Skip to main content

Posts

Showing posts from January, 2026

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் சென்னை பு.காட்சிக்குச் செல்கிறேன். தொடர்ச்சியாகப் பல விஷயங்கள் மாறிவிட்டன. மேலட்டை மாறி, அரங்குகள் கூடி, எழுத்தாளர்கள் அதிகரித்து.. வாசகர்கள்?  “எப்படிப்பா இவ்வளவு பெரிய புக் படிக்க உனக்கு டைம் இருக்கு?”  கடந்த ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்த போதே கூட்டம் வேகமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. நானும் வேகமாக உள்ளே சென்றேன்.  நுழைவாயிலில், ’வெரேலி ஆர்ட்’ படங்களுடன் ஜூட் பைகள் கீழே பரப்பி கூவிக் கூவி விற்க ஆரம்பிக்க, அருகில் ‘சார் இலவசப் பைபிள்’ வாங்கிக்கோங்க என்று கூடாரத்தில் கூவிக்கொண்டு இருந்தார்கள். அனுமதிச் சீட்டு இல்லை. உள்ளே நுழைந்த போது, ’சார் அந்த கேட் வழியா போங்க’ என்றார்கள். முதல் வரிசையில் நுழைந்த ஏழாவது நிமிடம் ஒரு 6-7வது படிக்கும் சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து… கண்ணீருடன் கண்ணில் பட்டான். அப்பாவிடம் புத்தகம் வாங்கித்தர அடம் பிடிக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் சென்றேன். “அப்பா இப்பவே வீட்டுக்கு போகலாம். போர் அடிக்குது” “இப்பத்தானேடா உள்ளே நுழைந்திருக்கிறோம்...

ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை

 ஆண்டாளும் தோழிகளும் - ஒரு நாடகப் பார்வை சென்ற ஆண்டு கார்த்திகை கடைசி நாள் அடியேனுக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரியவாச்சான் பிள்ளையின் 'மூவாயிரப்படி' வியாக்கியானத்தை வரிக்கு வரி எடுத்துக்கொண்டு, திருப்பாவையை ஒரு நாடகம் போல எழுத வேண்டும் என்பதுதான் அது. ஆண்டாள் தன் திருப்பாவைக்கு இட்ட பெயர் கோதையின் ’சங்கத் தமிழ் மாலை’. முத்தமிழ் என்பது இயல், இசை, நாடகம் என்று பாடபுத்தகத்தில் படித்திருக்கிறோம். அந்த மூன்றும் திருப்பாவையில் பொதிந்துள்ளன. இயல் மற்றும் இசையை நாம் படித்தும் கேட்டும் ரசித்திருக்கிறோம்; ஆனால் அதில் 'நாடகம்' ஒளிந்துகொண்டிருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது தான் அடியேனின் நோக்கம். ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற பொக்கிஷத்தைக் கட்டிக்காத்தது நம் முன்னோர்களின் வியாக்கியானங்கள். இந்த வியாக்கியானங்கள் இல்லையென்றால், ஆழ்வார் பாசுரங்களை நாம் வெறும் பாடல்களாக மட்டுமே ஓதிக்கொண்டிருந்திருப்போம். சில 'கோனார் நோட்ஸ்' போன்ற உரைகளைப் படித்தால் கொட்டாவிதான் வரும்; சுவைத்து ரசித்திருக்க முடியாது. அதிலிருந்து முழுவதும் மாறுபடுகிறது...

ஆண்டாளும் தோழிகளும் - வங்கக் கடல் கடைந்த - (பாசுரம் 30)

ஆண்டாளும் தோழிகளும் - வங்கக் கடல் கடைந்த - (பாசுரம் 30) (சூழல்: இது திருப்பாவையின் நிறைவுப் பாசுரம். இதுவரை தன்னை ஒரு ஆயர் சிறுமியாகப் பாவித்துப் பாடிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில் 'வில்லிபுத்தூர் பட்டர்பிரான் கோதை'யாகத் தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். இந்தப் பாசுரங்களை ஓதுபவர்களுக்குக் கிடைக்கும் பலனை (பலச்ருதி) விளக்கும் வகையில் கண்ணனுக்கும் ஆண்டாளுக்கும் இடையிலான இந்த இறுதி உரையாடல் அமைகிறது.) கண்ணன்: "கோதை! நீயும் உனது தோழிகளும் இந்த முப்பது நாள் நோன்பை மிகச் சிறப்பாக நிறைவு செய்து என்னைப் பாடிப் புகழ்ந்தீர்கள். ஊராருக்கு 'பறை' வேண்டும் என்று ஒரு சாக்குபோக்கு (வியாஜம்) சொல்லிவிட்டு, கடைசியில் 'குற்றேவல்' என்ற பெரும் பலனைப் பெற்றுவிட்டீர்கள். உங்கள் சாமர்த்தியமே சாமர்த்தியம்!" ஆண்டாள்: "வங்கக் கடல் கடைந்த மாதவா! கேசவா! இதையெல்லாம் உன்னிடமிருந்து தானே நாங்கள் கற்றுக்கொண்டோம்?" கண்ணன்: "என்னிடமா? நான் பசுவைப் போன்றவன், உங்களுக்கு எப்படி சாமர்த்தியத்தை கற்றுக்கொடுப்பேன் ?" ஆண்டாள்: "கண்ணா! நீ பாற்கடலைக் கடைந்ததற்கும், நாங்க...

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29)

ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் 'பறை' என்று பலமுறை குறிப்பிட்டு அதைக் கண்ணனிடம் வேண்டினார்கள். ஊருக்காக நோன்பு நோற்கப் பறை வேண்டும் என்று முதலில் கேட்டாலும், இப்போது தாங்கள் வேண்டிய பறையின் உண்மையான உட்பொருள் என்ன என்பதையும், தங்களின் உண்மையான நோக்கம் கண்ணனுக்குத் தொண்டு செய்வதே என்பதையும் கூறி, ஒட்டுமொத்த திருப்பாவையின் கருத்தையும் இங்கே நிறைவு செய்கிறார்கள்.) [சிற்றஞ் சிறுகாலே] கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! இந்த மார்கழி குளிரில், அதுவும் மிக அதிகாலையில்... உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘சிற்றஞ்சிறுகாலையிலே’... பொதுவாகச் சிறுபெண்கள் விடியற்காலையில் எழுந்திருக்கத் தயங்குவார்களே, நீங்கள் மட்டும் எப்படி இத்தனை சீக்கிரம் வந்தீர்கள்?" (வெட்டவெளிச்சம்' என்பது போல, 'சிற்றஞ்சிறுகாலை' என்பது எதார்த்தமான, அழகான இடைக்குலப் பேச்சு வழக்கு) ஆண்டாள்: "கோவிந்தா! வேறு என்ன... உன்னை அடைய வேண்டும் என்கிற வேகம் தான் எங்களை இங்கே இழுத்து வந்தது." புல்லகலிகா: "ஆமாம் கண்ணா! நாங்கள் நினைத்த மாத்திரத்தில் மார்கழ...

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28)

ஆண்டாளும் தோழிகளும் - கறவைகள் பின் சென்று - (பாசுரம் 28) (சூழல்: ஊராருக்கு 'நோன்பு' என்ற பெயரில் இந்தப் பயணத்தைத் தொடங்கினார்கள் ஆண்டாளும் தோழிகளும். ஆனால், உண்மையில் தங்களுக்கு 'பறை' என்பது ஒரு கருவி மட்டுமே; எங்களின் உண்மையான 'பறை' என்ற இலக்கு வேறு, அது உன் திருவடிகளில் செய்யும் நித்தியக் கைங்கரியமே (தொண்டு) என்பதை இப்போது அவர்கள் கண்ணனிடம் வெளிப்படுத்துகிறார்கள்.) ஆண்டாள்: "கோவிந்தா! நாங்கள் இதுவரை ஊராருக்காக 'நோன்பு' என்ற பெயரில் பறை மற்றும் வேறு சில உபகரணங்களைக் கேட்டு உன்னிடம் வந்தோம். ஆனால் எங்களுக்கு வேண்டிய உண்மையான, உயர்ந்த பறை வேறு!" (கண்ணன், இவர்கள் கேட்கப்போகும் அந்தப் பறை என்ன என்பதை ஊகித்து, அவர்களைச் சோதிப்பதற்காக மேற்கொண்டு பேசுகிறான்.) கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! ஊராருக்காகப் பறை வாங்கினீர்கள், உங்களுக்காகப் பல ஆபரணங்களையும் கேட்டீர்கள். இப்போது நீங்கள் விரும்பும் அந்த 'உயர்ந்த பறையை' அடைய உங்களுக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? அதற்காக ஏதாவது சாதனைகளைச் செய்தீர்களா? எதுவும் செய்யாமல் பலனை மட்டும் எதிர்பார்ப்பது முறையா? ...

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27)

ஆண்டாளும் தோழிகளும் - கூடாரை வெல்லும் - (பாசுரம் 27) (சூழல்: ஆலிலையில் துயின்ற உனக்கு முடியாதது எதுவுமில்லை என்று இடைச்சிறுமியர் வேண்டியதைக் கேட்டவுடன், கண்ணன் சங்குகள், பறைகள், விளக்கு, விதானம் என்று அவர்களுக்குத் தேவையான ஒவ்வொன்றாக வழங்கத் தொடங்கினான். இவை அனைத்தையும் பெற்றுக்கொண்ட சிறுமியரிடம், "இவ்வளவுதானே உங்களுக்கு வேண்டியது?" என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு அவர்கள், "கண்ணா! இதுவரை நாங்கள் கேட்டவை எல்லாம் நோன்பு செய்யப் போவதற்குத் தேவையான உபகரணங்கள் மட்டுமே. ஆனால், நோன்பு முடிந்த பிறகு உன்னிடம் சில பரிசுகளைப் பெறப்போகிறோம்" என்கிறார்கள்.) கண்ணன்: "பெண்களே! என்னிடம் இருக்கும் உடமைகளை எல்லாம் கேட்டீர்கள். அதை எல்லாம் உங்களுக்குத் தந்துவிட்டேன். அதுமட்டுமா, 'ஆற்றாது உன் அடிபணிய வந்தோம்' என்று சொல்லி, என்னையே உங்களிடம் தோற்கச் செய்துவிட்டீர்களே! எல்லா உலகங்களையும் ஆட்சி செய்யும் அரசன் இப்படி உங்கள் முன் தோற்றுப்போய் நிற்கிறேன்!" ஆண்டாள்: "கண்ணா! இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? உனது இயல்பே அதுதானே!" கண்ணன்: "என்ன சொல்லுகிறாய் கோத...

ஆண்டாளும் தோழிகளும் - மாலே! மணிவண்ணா! - (பாசுரம் 26)

ஆண்டாளும் தோழிகளும் - மாலே! மணிவண்ணா! - (பாசுரம் 26) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் பறை வேண்டும் என்று சொல்லுகிறார்கள்; அதே சமயம் உன்னையே வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். இவர்கள் விரும்புவது என்ன? எதற்காகத் தன்னை விட்டுவிட்டு வேறொரு பொருளைக் கேட்க வேண்டும் என்று கண்ணன் குழம்பிப் போயிருக்கிறான்.) கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! என்னைப் போற்றிப் பாடிய நீங்கள், 'உன் பள்ளிக்கட்டிலிருந்து இறங்கி வரச் சொன்னீர்கள்'. உங்கள் அன்பிற்கு அடிபணிந்து நானும் நடந்து வந்து சிங்காதனத்தில் அமர்ந்துவிட்டேன். இப்போது 'உன்னையே வேண்டுகிறோம்' என்று ஒருபுறம் கூறிவிட்டு, இன்னொருபுறம் 'பறை தருதியாகில்' என்று வேறு ஏதோ ஒரு சம்பந்தமே இல்லாத பொருளைக் கேட்கிறீர்களே? உங்கள் எண்ணம் தான் என்ன?" (கண்ணனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது. அந்தப் புன்னகையையும், தாமரை போன்ற கண்களையும் கண்ட துரியோதனனே திகைத்துப் போய் அவனை "புண்டரீகாட்சன்" என்று அழைத்தான் என்றால், ஆண்டாள் என்ன செய்வாள்? அவள் உள்ளம் உருகி அவனை அழைக்கிறாள்.) [மாலே! மணிவண்ணா!] ஆண்டாள்: "மாலே! மணிவண்ணா!" கண்ணன்...

ஆண்டாளும் தோழிகளும் - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - (பாசுரம் 25)

ஆண்டாளும் தோழிகளும் - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - (பாசுரம் 25) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் நப்பின்னையை முன்னிட்டுக்கொண்டு கண்ணனிடம் 'உன் நடை அழகைக் காண வேண்டும், நீ சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் அழகை ரசிக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்கள். கண்ணனும் அப்படியே செய்ய, ஆண்டாள் கோஷ்டி அவனுக்குப் பல்லாண்டு பாடினார்கள். ஆனால், தாங்கள் வந்த காரியத்தைச் சொல்லாமல் இப்படி இழுத்தடிக்கிறார்களே என்று எண்ணிய கண்ணன், "உங்களுக்கு என்னதான் வேண்டும்?" என்று கேட்கிறான்.) கண்ணன்: "ஆயர்ச் சிறுமியர்களே! இதுவரை என் நலத்திற்காகக் கவலைப்பட்டு எனக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்று பயந்து எனக்கு 'போற்றி' பாடினீர்கள். ஆனால், இப்போது திடீரென்று 'பறை' வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்க்கிறீர்களே? பிரதிபலன் எதிர்பாராமல் மங்களாசாசனம் செய்பவர்கள், இப்போது இப்படிப் பலன் எதிர்பார்ப்பது முரணாக இருக்கிறதே!?" ஆண்டாள்: "கண்ணா! நாங்கள் கேட்கும் 'பறை' என்பது ஒரு சாக்கு (வியாஜம்) தான்! கண்ணன்: "அது என்ன வியாஜமோ! அது இருக்கட்டும், உங்களுக்கு நான் உதவ நினைத்தாலும், அத...