நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் சென்று இருந்தேன்.
கோயில் வாசலில், வயதான ஒரு பெண்மணி பழைய பெயிண்ட் டப்பாவில் தண்ணீர் வைத்துக்கொண்டு தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் நம்மாழ்வார், உடையவர், பெருமாள் சிலைகளுக்கு கையால் திருமஞ்சனம் செய்துக்கொண்டு இருந்தார்.
பேச்சு கொடுத்தேன்.
“உன் பேர் என்னம்மா ?”
அவளுடைய பெயரை இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லேசாக சிரித்துவிட்டு
“ஆனந்த வள்ளி” என்றாள்.
”தினமும் இந்த மாதிரி தண்ணி தெளிப்பையா ?”
“ஆமாங்க.. தூசியா இருக்கு, ஜனங்க எதையாவது தடவுறாங்க. சிலபேர் விளக்கு வைக்கிறார்கள்..அழுக்காகுது... அதனால் தினமும்”
“இந்த ஊரா ?”
“இல்லை பக்கத்துல சுங்குவார்சத்திரம்.. காலையில எட்டு மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் எழு மணிக்கு கிளம்பிடுவேன்”
“தினமுமா அங்கிருந்தா வர ?”
“ஆமாம்.. நாளைக்கு(இன்று) திருவாதிரை சீக்கிரம் வரமுடியாது...அதனால இங்கேயே பக்கதுல ஒரு மண்டபத்துல படுத்துப்பேன். கையில ஒரு செட் துணி இருக்கு”
கொஞ்சம் நேரம் கழித்து
“இந்த மாதிரி தண்ணி ஊத்தினா மழை வருது...”
”அப்படியா?”
“நிஜம்தாங்க”
”மழைவந்தா ஆந்த தண்ணியைக் கொண்டு கோயில் முழுக்க இருக்கும் தூண்களை சுத்தம் செய்துவிடுவேன். தரை எல்லாம் கழுவிவிடுவேன்”
என்ன ஒரு சிறப்பான கைங்கரியம்
Good...you shown her impeccable service which is truly admirable
ReplyDeleteI'm follower of your blog and admire your writing but ,Sorry one thing is bothering
உன் பேர் என்னம்மா ?”
”தினமும் இந்த மாதிரி தண்ணி தெளிப்பையா ?
தினமுமா அங்கிருந்தா வர ?”
முகநூலில் நீங்கள் கேட்ட மாதிரி இன்னொருவரும் கேட்டிருந்தார். அவருக்கு நான் சொன்ன பதில் இது - ”என் அம்மாவிடம் அப்படி தான் பேசுவேன். அப்படியே பேசினேன்”
DeleteGood. Have you been to Kattavakam ( Lord Lakshmi Narasimhar) near Wallajahbad. I heard its superb temple.
ReplyDeleteI planning to visit in the coming days.