பிராண்டிங் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். அந்த பொருளின் மீது மக்களுக்கு ஒரு வித நம்பிக்கை ஏற்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளை இதில் கொட்டுகிறார்கள். எம்பிஏ படித்து இந்த களத்தில் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்க பல வருடங்களாக கட்டிக்காத்த ”இரண்டு நிமிட” நூடுல்ஸ் நம்பிக்கை இரண்டே நிமிஷத்தில் நூடுல்ஸ் ஆனது. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நடிகர் அல்லது நடிகையை அழைத்து திரும்பவும் அதே பொய்யை சொல்லி அவர்களுடைய பிராண்ட் இமேஜை மீட்க பல கோடிகள் செலவாகும்.
போன வாரம் இரவு 11:45மணிக்கு தனியாக காரில் வந்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரத்தில் சிகப்பு, நீல நிற விளக்கு சிமிட்டிக்கொண்டு நின்ற காவல்துறை வண்டி. அதிகாரிகள் கை அசைத்து கார், பைக்கில் பயணம் செய்யும் எல்லோரையும் குடிபோதையில் வண்டி ஓட்டுகிறோமா என்று ஒரு ஸ்டிராவில் ஊதச் சொல்லி பரிசோதனை செய்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு முன்னால் ஓர் ஆடி கார் ஊதிவிட்டு புறப்பட்டது. அடுத்து நான். என்னை பார்த்துவிட்டு நீங்க ஊத வேண்டாம் போகலாம் என்று அனுப்பிவிட்டார்.
என் நெற்றியில் நான் தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீசூர்ணம் தான் காரணம்.
ஸ்ரீபெரும்புத்தூர் என்ற சின்ன இடத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜர் செய்த ஸ்ரீவைஷ்ணவ பிராண்டிங் இது இன்னும் நிலைத்து நிற்கிறது.

So many Brahmins also drink but police still go by old values. Brahmins should not spoil the good image. Fun is I know that some women of the community also drink. Probably they check drivers who are on the roads after 10.30 pm.that is after TASMAC closes I think.
ReplyDeleteHi....can u compare two minute noodles branding with the Pavithra and holy Srichoornam.....wat a stupidity.....
ReplyDelete