Skip to main content

புத்தகமாக லைட்ஸ் ஆன்


ரா.கி.ரங்கராஜனை ஒரு மழை நாளில் சந்தித்த போது குமுதத்தில் தான் எழுதிய 'லைட்ஸ் ஆன்' தொகுப்பு புத்தகமாக வர வேண்டும் என்று விருப்பட்டார். "உங்களுக்கு தெரிந்த பதிப்பகம் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன்" என்றார்

கிட்டதட்ட ஷாக் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அதற்கு பிறகு அவருடன் நடந்த சம்பாஷனை என்னை மேலும் சங்கடப்படுத்தியது.

"நானே போடுகிறேன்" என்று ஒரு வீராப்பில் அவர் வைத்திருந்த 'லைட்ஸ்-ஆன்' பத்திரிக்கை தொகுப்பை பெங்களூருக்கு எடுத்து வந்தேன். 6 மாதம் கழித்து முடியாமல் திருப்பி அனுப்பினேன்.

போன வருஷம் எழுத்தாளர் 'சுபா' போடுவதாக தகவல் தெரிந்து சந்தோஷப்பட்டேன். ஆனால் புத்தகம் வரும் போது திரு.ரா.கி.ர நம்முடன் இல்லை.

போன வாரம் எழுத்தாளர் சுபா அந்த புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தார். லேசான புத்தகம், உள்ளே லைட்டான விஷயம்...  ஆனால் குற்ற உணர்ச்சியால் மனசு கனத்தது.

லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் )
தங்கத் தாமரைப் பதிப்பகம்,
37 கால்வாய்க் கரை சாலை,
கஸ்தூரிபா நகர், அடையாறு,
சென்னை 600020
போன்:24414441.
பக்கம்: 160 விலை:ரூ 70.

மற்ற பதிவுகள்:
சென்னையில் அட(டை) மழை!

Comments

  1. 'லைட்ஸ் ஆன்' வினோத் ( ரா.கி.ரங்கராஜன் )

    ReplyDelete
  2. Replies
    1. தெரியவில்லை. கொடுத்திருக்கும் அட்ரஸுக்கு போன் செய்து கேட்டுப்பாருங்கள்.

      Delete
  3. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்! தகவலுக்கு நன்றி!!

    ReplyDelete
  4. தேசிகன்,பழைய தேசிகம் பக்கம் என்னவானது..?

    ReplyDelete

Post a Comment