Skip to main content

எனது முதல் பதிவு

என்னை சந்திக்கும் சிலர் கேட்கும் கேள்வி - ஏன் இன்னும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கவில்லை ? என்பது தான். எதாவது ஒரு காரணம் சொல்லி மழுப்புவேன். காரணம் இதுதான் - எழுதுவதற்கு முதலில் சரக்கு வேண்டும் அது என்னிடம் இல்லை. அடுத்ததாக நேரம்.


பல வலைப்பதிவுகளை பார்த்தபின் மேலும் பயமாக இருக்கிறது. வலைப்பதிவுகள் மிக அழகாக வடிவமைக்க பட்டுள்ளது. உதாரணம் காசி, பத்ரி, வெங்கட் மற்றும் பலர்.


என்ன எழுதுவது ?


இந்த கேள்வி தான் நான் வலைப்பதிவு ஆரம்பிப்பதற்கு தடையாய் இருக்கிறது. கடைசியாக எதாவது சமையல் குறிப்பு கொடுக்கலாம் என்றால் ஷைலஜா இலை போட்டு முந்திக் கொண்டுவிட்டார். ஒரு முறை பத்ரியை சந்தித்த போது என்னப்பா எழுதுவது ? என்று கேட்டேன், அவர் நீ எதுக்குப்பா எழுதணும் எதாவது படம் போடு என்றார். ('அந்த மாதிரி (படம் போடும்) கண்றாவியெல்லாம் நான் செய்வதில்லை' என்று சமீபத்தில் அவர் வலைப்பதிவில் பார்த்தேன்! )


சிலர் ஜிமெயில் இலவசமாக கிடைக்கிறது ஆரம்பி என்று மெயில் அனுப்பினார்கள்.


ஒருவழியாக இன்று ஆரம்பித்துவிட்டேன்!. கடந்த ஆண்டு (2003) ஆகஸ்டு, செப்டம்பர் மாதம் சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து கதைகளுக்காக' நான் சுமார் 35 படங்கள் வரைந்தேன். அதை சில சரித்திர குறிப்புக்களுடன் என் ஸ்ரீரங்கத்து அனுபவம் கலந்து கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.


என்னுடைய பதிவில் உள்ள நிறை/குறை, என்ன வேண்டும்/வேண்டாம் என்று எனக்கு தெரிவியுங்கள். சந்தோஷப்படுவேன்.


முடிக்கும் முன் ஒர் ஆழ்வார் பாடல்.


எழில் உடைய அம்மனைமீர்! என் அரங்கத்து இன்னமுதர்
குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர், கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர்; எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே


- நாச்சியார் திருமொழி( 608 )


மிக்க நன்றி.
தேசிகன்Old Comments from my previous blog. 
Post by Mathy Kandasamy
Welcome to Tamil blogs Desikan. unga Oviyangalaiyum pOdunga pls.
Wed, May 19 2004 9:50


Post by Jsri
வாழ்த்துகள் தேசிகன். நல்ல ஆரம்பம். முதல் பக்கம் 'வாரீகளா?' உங்கள் blog என்பதைச் சொல்கிறது. ஒரு ஓவியரின் வலைபதிவின் முதல் பக்கம் உங்கள் ஓவியம் ஏதாவது இடலாமே. நாச்சியார் திருமொழி என்பதோடு எழுதியவர் 'ஆண்டாள்' என்பதையும் குறிப்பிடுங்கள். முடிந்தால் சிறியதாக பாடல்களுக்குப் பொருள் எழுதிவிடுங்கள். மீண்டும் வலைபதிவிற்கு வாழ்த்துகள்!!
Wed, May 19 2004 9:50


Post by Bala Subra
வாழ்த்துக்கள் தேசிகன் சார்... சுஜாதாவின் கதைகளை வாரத்திற்கு ஒன்றாக அறிமுகம் செய்யலாமே? அமைப்பு நன்றாக இருக்கிறது.
Thu, May 20 2004 4:40


Post by Pari
One suggestion though. Please use blogger's comment service. HaloScan comments are limited by byte size.
Thu, May 20 2004 7:43


Post by Pari
welcome Desikan!
Thu, May 20 2004 7:43


Post by Desikan
Jsri - Thanks for your comments. Mathy - I will definetly include some OviyangkaL appropriately. BalaSubra - enna kodukka mudiyum enRu pArkiREn. Pari - Initially I used Blogger comments, but there is a small catch - only people who have blogger account can enter their comments. Those who don't have an account need to enter their comments as anonymous , this is a reason I moved back to Haloscan. Correct me if I am wrong.
Thu, May 20 2004 5:32


Post by sivasankar
good desikan, its a good try and well , update your page once in a week atleast with some of the sujatha's matters , expecting more with the aandaal paasurams , srirangathu devathaikal, nila,sipi, etc...keep it up.. anbudan, Dr.M.Sivasankar.Ph.D IIT G, North Guwahathi, Assam. India.
Thu, May 20 2004 7:31


Post by Pari
You are right about blogger comments. It's stupid on their part to expect everyone to have a blogger account(inspired Microsoft? :-) ). There is a work around for it, i.e. post as anonymouse, but sign off with the name. But we can't expect everyone to be aware of this. However you can enable both. Whoever wants to post a lengthy comment can use that one.
Thu, May 20 2004 9:29


Post by Martin
Way to go Desikan! Expect your creations soon!
Fri, May 21 2004 5:33


Post by Badri
நல்வரவு! நான் ஓவியம் வரைந்தால் கண்றாவியாக இருக்கும் என்பதை அப்படிச் சொல்லிவிட்டேன். "சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்" என்பது போலத்தான்!
Tue, May 25 2004 5:33


Post by Lazy Geek
Ungal Varavu Nalvaravaguga.
Tue, May 25 2004 5:33


Tue Nov 02, 06:38:14 PM IST
Mukhilvannan said...
The beginning itself is very good.
The accounts of Srirangam outlined by you are of absorbing interest.
The quotes from Alwars' Paasurams are appropriate.
"Andal" ennai aandukondal.
Mukhilvannan

Comments