Skip to main content

Posts

ஆயிரம் !

ஆயிரம் ! மதுரகவி ஆழ்வார் ’கண்ணி நுண் சிறு தாம்பு’ என்று தன் பிரபந்தத்தை ஆரம்பிக்கிறார்.  இதை சின்னஞ்சிறு முடிகளையுடைய 'கண்ணி' தாம்பு உடலில் அழுந்தும்படியான 'நுண்' தாம்பு நீட்டமில்லாத 'சிறு' தாம்பு கயிறு இப்படிப் புரிந்துகொள்ளலாம். ஒரு சாதாரணக் கயிறு அதற்கு இவ்வளவு முக்கியத்துவமா ? என்ற எண்ணம் எழலாம். கண்ணன் திருமேனி மீது அழுந்தி அவனுக்கு தாமோதரன் என்ற திருநாமம் பெற்றுக்கொடுத்து, அவன் சம்பந்தம் பெற்று, அதனால் அந்த ஏற்றம் பெற்றது.  பொதுவாக இந்த பிரபந்தத்தைப் படிக்கும் போது இதைக் கவனிக்க மாட்டோம்.  இதே போல இன்னொரு வார்த்தை ஆயிரம். ஆயிரம் என்ற வார்த்தை நம் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு மிக மிக முக்கியமான வார்த்தை. ஏன் என்று சொல்லுகிறேன். உங்களுக்குத் தெரிந்த கதை தான்.  ஒரு சமயம் வீர நாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாட,  அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்...

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள்

பெரியாழ்வார் ஒற்றிக்கொண்ட, பொறித்துக்கொண்ட சின்னங்கள்  பெரியாழ்வார்,  ‘பெரிய’ ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்குச் சென்றால் கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சி அளிக்கிறார்.  பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது  பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை ஆண்டாளின் தகப்பனார்.  பல்லாண்டு பாடிய ஆழ்வார்  விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல்  இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம்.   திருப்பாணாழ்வார் அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதில் அரங்கத்து அம்மான் திருகமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே” என்று மலையேறி சென்ற ஆழ்வார் சட்டென்று உடனே கீழே இறங்கி அந்த வேங்கடவன் தான் அரங்கத்தில் இருக்கிறான் என்கிறார்.   பெரியாழ்வாரும் இதையே தான் சொல்லுகிறார். எப்படி என்று கண்டுபிடிக்கக் கீழே உள்ள இந்தப் பாசுரத்தைப் பாருங்கள்   சென்னி ஓங்கு தண் திருவேங்கடம் உடையாய் உலகு  தன்னை வாழ நின்ற நம்...

கடைசியாக வந்த ‘க்ரேஸி’

கடைசியாக வந்த ‘க்ரேஸி’ 47  நாட்கள் முன் ( மே-1 அன்று) சென்னையில் இருந்தேன். மதியம் வெயிலில் வெளியே போக முடியாமல் பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தபோது “CPL” Crazy Premeir League என்று நண்பர் க்ரேஸி மோகனின் நாடகம் கிருஷ்ண கான சபாவில் மாலை 7 மணிக்கென்று அறிவிப்பு இருந்தது.  க்ரேஸி மோகனிடம்  பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அவருக்குப் போன் செய்தேன். பதில் இல்லை. பள்ளி படிக்கும்போது எங்கள் வீட்டில் தினமும் க்ரேஸிமோகன், எஸ்.வி.சேகர் நாடகத்தைத் தினமும் இரவு தூங்க போகும்போது கேட்போம். ”க்ரேஸிதீவ்ஸ் இன் பாலவாக்கம்”, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மீசை ஆனாலும் மனைவி என்ற நாடகன்களின் வசனம் எல்லாம் மன்ப்பாடம். இரவு தூங்க போகும் முன் மிகுந்த மன நிறைவு தந்தது. நானும் அமுதனும் கிளம்பிகொண்டு இருந்தபோது க்ரேஸிஅழைத்தார் “தேசிகன்.. எப்படி இருக்கீங்க… சொல்லுங்க” என்றார். “சார் இன்னிக்கு உங்க டிராமா பார்க்க வருகிறேன்..” “என் சீன் எல்லாம் லேட்டாகத் தான் வருது.. அதனால் நான் கொஞ்ச லேட்டா வருவேன்.. அங்கே பார்க்கலாம்” என்றார். டிராமாவில் இரண்டு இடத்தில் பலத்த க...

அமலன் உவந்த மந்தி

 அமலன் உவந்த மந்தி அமலன் ஆதி பிரான் என்ற பாசுரத்தில் முதல் மூன்று பாசுரங்களின் முதல் மூன்று எழுத்துகள் பிரணவத்தை குறிக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.  அதே போல் முதல் மூன்று வார்த்தைகளை சேர்த்தால்  ”அமலன் உவந்த மந்தி”   என்று வரும்.  இதுவும் மிக அருமையான பொருளை கொடுக்கிறது !   முதலில் திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்றைப் பார்க்கலாம். வாத மா மகன், மர்க்கடம், விலங்கு மற்றோர் சாதி என்று ஒழிந்திலை* உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று* கோது இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள்* எனக்கும் ஆதல் வேண்டும் என்று அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! அனுமானை ஒரு விலங்கு என்று பாராமல் அவனிடம் கடல் போலக் காதல் அன்பையும் பொழிந்தாய். ”உன் உதவிக்கு என்ன கைமாறு செய்வேன் என்று எண்ணி “உன்னுடன் உடனிருந்து யான் உண்பேன்” என்று அனுமானைக் குறித்து கூறிய மாதிரி அடியேனுக்கும் அமைதல் வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். இராவண வதம் முடிந்த பின் சுக்ரீவன் முதலிய வானரங்களோடும...

திருவாய்மொழி கூறும் உட்பொருள்

 திருவாய்மொழி கூறும் உட்பொருள்  ‘Coloring base’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஓவியத்தில் வண்ணங்களைத் தீட்ட அதனுடன் கலந்து அடிப்பார்கள். வாட்டர் கலருக்கு தண்ணீர் தான் பேஸ்.  அதுபோல ஸ்ரீ வைஷ்ணவத்துக்கு ‘பேஸ்’ திருவாய்மொழி.  ஸ்ரீவைஷ்ணவத்தில் தத்துவங்களை ஐந்து விதமாகப் பிரிக்கலாம் தமிழ்மொழியில்  1) இறைநிலை  2) உயிர்நிலை  3) நெறிநிலை  4) தடைநிலை 5) வாழ்வுநிலை  இதையே வடமொழியில்  1) பரமாத்ம சொரூபம் 2) ஜீவாத்ம சொரூபம்  3) உபாய சொரூபம் 4) விரோதி சொரூபம் 5) புருஷார்த்த சொரூபம்  ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் அவர்கள் பதினெட்டு ரகஸ்யகளில் அர்த்த பஞ்சகம் ஒன்று. அதே போல் ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஶ்ரீரஹஸ்யத்ரயஸாரத்தில் அர்த்தபஞ்சாதிகாரம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. இவை எல்லாம் மேலே குறிப்பிட்ட இந்த ஐந்து விஷயங்களை விவரிக்கிறது.  இந்த ஐந்து விஷயங்களும் நம்மாழ்வார் தன் திருவாய்மொழியில் கூறுகிறார் அதனால் தான் திருவாய்மொழி ஸ்ரீவைஷ்ணவத்துக்கு அடிப்படை என்று எல்லா ஆசாரியர்களும் கொண்டாடுகிறார்கள்.  பட்டர் அருளிய திருவாய்மொழி தனியன் இது...

ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி

 ஸ்ரீ ராமானுஜரின் ரகசிய புரட்சி  ”மதப் புரட்சி செய்த மகான்” என்று ஸ்ரீ ராமானுஜரைப் பற்றிப் பல புத்தகங்கள் வருகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் புகழ்கிறார்கள். முன்பு எழுதப்பட்ட ரூல்ஸ் & ரெகுலேஷன் எல்லாவற்றையும் ராமானுஜர் மாற்றிப் புரட்சி செய்தார் என்று புத்தகங்களில் வருகிறது. ஒன்று அல்ல இரண்டு அல்ல பதினெட்டு முறை திருக்கோட்டியூருக்கு  ‘நடையாக நடந்து’  கஷ்டப்பட்டு எட்டு எழுத்து மந்திரமாம் திருமந்திரத்தை நம்பிகளிடம் பெற்று கோபுரத்தின் மீது ஏறி எல்லோரும்  சத்தமாக உபதேசித்தார் என்று புத்தகங்களிலும் மேடைப் பேச்சிலும் பேசுகிறார்கள். இதைப் பலர் சொல்லுவதால் இது தான் உண்மை என்பது போன்ற பிரமை இன்று உண்டாகிவிட்டது. ராமானுஜர் பதினெட்டு முறை நடந்தார். நம்பிகளிடம் உபதேசம் பெற்றார். அதை எல்லோருக்கும் வினியோகித்தார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் அவர் ஏன் பதினெட்டு முறை சென்றார், நம்பிகளிடம் என்ன உபதேசம் பெற்றார் எப்படி எல்லோருக்கும் வினியோகித்தார் என்ற விவரம் தான் இந்தக் கட்டுரை. ராமானுஜர் பதினெட்டு முறை நடந்து பெற்ற விஷயத்தை ஆழ்ந்து படிக்க வாசகர்களை அழைக்கிற...

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்

25. இராமானுசன் அடிப் பூமன்னவே - யோக ரகசியம்  மணக்கால் நம்பி “ஆளவந்தாரே ! உம் பாட்டனார் நாதமுனிகள் என் ஆசாரியனுக்கு ஒரு ரகசியத்தைக் கூறியுள்ளார் அதையும் உமக்குச் சொல்லுகிறேன்!” என்றார் நம்பி என்ன கூறப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டு இருந்தார் ஆளவந்தார்.   ”ஆளவந்தாரே! இப்போது நாம் கூறப் போகிற விஷயங்கள் பல காலமாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீரும் அதை பாதுகாப்பீர்!” என்று நாதமுனிகளுக்கு ஆழ்வார்திருநகரியில் சொப்பனத்தில் நம்மாழ்வார் கூறிய விஷயங்கள் அனைத்தையும்  விரிவாக கூறி, “நம் தரிசனத்தை நெடுங்காலம் திருவரங்கத்தில் பலருக்குச் சென்றடையுமாறு செய்வீராக” என்று ஆசி வழங்கினார்.  ஆளவந்தார் “நம்பியே! இந்த மஹா அனுபவத்தை என்னவென்று கூறுவது! அன்று மடுக்கரையிலே கஜேந்திரனை முதலையிடமிருந்து காப்பாற்றிய பெருமாள் போல் எம்மை இந்த அற்பமான ராஜபோக வாழ்க்கையிலிருந்து இன்று காத்தீர்!“ என்றார்.  மணக்கால் நம்பி தன்னை சந்தித்து தூதுவளை கீரையை கொடுத்த நாள் முதல் திருவரங்கம் வரை அழைத்து வந்து திருவரங்கனைக் காட்டிக் கொடுத்து, நாதமுனிகள் அவருக்குக் கூறிய சொப்பன விஷயங்கள் யா...

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு

24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு  மணக்கால் நம்பி காட்டு மன்னார் முன்பு கைகூப்பி நின்றார். தன் ஆசாரியர்களின் ஆசை நிறைவேறப் போகிறது என்று அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, அவர் திருவாக்கில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாடக பாசுரம்  உலகம் ஏத்தும் தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்! குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்!  பின் ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! உதிர்ந்து காட்டுமன்னார் திருவடியில் விழுந்தது.(1) குருவை சீடன் தேடி அடையவேண்டியதே உலக நியதி. ஆனால் உலகம் நல்வாழ்வு பெறுவதற்கு சீடனைத் தேடி குருவும் செல்லலாம் என்று அந்த நியதியை மாற்றி மணக்கால் நம்பி நாள்தோறும் ஆளவந்தாரது அரண்மனைக்குச் சென்று அன்று இடைப் பிள்ளையான மாயக் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர்த்தட்டிலிருந்து அன்புடன் அருளிய பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையின் செம்மைப் பொருளை கண்ணபிரான் சொன்னபடியே ஆளவந்தாருக்குத் தெளிந்த ஆர்வம் உண்டாகுமாறு பதினெட்டு நாள் உரைத்தார்.  ஒரு நாள் மணக்கால் நம்பி கீதையின் சரம ஸ்லோகமான “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ...

இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.

 இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.  ஏப்ரல் முதல் வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தேன். நாகரமே முகக்கவசம் இல்லாமல்  “என்ன கொரோனாவா அப்படினா என்ன ?” என்று சுற்றிக்கொண்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தவர்கள் வெளியூர் தேசாந்திரிகள் என்று சுலபமான அடையாளம் எங்கள் மீது விழுந்தது.  திருவரங்கம் கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்துகொண்டு வரும் பக்தர்கள் உள்ளே சென்ற பிறகு அதை இடுப்பில் சுருக்குப்பை போலச் சொருகிக் கொள்கிறார்கள்.   தற்போது கோவிட் இரண்டாம் அலையில் சொந்தங்கள், நண்பர்கள் எனத் தினமும் யாராவது அதில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதைப் பார்க்கும் போது பயமும் சோகமும் ஒன்றாக சேர்கிறது. விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும் அதை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை  முழு ஊரடங்குக்கு முதல் நாள் திருச்சி மலைக்கோட்டை கீழே உள்ள கூட்டத்தின் படத்தைப் பார்க்கும் போது மே மாதமே தீபாவளி  போல இருக்கிறது! உச்சிப்பிள்ளையார் தான் காப்பாற்ற வேண்டும். விழிப்புணர்வு கேள்வி பதிலாக  தருகிறேன். படித்துவிட்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.  இது என்ன இரண்டாம் அலை ?  போன வர...

சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்

 சிஷ்யன் பெயரில் ஆசாரியன் - எங்கள் ஆழ்வான்  திருவெள்ளறைக்கு பல வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன்.  என் பெண் ஆண்டாளுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு தொடர்பு  இருக்கிறது. பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் ”இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றாள்.  அர்ச்சகர், அந்தத் தீர்த்த வட்டிலை அப்படியே அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்!  புண்டரீகாட்சனை சேவித்துவிட்டு, மணக்கால் நம்பியின் ஆசாரியரான உய்யக்கொண்டார் மற்றும் எங்கள் ஆழ்வான் இருவரையும் சேவித்தோம்.  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு இந்த ஊரில் அவதரித்த உய்யக்கொண்டார் தான் திருப்பாவை தனியனான “அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு... என்ற தனியனை அருளினார் என்று நேற்று கட்டுரையில் பார்த்தோம்.  இந்த ஊரில் அவதரித்த இன்னொரு ஆசாரியன் ‘’எங்கள் ஆழ்வான்’  ஆழ்வான் என்றால் கூரத்தாழ்வானை குறிக்கும். இவருக்கும் ‘எங்கள் ஆழ்வானுக்கும்’ ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும் என்று உங்கள் யூகம் சரி தான்.  உடையவர் ஸ்ரீபாஷய வியாக்கனத்தை சொல்லச் சொல்ல அதை எழுத ஸ்ரீக...

உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் !

 உய்யக்கொண்டர் கோதைக்கு சூட்டிய பெயர் !  நாதமுனிகள் தன் மகன்  ஈசுவரமுனிக்குப் பிறக்கும் குழந்தைக்கு யமுனைத்துறைவன் எனப் பெயர் சூட்டி அருளுரை வழங்குமாறு உய்யக்கொண்டாரைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர் காலத்தில் அது முடியாமல் போக, உய்யக்கொண்டார் தன் இறுதிக்காலத்தில் தனது மாணாக்கர் மணக்கால் நம்பியிடம் அப்பணியை ஒப்படைத்தார். மணக்கால் நம்பி தமது ஆசிரியரின், ஆசாரியன் விருப்பப்படி ஈசுரமுனி மகனுக்கு ’யமுனைத்துறைவன்’ என்று பெயர் சூட்டி அருளிச்செயல் பாடம் புகட்டினார்.  “யமுனை துறைவன்” என்ற பெயர்  எங்கிருந்து வந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.  திருப்பாவையில்  மாயனை மன்னு வடமதுரை மைந்தனை  தூய பெரு நீர் யமுனை துறைவனை திருவரங்கத்து அமுதனார் தம் இராமானுச நூற்றந்தாதியில், ஆளவந்தார் என்று கூறாமல் 'யமுனை துறைவன்' என்று நாதமுனிகள் விரும்பிய பெயரையே உபயோகிக்கிறார்.  எதிகட்கு இறைவன் யமுனை துறைவன் இணை அடியாம் கதி பெற்றுடைய இராமாநுசன் என்னை காத்தனனே நாதமுனிகளின் நேர் சிஷ்யர் உய்யக்கொண்டார் இவருடைய இயற்பெயர் புண்டரீகாக்ஷர்.  உய்யக்கொண்டார் (திருவெள்ளறை...

பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி

 பதம் பிரித்த பிரபந்தம் - நன்றி  சில வருடங்கள் முன் ஸ்ரீரங்கத்தில் ஒரு கடையில் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். பெரிய திருமண்காப்புடன் ஒரு சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் அங்கே  வந்தார்.   "சாமி பெரிய எழுத்தில் பிரபந்தம் புத்தகம் இருக்கா?" என்று விசாரித்தார் "பெரிய எழுத்தில் எல்லாம் இப்போது யாரும் போடுவதில்லை. இந்த ஒரு புத்தகம் மட்டும் தான் பெரிய எழுத்து. இரண்டு பகுதிகளாக இருக்கிறது" என்று அவரிடம் கொடுத்தார் கடைக்காரர்.  சந்தோஷத்துடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர் புத்தகத்தைத் திறந்து பார்த்து "நன்னா இருக்கு எவ்வளவு சாமி ?" என்று தன் பர்சை திறந்தார்.  “அறநூற்றி….  ரூபாய்” என்று கடைக்காரர் கூற தன் மார்போடு அணைத்திருந்த அருளிச் செயல் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார் அந்த ஸ்ரீ வைஷ்ணவர்.  அவர் கைக்கு எட்டிய ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் அவர் வாய்க்கு எட்டவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஆனால்  அந்தச் சமயத்தில் அந்தப் புத்தகத்தை அவருக்கு வாங்கி தரும் எண்ணம் அடியேன் உள்ளத்தில் வரவில்லை. ஒரு வைணவனாக ஸ்ரீரங்கத்தில் இருந்தும்,...