விக்கிரமாதித்தன் 'சிம்ரன் சின்னத் திரையை' பார்த்து அழுதுகொண்டு இருந்தான்.
"சீரியல் பார்க்காதேன்னு எவ்வளவு முறை சொல்றது?" என்று எட்டிப்பார்த்தது வேதாளம்
"சீரியல் பார்த்தாலும் வாத்தியார் நினைவு வருது என்ன செய்ய"
வேதாளம் பச்சையாக ஏதோ காண்பித்தது. அதை விக்கிரமாதித்தன் பார்த்த போது,
இப்படி தெரிந்தது.
5 | 22 | 18 |
28 | 15 | 2 |
12 | 8 | 25 |
"இந்த மாதிரி பழைய விஷயத்தை எல்லாம் தூசு தட்டாதே, தும்மல் வருது" என்று விக்கிரமாதித்தன் சலித்துக்கொண்டான்.
வேதாளம் விடுவதாக இல்லை இது மாயக் கட்டம் இல்லை, மாயாஜால கட்டம்
"மேல உள்ள மாய கட்டங்களில் உள்ள எண்களின் ஆங்கில வார்த்தைகள் கொண்டு இந்த மாயா சதுரம் இங்கே இருக்கு பாரு"
விக்கிரமாதித்தன் பார்த்தான்
five (4) | twenty-two (9) | eighteen ( 8 ) |
twenty-eight (11) | fifteen (7) | two (3) |
twelve (6) | eight (5) | twenty-five (10) |
வேதாளம் தொடர்ந்தது.
"இந்த வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை கூட்டினாலும் மாயச் சதுரம் வருது பார்த்தையா ? "
"சரி இப்ப நான் என்ன செய்யனும் ?"
"இதே போல தமிழில் ஒரு மாயச் சதுரம் செய் பார்க்கலாம் " என்று சீரியலின் பிரேக் சமயத்தில் பறந்து போனது.
Comments
Post a Comment