நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம். ஆழ்வானைப் பற்றி சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். கூரத்தாழ்வானே நம் முன்மாதிரி ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம். பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே. இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாகப் பெறுவார்கள் என்கிறார். இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். ஆழ்வானின் சிறுவயதில் அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ ...