உத்தமன் ஓணம் பண்டிகை. கேரளாவில் கோலாகலமாகவும், தமிழர்கள் வாட்ஸ்-ஆப்பில் நுனி இலை சாப்பாட்டு படங்கள் பகிர்ந்து கொண்டாடுகிறார்கள். பலர் ஆண்டாளின் வாமன அவதாரத்தை நினைவு கூர்ந்து “ஓங்கி உலகளந்த உத்தமனுக்கு அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி” என்று இன்று பல்லாண்டு பாடினார்கள். ‘அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த உம்பர் கோமான்’ என்றும் ஆண்டாள் போற்றியிருக்கும் அந்த மூன்றாவது அடியைப் பெருமாள் மாதிரி என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் பொங்கல் போல, கேரளாவில் ஓணம் உழவர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. பெரியாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். மிக்க பெரும் புகழ் மாவலி வேள்வியில் தக்கது இது அன்று என்று தானம் விலக்கிய சுக்கிரன் கண்ணை துரும்பால் கிளறிய சக்கர கையனே அச்சோ அச்சோ சங்கம் இடத்தானே அச்சோ அச்சோ பெரியாழ்வாரின் இந்தப் பிள்ளைத் தமிழ் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும் தமிழில் எழுதியிருக்கிறார். ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம். பெரும் புகழ் படைத்த மாவலி வேள்வியில் நீ யாசித்தபோது சுக்கிராச்சாரியார் இவனுக்கு...