Skip to main content

வின்க்ஸ் கிளப்

[%image(20090702-Winxclubandpixies.jpg|140|200|winx club)%]

"வின்க்ஸ் கிளப்?" என்றேன் ஒன்றும் புரியாமல்..


"இது கூட தெரியாதாப்பா உனக்கு!" என்று என் லேப்டாப்பை அபகரித்து, www.winxclub.com என்று டைப் அடித்துக் காண்பித்தாள்.


"என்னது இது?"
 
"இதோ இதுதான் நான் ஃபிளோரா."
 
"ஃபிளொராவா?"


"ஆமாம் ஸ்கூல்ல நான், ஐஸ்வரியா, வேதிக்கா எல்லாம் சேர்ந்து வின்க்ஸ் கிளப் ஆரம்பிச்சிருக்கோம்."


"ரோஹித் அந்த கிளப்ல இல்லையா?"


"நோ"


"அப்ப இது லேடீஸ் கிளப்பா?"


"லேடீஸ் இல்லப்பா. கேர்ல்ஸ்!"


"நேத்திக்கி ஸ்டெல்லா எனக்கு ஸ்டிக்கர் எல்லாம் கொடுத்தா"


"ஸ்டெல்லா?"


"நான் ஃபிளோரா. ஐஸ்வரியா தான் ஸ்டெல்லா. என்னப்பா நீ, இது கூட தெரியாதா?"


"சரி"


"அவ லன்ச் சாப்பிடரப்போ எனக்கு சப்பாத்தி எல்லாம் தருவா. ராஜஸ்தானி பிக்கிள் ரொம்ப நல்லா இருக்கும்பா"


"ஓ"


"அவ மதர்டங் தெலுங்கு. ஆனா அவ தமிழ்ல பேசுவா. அவ அப்பா வேற ஒரு கல்யாணம் செஞ்சுக்க போறாளாம்"


"அப்படியா?"


"அவ அம்மா மெண்ட்டல் ஆயிட்டாலாம்,  தம்பி மாதிரி படுக்கையிலேயே ஒன்னுக்கு எல்லால் போறாளாம்..."


"சரி பிரகலாதன் காமிக் எடுத்துக்கிட்டு வா, அந்தக் கதை சொல்றேன்"


"அவ சொல்றா ஏன் எனக்கு இப்படி எல்லாம் ஆர்து. அவ புது அம்மாவைப் பாத்தா அவளுக்கு பயமா இருக்காம்."


"நீ இப்ப தூங்கணும். சீக்கிரம் எழுந்து ஸ்கூல் போகணும், ரொம்ப டைம் ஆச்சு"


"அவ கேட்கறா அவ அம்மாவுக்கு எப்ப சரியாப் போகும்?"


"சீக்கிரம் சரியாப் போய்டும். உம்மாச்சிக்கிட்ட வேண்டிக்கோ"


"அவ தம்பி கூட பயப்படறானாம். அதுக்கு தான் வின்க்ஸ் கிளப் ஆரம்பிச்சிருக்கோம். அவளுக்கு ஏதாவது பிராப்ளம்னா நாங்க ஹெல்ப் செய்ய"


“குட்”


"அப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா"


( இதற்குப் பிறகு மகள் தூங்கிப்போனாள்; நான் தூங்க முடியாமல், இதைத் தட்டிக் கொண்டிருக்கிறேன் )


(11வது திருமண நாளன்று எழுதியது)

Comments