடிதத்தை படிக்கும்வரை, கார்த்திகைனாலே அது மாதிரி கொளுத்துறதான் விஷய்ம்னு நெனச்சுட்டுருந்தேன்).
நேரில் பார்க்காத குறைய - படம்பார்த்தா மாதிரி, படம்புடிச்சிருக்கிறாங்க. கண்களை விரித்து அவங்க நேரில் பேசியதுபோல் தோன்றியது, படித்து முடித்தவுடன். அது, அவர்களின் இவ்வள்வுகால ஈடுபாட்டாலும், இந்தவருடம் பார்க்கமுடியாமல் போன பொருமலாலுமாய் இருக்கும்!
நன்றி உங்களிருவருக்கும்.
By அன்பு, at Thu Nov 25, 03:22:04 PM IST
தேசிகன்,
இதை அப்படியே ஸ்கேன் பண்ணிப்போட்டது நல்ல யோசனை. விவரிப்பு மிக இயல்பாக இருக்கிறது. எங்க ஊரிலும் கொளுத்துவார்கள். அன்பு சொன்னதுபோல கோவில் நிகழ்ச்சிகள் சம்பந்தப்பட்டதாக நினைவு இல்லை.
-காசி
By காசி (Kasi), at Fri Nov 26, 03:26:07 AM IST
////பெருமாள் புறப்பட்டு உபயநாச்சிமார் சகிதமா மலர்ப்பச்சை அலங்காரத்தோட (forgot the name for the outer Ulta 'U' shape coverage behind perumal. There is a good name for that)./////
அதுபேர் "திருவாசி". :) எப்பவும் ரெங்கநாதருக்கு தங்கத்துலதான் இருக்கும். அன்னிக்கி மட்டும் நெருப்பு சூடு தாக்காம இருக்கணும்னு கதிர்பச்சையும், பட்டுரோஜாவும் வெச்சு செஞ்சிருப்பாங்க. ரொம்ப அழகான கலர் காம்பினேஷன். அள்ளிண்டு போகும். பூ அலங்காரத்துல ஸ்ரீரங்கத்து சாத்தாரர்களை மிஞ்சினவங்க யாரும் இல்லை. என்னவோ போங்க, தேசிகன்; பெருமூச்சுவிட்டே நொந்துடுவேன் போல இருக்கு.
By Jsri, at Fri Nov 26, 08:01:37 AM IST
Comments
Post a Comment