Skip to main content

தித்திக்கும் திருப்பாவை - இரண்டாம் பதிப்பு

தித்திக்கும் திருப்பாவை - இரண்டாம் பதிப்பு




இந்த ஆண்டு(2023) ஏப்ரல் மாதம் திருப்பாவை ஜீயர் என்று நாம் அன்புடன் போற்றும் ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திர நன்னாளில் ‘தித்திக்கும் திருப்பாவை’ புத்தகத்தை வெளியிட்டோம். புத்தகம் வெளியிட்டு சில மாதங்களில் கோதை நாச்சியார் மீது உள்ள அன்பினால் எல்லாப் புத்தகமும் தீர்ந்துவிட்டது. 

இந்தக் கார்த்திகையில் கார்த்திகை நாளான நம் ஸ்ரீதிருமங்கையாழ்வார் திருநட்சத்திரம் அன்று இரண்டாம் பதிப்பு அச்சுக்குச் செல்லுகிறது. மார்கழி மாதத்துக்குள் உங்கள் கைகளுக்கு வந்து சேர ஆண்டாளை துணைக்கு அழைத்திருக்கிறேன்.

ஸ்ரீராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை இந்த முறை இப்புத்தகத்தைச் கிராமத்துச் சிறுவர்களுக்குப் பரிசாகக் கொடுக்க எண்ணியுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

அடியார்கள் முன்பு போல ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன். புத்தகத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தபால் செலவுடன் அதே ரூ100/- (நூறு ரூபாய்) தான். 

புத்தகம் பெற விரும்புகிறவர்கள். 

உங்கள் பெயர்/Name:
முழு முகவரி/Address:
தொலைப்பேசி எண்/Phone number:
தேவையான பிரதிகள்/Required copies: 

என்ற விபரங்களை rdmctrust@gmail.com மின்னஞ்சல் அனுப்பிவிட்டு புத்தகத்துக்கான தொகையைக் கீழே தரப்பட்டுள்ள டிரஸ்ட் அகவுண்டுக்கு அனுப்பவும். Pl also send the transaction details to rdmctrust@gmail.com so that it is easy for us to track.


Name: Ramanuja Desika Munigal Charitable Trust

STATE BANK OF INDIA,
BRIGADE METROPOLIS,
BANGALORE
Account no : 37954692708
Type: Current Account
IFSC Code:- SBIN0015034


அடியேன் தாஸன்
சுஜாதா தேசிகன்

Comments