பனிபடர்ந்த நீலகண்டமலை. ஊர்வசி பர்வதம். நாராயண பர்வதம் நர பர்வதம் என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் இருக்கிறது பத்ரிகாசரமம்.
முதல்முதலாக நீலகண்ட மலையை ஒரு நாள் காலைப் பார்த்தபோது ’நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’. அப்படி ஒரு அழகு. மயங்கினேன். மயங்கியதற்குக் காரணம் அது இந்திய வரைபடம் போன்ற வடிவத்திலிருந்தது. அதன் மீது பனி வெள்ளி போல ஜொலித்தது.
இந்த மலையைச் சூர்யோதயத்தின்போது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கூட இருந்தவர்களிடம் இதைச் சொன்னபோது “பேசாம போர்த்திக்கொண்டு படுங்கள்” என்றார்கள்.
மறுநாள் காலைக் கேமராவும் கையுமாகத் தனியாகக் கிளம்பினேன். இருட்டு, குளிர். கூட்டமாகக் கருப்பு நாய்கள். பார்க்க ஓநாய் மாதிரி இருந்தது. என் அட்ரினல் சுரப்பிகள் வேலை செய்து குளிருடன் நடுங்கினேன். இருந்தாலும் அந்த அழகிற்கு அடிமையாகி சென்றேன். நாய்களும் வழிவிட்டன.
கேமராவை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டு இருந்தேன். என் வாழ்கையில் மறக்க முடியாத அந்தக் காட்சி வர ஆரம்பித்தது இருபதே நிமிடங்களில் முடிந்தது.
முதலில் மலை உச்சி தங்கம் போல மின்னியது. பிறகு மெதுவாகச் சூரியன் மலை முழுவதையும் ஆக்கிரமித்து முழு மலையும் வெள்ளி போலக் காட்சி அளித்தது. கேமராவை கிளிக் கூடச் செய்ய முடியாமல் கை விரல்கள் விரைத்துப் போயிருந்தன! இந்த அற்புத காட்சியைச் சுமார் நூறு படங்கள் எடுத்தேன்.
இன்று உலக புகைப்பட தினம்.
Beautiful!!
ReplyDeleteBeautiful!!
ReplyDelete