Skip to main content

Posts

Showing posts from 2013

சோளிங்கர்!

ரகுராமுக்கு மத்தியானம் கனவு வந்து எழுந்த போது நம்ரத்தா, ஹவ் இஸ் திஸ் சுடிதார்? ஐ ஜஸ் காட் இட் வைல் யூவேர் ஸ்லீபிங்" என்றாள். ரகுராமும் அவர் குடும்பமும் இந்தியா வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடுராத்திரி... அதாவது திங்கள் காலை ஃபிளைட். கடைசி நிமிஷ அம்பிகா அப்பளமும், தி.நகர் சுடிதாரும் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். சுடிதார் கேள்விக்கு ‘ஒரே கனவு’ என்ற பதில் நம்ரத்தாவுக்கு எரிச்சலைத் தந்தது. கனவுல யாரு... நான் இருந்திருக்க மாட்டேனே..." அம்மா" வாட் ஷி வான்ஸ் நவ்?" குழந்தைகளை அழைச்சிண்டு சோளிங்கர் போட்டுவான்னு சொல்லியிருந்தா... ஷி ரிமைண்டட் மி." இந்த சுடிதார் சாயம் போகுமா?"

மர மண்டை

மர மண்டை என்ற பிரயோகம் எப்படி வந்தது என்று என்றும் யோசித்ததில்லை. செந்தில் கவுண்டமணி நகைச்சுவையில் "தேங்காய் மண்டைத் தலையா!" முதல் மாங்கா மண்டை வரை பல 'தலை'களை பார்த்திருக்கிறோம். என் மனைவி "உங்க தலையில..." என்று சொல்ல வந்து நிறுத்திவிடுவாள்.  ஆனால் சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு, என் மண்டையில் கூட ஏதோ இருக்கிறது என்ற நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்தது. சொல்லுகிறேன்.  வழக்கமாக நடைபயிற்சிக்குச் செல்லும் பாதையில் திடீர் என்று தலையில் ஏதோ மடார் என்று பெரிய பாரம் ஒன்று விழுந்தது. என்ன என்று சுதாரிப்பதற்குள் அது நடந்து, மன்னிக்கவும் பறந்து சென்றது. நடந்தது இது தான் - பெரிய கழுகு தன் கால்களை என் தலையில் வைத்து என்னை தூக்கப் பார்த்து முடியாமல் மேலே பறந்து சென்றது. பருந்தை இவ்வளவு கிட்ட டிஸ்கவரி(தமிழ்) சேனலில் கூட பார்த்ததில்லை. அதிர்ச்சியில் கத்தக் கூட முடியவில்லை. பருந்து சும்மாப் போகவில்லை, அதன் கால்களில் கூடு கட்டுவதற்குக் கொண்டு வந்த சில சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு பறந்து சென்றது. என் தலையை நிஜமாகவே மர மண்டை என்று நினைத்துக் கூடு கட்ட நினைத்திருக்கலாம்....

வீரநாராயணபுரம்

போன மாதம் ஒரு பொடி நடையாக காரை எடுத்துக்கொண்டு சென்னை, கடலூர், வீரநாராயணபுரம்-காட்டுமன்னார் கோயில் என்று ஒரு ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றி வந்தேன். ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார். ( அவருக்கு பின்னர் ஆளவந்தாரும் இந்த ஊர் தான் ). ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீ நாதமுனிகளையே சாரும். ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளை சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே" என்ற பதிகத்தைப் பாடினர். அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில் "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று சேவிக்கின்றீர்களே, இந்த ப்ரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ? என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும். என்று கூறிவிட்டார்கள். நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. நம...

போலீஸ் வீடு

ஞாயிற்றுக்கிழமை காலை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் என்று நினைத்த போது,  அம்மா "ராஜேஷ் அப்பா போய்ட்டாராண்டா" என்று எழுப்பினாள் "என்ன?" என்று படுக்கையியிலிருந்து எழுந்து உட்கார்ந்து, "எப்போ?" என்றேன் "ராத்திரி போயிருப்பார் போல... கார்த்தால கோலம் போடும் போது அவ ஆத்து வாசல்ல ஒரே கூட்டம்.. அந்த லதா பொண்ணு தான் ஓடி வந்து 'மாமீ...'ன்னு ஒரே அழுகை" "ராஜேஷ் அம்மா ?" "இன்னும் வரலையாம்"

பாட்டி வெடித்த வெடி

தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு. என்ன டிரஸ், என்ன பட்டாசு, என்ன சினிமா ? என்று தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பரபரப்பாகிவிடும். தீபாவளிக்கு என்ன டிரஸ் என்று முடிவு செய்வது பிரம்ம பிரயத்தனம். அந்த வருஷம் வந்த சினிமாவிற்கும் டிரஸ்ஸுக்கு நிச்சயம் சம்பந்தம் இருக்கும். புது வசந்தம் வந்த வருடம், திருச்சியில் பலர் மஞ்சள்-கருப்பு காம்பினேஷனில் டிரஸ் போட்டுக்கொண்டு அலைந்தார்கள். அடுத்த வருடம் சஃபாரி ஜுரம் என்னையும் சேர்த்து பலருக்கு பரவியது. ராமர் கலரில் சஃபாரி போட்டுக்கொண்டு என்னுடைய பெல்பாட்டம் ஊரை எல்லாம் பெருக்கியது. நான் படிக்கும் போது ரெடிமெட் எல்லாம் வரவில்லை. சட்டை பிட், பேண்ட் பிட் வாங்கி அதை தைக்க வேண்டும். வாங்கிய துணி சட்டையாக எப்படி மாறும் என்ற கற்பனையில் அதை தைக்க கொடுக்க அப்பாவுடன் டைலர் கடைக்கு விஜயம் செய்வேன். தற்போது ரிதம்பாஸ் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன பெட்டி கடை சைசில் ஒரு ஆஸ்தான டைலர் இருந்தார். வாங்கிய துணியை கொடுத்தவுடன் அதை அள...

கதிர்மதியம் போல் முகத்தான்

And how can man die better than facing fearful odds, for the ashes of his fathers, and the temples of his Gods? - Thomas B. Macaulay மதுரை தேனி மார்க்கம் உசிலம்பட்டிக்கு முன் தெற்கே அறுபது கிமீ தூரத்தில் ஸ்ரீரங்கபுரம் இருக்கிறது. ஸ்ரீரங்கபுரம் ஊர் இல்லை, மலை அடிவாரக் கோயில். கோயிலுக்கு பின்னணியில் சூல வடிவத்தில் மலை இருப்பதால் சூலகிரி என்ற பெயரும், “கோயிலுக்கு பின்னாடி நாமம் தெரிகிறது பாருங்க!” என்ற இன்னொரு கண்டுபிடிப்புடன் ஸ்ரீரங்கபுரம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான். ஸ்ரீதேவி, பூதேவி என்று மலையடிவாரத்தில் பெட்ரோல் புகை வாசனை எதுவும் இல்லாமல் நிம்மதியாக இருந்த ஸ்ரீரங்கராயன் இரண்டு வருடத்துக்கு முன் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் திருடு போனார்.

டிவி இல்லாத வீடு

எ ல்லோரும் எதிர்பாத்த ஆகஸ்ட் 15 இந்த வருடமும் வந்து போனது. வெள்ளிக்கிழமை கூடுதலாக விடுமுறை எடுத்தால் 'லாங் வீக்கெண்ட்'. ஊருக்குப் போகும் உத்தேசம் இல்லை என்றாலும் சும்மா புக் செய்து வைக்கலாம் என்று பலர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தார்கள். நான் படித்த பள்ளியில் கொடி ஏற்றுவார்கள். சட்டைப் பையில் குத்திக்கொள்ள சின்னதாக கதர் துணியில் ஓரம் அடித்த கொடியும், மிட்டாயும் தருவார்கள். தற்போது பள்ளிகூடத்தில் ஒரு நாள் முன்னமே கொடி ஏற்றி, பாட்டுப் பாடி, சாக்லேட் தந்துவிடுகிறார்கள். கொடிகள் எல்லாம் பள பள பேப்பர் (அ) பிளாஸ்டிக் ஆகிவிட்டது. சீசனுக்குத் தகுந்தாற் போல டிராஃபிக் சிக்னலில் சீனா பொம்மைகள் விற்கும் ஏழைகள் அதே அழுக்குடன் இந்த பள பள கொடிகளை விற்க ஆரம்பிக்கிறார்கள். ஆகஸ்ட் பதினைந்தும் ஒரு சீசன் ஆகிவிட்டது. எங்கள் அப்பார்ட்மெண்ட் மெயிலிங் குருப்பில் இந்தச் சுதந்திர தினத்திற்கு ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலின் ஒரு பகுதி கீழே... Dress in WHITE to spread PEACE and show your independence and get a chance to win food voucher from MIDNIGHT HUNGER SOLUTIONS. Note: It’s Happening on...

இன்னும் கொஞ்சம் திருச்சி

மெயின் கார்ட் கேட்  திருச்சி பற்றி எழுதிய " திருச்சிடா !" கட்டுரையை 'ஐ லவ் திருச்சி' குழுமத்தில் பலர் பாராட்டினார்கள். நான் +2 படிக்கும் போது, 'லயன்ஸ் கிளப்' கூட்டத்திற்கு வந்த சுஜாதா 'நான் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டதற்கு முக்கிய காரணம் 'திருச்சி' என்று சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது. போன முறை எழுதிய கட்டுரையில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் என்று சிலர் வருத்தப்பட்டனர். நிறைய எழுதினால் படித்து முடித்தபின் க்ளுகோஸ் தேவைப்படும் என்பதால் எழுதவில்லை. ஆங்கிலத்தில் Tiruchy, Trichy, Tiruchi, Tiruchirappalli, Trichinopoly என்று பல விதமாக எழுதுவார்கள். தமிழில் இந்தக் குழப்பம் இல்லை, 'திருச்சி' தான். பெயர்க் காரணம் பற்றிய வரலாறு கீழே.. 'சிராப்பள்ளி' என்பதில் 'திரு' என்ற சேர்ந்துக்கொண்டு திருச்சிராப்பள்ளியானது. சமண முனிவர் வாழ்ந்த இடங்களை பள்ளி என்று சொல்லுவார்கள். சிரா என்ற சமண முனிவர் இருந்தமையால் சிராப்பள்ளி ஆனது என்கிறார்கள். முதலாம் இராஜராஜன் காலத்துச் சாசனமொன்று இவ்வூரை 'உரையூர் கூற்றத்துச் சிற்றம்பரி...

திருச்சிடா!

ஞாயிறன்று திருச்சியில் இருந்தேன். க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பேருந்துகள் நாலு ரூபாய்க்குப் போட்டி போட்டுக்கொண்டு பின்னால் வரும் பேருந்துக்கு எதுவும் மிச்சம் வைக்காமல் அள்ளிக்கொண்டு போகிறார்கள். விரல் இடுக்கில் தர்பையை இடுக்குவது போல பத்து ரூபாய் நோட்டுக்களை இடுக்கிக்கொண்டு எல்லாக் கண்டக்டர்களும் விசில் அடிக்கிறார்கள். பெரியாஸ்பத்திரிப் பக்கம் போகும் போது அதே ஃபினாயில் வாசனை வருகிறது. தில்லைநகர் சாலைகள் பெரிதாகியிருக்கின்றன. பல இடங்களில் இருந்த ஐயங்கார் பேக்கரிகள்' ஐயங்கார் கேக் ஷாப்'  என்று ஸ்ரீரங்கம் முதல் திருவரம்பூர் வரை மாறியுள்ளன. கூடவே பக்கத்தில் ஒரு பழமுதிர் சோலையும், பத்மா காபியும். புத்தூர் நாலு ரோட்டில் 'குப்பை போடாதீர்கள்' என்ற அறிவிப்புப் பலகை ஆங்கிலத்திலும், சாக்லேட் ஐஸ்கிரீம் கடைப் பெயர் தமிழிலும் இருக்கிறது. சிந்தாமணி - சிந்தாமணி மால் ஆகிவிட்டது! மாரிஸ் தியேட்டர் உள்ளே இருந்த இருக்கைகள் எல்லாம் வெளியே வந்துவிட்டன. ரமா கபேயில் அவர்களே இலையை எடுத்துவிடுகிறார்கள். திருச்சி பஸ்டாண்டில் ஒரு ஆட்டோ பின்னால் படித்தால் பட்னி போகும் குடித்த...

என் பேர் ஆண்டாள் - கட்டுரை தொகுப்பு

'என் பேர் ஆண்டாள்' கட்டுரை தொகுப்பு வந்துவிட்டது. எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாக சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்க தான் செய்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள காட்டுரைகள் அப்படி எழுதியது தான். சொல்லும் போது ( அறிவியல் கட்டுரைகளை தவிர) கொஞ்சம் மிகைப்படுத்தி பொய்யும் சேர்ந்துவிடுகிறது. போன ஜெம்னத்தில் பக்கத்து வீட்டு பூனைக்கு தச்சிமம்மு போட்ட புண்ணியமோ என்னவோ "நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி 'என்னமா கல கல என்று இருக்கிறது!' என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன் என்று எழுத்தாளர் கடுகு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, என்னை போலவே அவரும் மிகைப்படுத்தி சொல்பவர் என்று தெரிந்துக்கொண்டேன்!. கட்டுரை தொகுப்பில் என் சொந்த அனுபவங்கள், சுஜாதாவுடன் என் அனுபவங்கள், கொஞ்சம் அறிவியல், பயணக் கட்டுரைகள் என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அட்டைப்பட ஓவியம் என் மகன் அமுதன். அவனுக்கு என் ஸ்பெஷல் நன்றி!. என் பேர் ஆண்டாள் கட்டுரைகள் பத்து பைசா பதிப்பகம் பக்கம் 240 விலை ரூ 150/= கிடைக்க...

தாத்தாவுக்குக் கடிதம்

தாத்தாவுக்கு அந்த முக்கியமான கடிதத்தை நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எழுதினேன். தபால் பெட்டியில் போட்ட கொஞ்ச நேரத்தில் அதை திரும்ப எடுக்க வேண்டியிருந்தது. ஏன் என்று தெரிந்து கொள்ள எனது சுயபுராணம் கொஞ்சம்… மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலை பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது. மாதா மாதம் என்ன எழுதினேன் என்று தெரியாது. சேகரித்து வைத்திருந்தால் ‘தாத்தாவுக்கு எழுதிய கடிதங்கள்’ என்று ஒரு புத்தகம் போட்டிருக்கலாம். இன்லாண்ட் லெட்டரில் எழுதுவதில் உள்ள ஒரே சவால், அது ‘அன்ரூல்ட்’. அதனால் முதலில் பென்சிலில் லேசாகக் கோடு போட்டு எழுதிவிட்டு பின்னர் கோடுகளை அழித்துவிடுவேன். எழுத்துத் திறமை என் ரத்தத்திலேயே ஊறியது என்று தப்புக் கணக்கு போடாமல் இருக்க நான் எழுதிய ஒரு கடித நகலைக் கொடுத்துள்ளேன்.

எஸ்.ராஜகோபாலன்

எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர். போன முறை அவரை சந்தித்த போது தொடர்ந்து 5 மணி நேரம் நம்மாழ்வார், அரசியல், சுஜாதா என்று பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம். சில வாரங்களுக்கு முன்பு பேசிய போது "என்ன தேசிகன் எங்களையும், ஸ்ரீரங்கத்தையும் மறந்தாச்சா?" எப்ப வருவீர்கள் என்று கேட்டார். என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு 72 வயசிலும் முழுவதும் படித்துவிட்டு முன்னுரை எழுதி தந்தது என் பாக்கியம். சில விஷயங்கள் குறித்து இவரிடம் சந்தேகம் கேட்டால், அதை பற்றி அறிந்துக்கொண்டு 3-4பக்கம் எழுதி தபாலில் அனுப்பிவிடுவார். சில இக்கட்டான நேரங்களில் இவருடன் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும். இனி அது கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் கடுகு இவருக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் புத்தகம் அனுப்பினா...

அப்பாவின் ரேடியோ விமர்சனம் .எஸ்.ராஜகுமாரன்

பெண் பெயரில் எழுதுபவர்கள் எல்லோரும், பெண் எழுத்தாளர்கள் என்றுதான் அப்போது நானும் நினைத்துக் கொண்டிருந்தேன். எப்போது? சுஜாதா என்ற பெயரை பத்திரிகைகளில் பார்த்த தொடக்க காலங்களில். [எழுபதுகளின் பிற்பகுதி] அதற்கு முன்னால் இதுபோல இன்னும் ஒரு காமெடியான யூகம் உண்டு. சிறு வயதில் ரேடியோ கேட்கும்போது ஜோடியாக செவிகளை வருடிய, ட்டி.எம்.எஸ்.- சுசீலாவை புருஷன் பொண்டாட்டி என்று ரொம்ப நாள் வரை கற்பனை செய்து கொண்டிருந்தேன். இதை ‘முதல் ரேடியோ பாடிய வீடு’ என்னும் எனது சிறுகதையில் [விகடனில் பிரசுரம்] பதிவு செய்திருப்பேன். அக்கதை என் அம்மாவின் வாழ்க்கைச் சுருக்கம் என்று சொல்லலாம். நான் பிறந்து வளர்ந்த அம்மாவின் வீடுதான் எங்கள் ஊருக்குள் முதல் ரேடியோ பாடிய வீடு. நான் அந்தக் கதையில், அம்மாவின் வீட்டில் விவரித்திருந்த  பழைய மர்ஃபி வால்வ் ரேடியோ பற்றிதான் அப்பாவின் ரேடியோவில் தேசிகனும் வர்ணித்திருக்கிறார். ஆனால் நான் சொல்லாத சிலதை அவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதே போல் நான் சொன்னவை சில அவர் சொன்னதில் விடுபட்டிருந்தது. இருவரின் மர்ஃபி ரேடியோ காலமும் கொஞ்சம் முன் பின் இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு ...

அப்பாவின் ரேடியோ நூல் வெளியீடு

வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு வாகை கூட்டத்தில் எனது சிறுகதை தொகுப்பு வெளியீடு. இடம் கப்பன் பூங்கா ( ப்ரஸ் க்ளப் எதிரில் ) வெளியிட   நேசமிகு ராஜகுமாரன் சென்னையிலிருந்து வருகிறார்.  இவரிடம் நான்  மூன்று முறை பேசியிருப்பேன், பார்த்ததில்லை. பெற்றுக் கொள்ள   இரா.வினோத் வருகிறார். இவரை பார்த்ததில்லை, பேசியதில்லை. இந்த மாதிரி கூட்டங்களில் நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். நீங்களும் கலந்துக்கொண்டால் சந்தோஷப்படுவேன். - சுஜாதா தேசிகன்

அப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்

ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் தன்னுடைய படைப்பு சிறுபத்திரிகையில் தொடங்கி, வெகுஜன பத்திரிகையில் வர வேண்டும் என்ற ஆவல் இருக்கதான் செய்கிறது. பிறகு அந்த ஆசை தனி புத்தகமாகவும் பிறகு சினிமா என்று அது தொடர்கிறது. "என்னுடைய கதை விகடனில் வந்திருக்கு படித்தீர்களா ?" என்று நண்பர்கள் குதூகலத்துடன் தொலைபேசியில் சொல்லும்போது அவர்களுடைய சந்தோஷத்தை உணரமுடிகிறது. இணையம், ஈ-மெயில், டிவிட்டர் என்று பல வந்தாலும் புத்தகத்தில் நம் எழுத்தைப் பார்க்கும் ஆனந்தமே அலாதி தான். போன மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியது ஒரு பெண். "சார் நீங்க தான் சுஜாதா தேசிகனா ?" "ஆமாம்" "உங்க பெருங்காயம் கதை குங்குமத்தில் படித்தேன்...உங்களுக்கு சொந்த ஊர் தேரெழுந்தூரா?" "இல்லை.. திருச்சி" "ஊரைப் பற்றி அப்படியே எழுதியிருக்கீங்களே... எங்களுக்கு அந்த ஊர் தான் இப்ப சென்னையில் இருக்கோம்... கதை ரொம்ப அருமை... எங்க கதை மாதிரியே இருந்தது" "கதை வந்து மூன்று மாசத்துக்கு மேலே ஆச்சே இப்ப தான் படிச்சீங்களா ?" "ஆமாங்க.. நாங்க தமிழ் பத்திரிகை எல்லாம் வாங்குவதில்ல...

மலையாள திவ்யதேசப் பயணம் - 2

மலைநாட்டு திவ்ய தேசங்கள் பஞ்ச வாத்தியம் அடுத்தடுத்து பல திவ்யதேசங்களைப் பார்க்கும்முன் கேரளா திவ்யதேசங்களைப் பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்துவிடலாம். கேரளா கோயில்கள் எல்லாம் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்டவை. பெரும்பாலும் சதுர வடிவம். அதே போல் மூலவர் நின்ற திருக்கோலம். கைகளில் சங்கம், சக்ரம், கதை, பத்மம் (குருவாயூர் மாதிரி தோற்றம்). பல கோயில்களைத் தரிசித்த பிறகு நமக்கு நிச்சயம் குழப்பம் வரும்.

மலையாள திவ்யதேசப் பயணம் - 1

குலசேகர ஆழ்வார் வைபவம் போய் வந்த பாதை ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களுடன் மலையாள திவ்யதேசங்கள் சென்று வந்தது ஒரு மாறுபட்ட அனுபவம். பொதுவாக 108 திவ்யதேசம் செல்லும் அன்பர்கள் ஒரு கோயிலை முடித்துவிட்டு அடுத்த கோயிலுக்கு ஓட்டமாக ஓடுவார்கள். ஒரு நாளில் இவ்வளவு பார்த்தேன் என்று ஏதோ பரிட்சை சிலபஸ் முடிப்பது போல முடிப்பார்கள். சிலர் சின்ன புத்தகத்தில் தங்களுடைய லிஸ்டை 'டிக்' செய்து இன்னும் எனக்கு 22 பாக்கி என்பார்கள். இந்த மாதிரி அவசரத்தில் சேவிப்பதால் இரண்டு நாள் முன் செய்தித்தாளில் என்ன வந்தது என்பது போல நினைவில் இருப்பதில்லை. அப்படி இல்லாமல், திவ்யதேசங்களைப் பார்த்துவிட்டு, அந்தந்தக் கோயிலிலேயே கிட்டதட்ட ஒரு மணிநேரம் உட்கார்ந்து, அந்தக் கோயிலைப் பற்றிய சிறப்பு, ஸ்தல புராணம், ஆழ்வார் பாடிய பாசுரங்களின் உட்கருத்து என்று வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன். ஸ்ரீவைஷ்ணவ திய்வதேசங்கள் 108. இவை ஆழ்வார்களால் பாடபெற்ற திருத்தலங்கள். சோழநாட்டு திவ்யதேசங்கள் 40; பாண்டிய நாட்டில் 18; தொண்டை நாட்டில் 22; நடுநாடு - 2, சேர நாடு அல்லது மலையாள திவ்ய...

அந்த படம் - ஒரு மறக்கமுடியாத தருணம்

நண்பர் நாணா எனக்கு அனுப்பிய கடிதம்.   அன்பு நண்பருக்கு....  திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது. அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை) பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்.. மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம். அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த...

புத்தகமாக லைட்ஸ் ஆன்

ரா.கி.ரங்கராஜனை ஒரு மழை நாளில் சந்தித்த போது குமுதத்தில் தான் எழுதிய 'லைட்ஸ் ஆன்' தொகுப்பு புத்தகமாக வர வேண்டும் என்று விருப்பட்டார். "உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்றார் கிட்டதட்ட ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதற்கு பிறகு அவருடன் நடந்த சம்பாஷனை என்னை மேலும் சங்கடப்படுத்தியது. "நானே போடுகிறேன்" என்று ஒரு வீராப்பில் அவர் வைத்திருந்த 'லைட்ஸ்-ஆன்' பத்திரிக்கை தொகுப்பை பெங்களூருக்கு எடுத்து வந்தேன். 6 மாதம் கழித்து முடியாமல் திருப்பி அனுப்பினேன். போன வருஷம் எழுத்தாளர் 'சுபா' போடுவதாக தகவல் தெரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால் புத்தகம் வரும் போது திரு.ரா.கி.ர நம்முடன் இல்லை. போன வாரம் எழுத்தாளர் சுபா அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். லேசான புத்தகம், உள்ளே லைட்டான விஷயம்...  ஆனால் குற்ற உணர்ச்சியால் மனசு கனத்தது. லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் ) தங்கத் தாமரைப் பதிப்பகம், 37 கால்வாய்க் கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை 600020 போன்:24414441. பக்கம்: 160 விலை:ரூ 70. மற...

திருவரங்க உலா

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை   பற்றி பத்ரி எழுதியிருந்தார். ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளைப் சுற்றிப் பார்க்க போகிறார்கள் என்று தெரிந்து  ஒரு நாள் மட்டும் அவர்களுடன் ஸ்ரீரங்கம் சென்று வந்தது இனிய அனுபவம். தாத்தா, பாட்டி, மாமி மாமா, இளைஞர்கள், இளைஞிகள் என்று அவியல் மாதிரியான ஒரு குழு. குழு என்று சொல்லுவதை விட குடும்பம் என்று சொல்லலாம். .

நேற்று புத்தகக் காட்சியில்...

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வழிநெடுகிலும் எம்.ஜி.ஆர் சிரித்த முகத்துடன் என்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்றார். வடபழனியில் டிராஃபிக் நெரிசலில் ஆபீஸ் கூட்டம் தவித்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் ஹார்ன் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள். "என்ன டிராபிக் ஜாம்?" என்று ஆட்டோ ஓட்டுபவரிடம் கேட்டேன் "தெர்ல சார்" பெங்களூர் மாதிரி காலைப் பனி கூட கிடையாதே என்று பார்த்தபோது 'கலை இலக்கியப் பகுத்தறிவு' பேனர் முழு சிக்னலையும் மறைத்ததால் வந்த வினை.

உடுப்பியில் இரண்டு நாள்

கிறுஸ்துமஸ் லீவுக்கு உடுப்பி போகலாம் என்று முடிவு செய்து திடீர் என்று குடும்பத்துடன் காரில் கிளம்பினோம். "வழி எல்லாம் தெரியுமா ?" "அது தான் GPS இருக்கே .. " "இப்படித் தான் போன தடவை அதை நம்பி போனோம்.. பாதி வழியில ரோடு பிளாக்... மாமி திரும்ப வீட்டுக்கு வழி சொல்லிடுத்து" ( GPSல் பெண் குரலில் வழி சொல்லும் அதை மாமி என்று அழைப்போம், மாமாவிற்கும் மாற்றிக்கொள்ளலாம் !) சனிக்கிழமை காலை 6 மணிக்கு உடுப்பி கிளம்பினோம். பெங்களூர் - நீலமங்களா - சென்னராயப்பட்டனா, ஹாசன், ஷிர்டி காடு வழியாக மங்களூர் - உடுப்பி என்ற வழியில் போனோம். 420 கிமீ தூரம். உடுப்பி என்றால் நினைவுக்கு வருவது ஹோட்டல் இன்னொன்று கிருஷ்ணர். . கிருஷ்ணர் கோயில் எப்படி இருக்கும் எங்கே தங்கப் போகிறோம் என்ற எந்தத் தகவலையும் கூகிளில் பார்க்காமல் புறப்பட்டேன். உடுப்பி போய்ச் சேர்ந்தபோது மதியம் 3 மணி ஆகிவிட்டது. தங்குவதற்கு எல்லா மடங்களும், ஹோட்டல்களும் 'ஹவுஸ் ஃபுல்' என்று போர்ட் மாட்டியிருந்தார்கள். ஏதோ ஒரு மடத்தில் சில மணி நேரம் சற்றே இளைப்பாற ஒரு ரூம் குடுத்தார்கள். ஏதோ ஒரு ஹரே ராமா ...

போன வருஷம் என்ன செய்தேன் ?

போன வருஷம் என்ன செய்தேன்? பெரிதாக ஒன்றும் கிழிக்கவில்லை. கிச்சனில் தேதி கிழிக்கும் காலெண்டர் கூட 2.1.12 என்று காட்டிக்கொண்டு இருக்கிறது. சில அருமையான சிறுகதைகள் படித்தேன். ஆகஸ்ட் மாதம் கடைசியில் திடீர் என்று 4 சிறுகதைகள் எழுதினேன். தாராளமாய் சொல்கிறேன் தேசிகன் சார்உங்கள் போராளி ஸ்டோரி பிரமாதம் - ஏராள மாக எழுதுங்கள், மற்று மொருசுஜாதா ஆகயென் வாழ்த்துக்கள் அன்பு. ....என்று கிரேஸி மோகன் வாழ்த்தியது சந்தோஷமாக இருந்தது. நல்ல க்ரைம் கதை ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனைவி, "நீங்க எழுதுவதே ஒரு க்ரைம்தான்" என்றாள். புது காரை எடுத்துக்கொண்டு ஊட்டி, உடுப்பி என்று சுற்றினேன். இரண்டு முறை பஞ்சர் ஒட்டினேன். நிறைய சினிமா பார்த்தேன். இரண்டு மூன்று முறை தப்பாக ஓட்டியதற்கு யார்யாரிடமோ திட்டு வாங்கினேன். 'ஹம் ஆப் கே ஹை கோன்' ஹிந்தி படத்திற்குப் பிறகு மீண்டும் தலாஷ் படத்தை தியேட்டரில் பார்த்தேன். குழந்தைகளுடன் டிவி ரிமோட்டுக்கு சண்டை போட்டேன். டிவியில் கோசாமி, ஏர்டெல் சூப்பர் சிங்கர், நீயா நானா?, சமையல் எண்ணெய் விளம்பரம் பார்த்தேன். ஃபேஸ்புக்கினால் நி...