தினமும் கொஞ்சம் தேசிகன் - 13 ’என்னங்கடா இப்படியெல்லாம் பீதியை கிளப்புறீங்க’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். பீதி என்றால் பயம், ’அ பீதி’ என்றால் பயம் அற்ற என்று பொருள். ஸ்வாமி தேசிகன் ’அ பீதி ஸ்தவம்’ என்று அருளியிருக்கிறார். எப்போது ஏன் எழுதினார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இருந்தாலும் சில வரிகளில் அதைக் கூறிவிட்டு மேலும் தொடர்கிறேன். திருவரங்கத்தில் நம் தேசிகன் நெடுங்காலம் எழுந்தருளியிருந்த சமயத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்து கோயிலுக்கு நாசம் விளைவித்தார்கள். நம்பெருமாளைப் பிள்ளை லோகாச்சாரியார் காப்பாற்ற, ஸ்வாமி தேசிகன் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, சுதர்சன பட்டர் இரண்டு புதல்வர்களையும் ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் தேசிகன் காத்துக் கொடுத்தார். திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட ஸ்வாமி தேசிகன், திருநாராயணபுரத்தில் இருந்த போது அங்கே சத்யா காலத்தில் வாசம் செய்த போது, நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு அவர் அபீதிஸ்தவம் என்ற உயர்ந்த 29 ஸ்லோகங்களை அருளினார். திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்து நீங்கி, அச்சம் நீங...