திரு பாவை துதி -15 கோதா ஸ்துதி - 15 - சூடிக்கொடுத்த மாலைக்கே ஏற்றம். ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி | மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15) எளிய தமிழ் விளக்கம் - 1 (வனமாலை என்ற பெண்) ஹே கோதா தேவியே வனமாலையானவள் எப்போதும் பெருமாளின் எப்போதும் திருமார்பில் ஆனந்தப் புன்சிரிப்பு முகமுடையவளாக, விரும்பட்டவளாக, நினைக்கப்பட்டவளாக, ஆசையுடையவளாக, இனிய தன்மையான குணவதியாயினும், பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற ஒரு பெண்ணால் கீழே தள்ளப்பட்டது! எளிய தமிழ் விளக்கம் - 2 (வனமாலை என்ற மாலை) ஹே கோதா தேவியே வனமாலை எப்போதும் திருமார்பை விட்டு அகலாமல் வாசனையுடையதாக, செந்நிறமுடைய இளந்தளிர்களுடையதாகவும், மென்மையாகவும், நன்றாகத் தொடுக்கப்பட்டிருந்தாலும், பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற நீ சூடிக்கொடுத்த மாலையால் கீழே தள்ளப்பட்டது! சற்றே பெரிய விளக்கம் இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் சிலேடையாக வனமாலையை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி அருளியுள்ளார். இந்த ஸ்லோகத்தை இரண்டு வி...