தினமும் கொஞ்சம் தேசிகன்! - 1 தினமும் கொஞ்சம் தேசிகன் என்ற தலைப்பைப் பார்த்து ஏமாற வேண்டாம். தினமும் வரப் போவதில்லை. அவ்வப்போது நம் தேசிகன் சம்பந்தமாகப் படிக்கும்/கேட்கும் விஷயங்களை எளிமையாகச் சொல்ல முற்படுவதே இதன் நோக்கம். திருச்சின்ன மாலை ! கோயில்களில் பெருமாள் புறப்பாட்டுக்கு என்று சில வாத்தியங்கள் இருக்கிறது. ‘திருச்சின்னம்’ அப்படியொரு வாத்தியம். கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இரண்டு பித்தளை குழல்களைச் சேர்த்து ஊதுவார்கள். பெருமாள் புறப்பாட்டின்போது அல்லது அகோபில மடத்தில் இதைக் கேட்கலாம்.