நண்பர் நாணா எனக்கு அனுப்பிய கடிதம்.
அன்பு நண்பருக்கு....
திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது.
அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை)
பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்..
மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம்.
அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த நட்பு....
மிகச் சமீபத்தில் வெளியான 'வாரம் ஒரு பாசுரம்' அட்டைப்படம் வரை தொடர்ந்து...
இப்போது நான் 'இந்தியா டுடே' பத்திரிகையின் - தமிழ், தெலுங்கு, மலையாளப் பதிப்புகளின் - Chief Visualiser.
என்னுடைய வீடு கிரஹப்பிரவேசத்திற்கு அவர் குடும்ப சகிதம் வந்து வாழ்த்தியது..எனக்கும், என் உறவினர்களுக்கும் - வீடு வாங்கியதை விட பெரிய இன்ப அதிர்ச்சி.
சில ஆண்டுகள் முன் ஒரு டிசம்பர் மாதத்தில் நானும் அவரும் திருச்சி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ( கடைசி நேரத்தில் திருமதி சுஜாதா அவர்களால் வர இயலவில்லை) அந்த இரண்டு நாட்களில் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசித் தீர்த்தோம். அப்போது இறந்துபோன யாரோ ஒரு நடிகையின் தற்கொலை மேட்டரில் ஆரம்பித்து உயிர், மறுபிறப்பு, இறப்பு பற்றி பேசும் போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
'இறப்பு என்பது யாருக்குமே திடீர்ன்னுதான் வரும்..அந்த நேரத்தில் யாரும் போட்டோ எடுத்துக்கொண்டு சாவதில்லை. அதனால இன்னும் பல வீடுகள்ல பத்தாம் நாளுக்கே படத்தைத் தேடுவாங்க...
ஆனா...'காதலா காதலா' படத்தில் வர்ற கமல் இறந்தவரின் படத்தை உடனடியாக வரைஞ்சு..பாடி எடுக்கறதுக்கு முன்னால அதை அந்த வீட்டில் சேர்ப்பதைக் காமெடியாக செய்திருப்பார்.. ....என்றார்.
என் சோகம்...நானே அவரது படத்தை அவர் மறைந்த இரவே ரெடி செய்து....( இதை உண்மையாக கண்ணீருடன்தான் டைப் செய்து கொண்டிருக்கிறேன்) அவர் இறந்தும் அவர் உடல் வீடு வந்துசேராத நிலையில் அவரது படத்தை பெற்றுக்கொண்டு திருமதி சுஜாதாவும் அவருடைய மகனும்.. அழுது கலங்கியது.. என்னையும் சுற்றியிருந்தோரையும் அழவைத்தது.. மிக மிக நெகிழ்வான ஒரு மறக்கமுடியாத தருணம்..
மறுநாள் அவரது வீட்டிற்கு அவரது உடல் வரும் வரை அவருக்காகப் பூத்த மலர் மாலைகளுடன் சிரித்த முகத்துடன் நானே எடுத்த அந்தப் புகைப்படம் வீற்றிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மட்டும் உள்ளுக்குள் அதிகமாக வலித்தது மனசு.
கலக்கத்துடன்
நாணா
அன்பு நண்பருக்கு....
திருமயம் பக்கத்தில் இராங்கியம் எனும் சிறுகிராமத்தில், என்னுடைய பள்ளி நாட்களில் - தினமணிக்கதிரில் வெளிவந்த 'சொர்க்கத் தீவு' தொடர்கதை மூலம் 'சுஜாதா' என்ற பெயருடன் ஒரு 'அமானுஷ்ய' ஈர்ப்பு ஆரம்பமானது.
அது டெவலப் ஆகி..கல்லூரி நாட்களில் விகடனின் 'கரையெல்லாம் செண்பகப்பூ' சமயத்தில் அவருடைய தாக்கம் கொஞ்சம் ஓவராகி..லெண்டிங் லைப்ரரியை ஆரம்பிச்சு...( அப்புறம் அதை நடத்தமுடியாமல் நொந்ந்ந்து நூலானது - ஒரு கிளைக் கதை)
பிறகு, அந்த சலவைக்காரி, கணேஷ்-வசந்த்..போன்ற வார்த்தைகளால் எல்லாருக்கும் என்ன பாதிப்பு வந்ததோ..அதே மாதிரி பாதிப்புடன்...அவருடன் கதைகளில் இணைந்து மிரட்டிய ஜெயராஜின் 'லோ ஹிப்'களில் மனதைப் பறிகொடுத்து..அப்படியே ஆர்ட்டடிஸ்ட் ஆனவன்..நான்..
மேற்படி அனுபவங்கள் கொண்ட எனக்கு அவரது நேரடி அருகாமை கிடைத்தது ஒரு அற்புதம்.
அவரது ஓலைப் பட்டாசு, நைலான் கயிறு.போன்ற புத்தகங்களின் மறுபதிப்புகளுக்கு அட்டை வடிவமைப்பு பற்றிய - என் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரிடம் பாராட்டையும் பெற்றுத் தொடர்ந்த நட்பு....
மிகச் சமீபத்தில் வெளியான 'வாரம் ஒரு பாசுரம்' அட்டைப்படம் வரை தொடர்ந்து...
இப்போது நான் 'இந்தியா டுடே' பத்திரிகையின் - தமிழ், தெலுங்கு, மலையாளப் பதிப்புகளின் - Chief Visualiser.
நாணா - சுஜாதா |
சில ஆண்டுகள் முன் ஒரு டிசம்பர் மாதத்தில் நானும் அவரும் திருச்சி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ( கடைசி நேரத்தில் திருமதி சுஜாதா அவர்களால் வர இயலவில்லை) அந்த இரண்டு நாட்களில் அவரும் நானும் நிறைய விஷயங்கள் பேசித் தீர்த்தோம். அப்போது இறந்துபோன யாரோ ஒரு நடிகையின் தற்கொலை மேட்டரில் ஆரம்பித்து உயிர், மறுபிறப்பு, இறப்பு பற்றி பேசும் போது அவர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது.
'இறப்பு என்பது யாருக்குமே திடீர்ன்னுதான் வரும்..அந்த நேரத்தில் யாரும் போட்டோ எடுத்துக்கொண்டு சாவதில்லை. அதனால இன்னும் பல வீடுகள்ல பத்தாம் நாளுக்கே படத்தைத் தேடுவாங்க...
ஆனா...'காதலா காதலா' படத்தில் வர்ற கமல் இறந்தவரின் படத்தை உடனடியாக வரைஞ்சு..பாடி எடுக்கறதுக்கு முன்னால அதை அந்த வீட்டில் சேர்ப்பதைக் காமெடியாக செய்திருப்பார்.. ....என்றார்.
என் சோகம்...நானே அவரது படத்தை அவர் மறைந்த இரவே ரெடி செய்து....( இதை உண்மையாக கண்ணீருடன்தான் டைப் செய்து கொண்டிருக்கிறேன்) அவர் இறந்தும் அவர் உடல் வீடு வந்துசேராத நிலையில் அவரது படத்தை பெற்றுக்கொண்டு திருமதி சுஜாதாவும் அவருடைய மகனும்.. அழுது கலங்கியது.. என்னையும் சுற்றியிருந்தோரையும் அழவைத்தது.. மிக மிக நெகிழ்வான ஒரு மறக்கமுடியாத தருணம்..
மறுநாள் அவரது வீட்டிற்கு அவரது உடல் வரும் வரை அவருக்காகப் பூத்த மலர் மாலைகளுடன் சிரித்த முகத்துடன் நானே எடுத்த அந்தப் புகைப்படம் வீற்றிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு மட்டும் உள்ளுக்குள் அதிகமாக வலித்தது மனசு.
கலக்கத்துடன்
நாணா
அந்த படம் |
கலங்க வைத்து விட்டீர்கள் சார்...
ReplyDeleteஅவரது நினைவுநாளில் என் நன்றி சார்
Deleteநெகிழ வைத்த கடிதம்.....
ReplyDeleteமனதில் பட்டதை...
Deleteமனதை நெகிழ வைத்து கண் கலங்க வைத்த பகிர்வு. நினைவில் என்றும் வாழ்பவர் அவர்.
ReplyDeleteநன்றி சார்
Deleteமனம் ரொம்ப வலிக்கிறது
Deleteநல்ல மனதிற்கு நல்லவர்கள் நிறைய கிடைப்பார்கள்
ReplyDeleteநல்ல மனதிற்கு நல்லவர்கள் நிறைய கிடைப்பார்கள்
ReplyDeleteநல்ல இதயங்களுக்கு என் நன்றிகள் ....naanaas@gmail.com
ReplyDeleteI envy the trip to Trichy with him and of course U desrve for this and his soul will always bless u dear Nana..
ReplyDeleteசுஜாதாவின் படைப்புகளை வாசிப்பவர்களுக்கே ஒரு வித பெருமித உணர்வு இருக்கும். சுஜாதாவின் தனிப்பட்ட அன்பை அனுபவித்த நாணா அவர்கள் கண்டிப்பாய்க் கொடுத்து வைத்தவர்.
ReplyDeleteசுஜாதாவின் படைப்புகளை வாசிப்பவர்களுக்கே ஒரு வித பெருமித உணர்வு இருக்கும். சுஜாதாவின் தனிப்பட்ட அன்பை அனுபவித்த நாணா அவர்கள் கண்டிப்பாய்க் கொடுத்து வைத்தவர்.
ReplyDeleteGreat Nana-ji! :) - LV Chenteley, Singapore
ReplyDeleteHappy...How are you?
Deleteanna nandri santhosamaga irunda ennai azha vaithuvittadu ungalin inda pagirvu - idu oru sila nalla ullangalukku mattumey kidaikkak koodiya migap periya varaprasadm meendu nandri oru kanam "ganamaga marivitadu" meendu enadu nandrikal
ReplyDeleteanna nadri oru kanam enmanadu "ganamanadu" meendum nandri ippadipatta nigazhvugal ulagathil ungalai madiri thalaisiranda manidargaluuku mattum than kidaikkum meendum nandri
ReplyDeleteநெஞ்சை நெகிழ வைத்த பகிர்வு.
ReplyDeleteஇதுபோல் இன்னும் நிறைய பகிர்வுகளை எதிர்பார்கிறோம்.
-வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனைய துயர்வு
நெஞ்சை நெகிழ வைத்த பகிர்வு.
ReplyDeleteஇதுபோல் இன்னும் நிறைய பகிர்வுகளை எதிர்பார்கிறோம்.
-வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத் தனைய துயர்வு
உங்களுடனான fb நட்பு யதேச்சையாக நடந்ததுதான். ஏதோ ஒரு frequency இழை பொதுவாக இருப்பதை உணர்ந்தேன். சுஜாதா அவர்களோடு உங்களுக்கு உள்ள நட்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ReplyDeleteவஸந்த் வஸந்த் கதையால் 80கள்ல அவரின் எழுத்து அறிமுகத்திற்குப் பிறகு தான் தமிழ் மொழி மீதான காதல் அதிகரித்து பிறகு தாய் மொழியே சுஜாதா'வானது.
அந்த வஸந்த் வஸந்த் கதையை எனக்கு அறிமுகம் செய்த கல்லூரி தோழியே, காதலியாகி, மனைவியாகி... ஆச்சரியமான விஷயம், மருத்துவம் படிக்கும் எங்கள் மகனும், தலைமுறை இடைவெளி இன்றி, எப்பொழுதும்... சுஜாதா.. சுஜாதா... சுஜாதா..!
wOw ..
Deleteவசந்த் வசந்த் கதை எங்கே பதிவிறக்கம் செய்வது என்று சொல்லுங்களேன் ப்ளீஸ். டோரேன்ட்சில் அரை குறையாக பதிவிறக்கி பாத்து பக்கங்கள் படித்து விட்டேன். மேலே டவுன்லோட் ஆகவில்லை. சஸ்பென்சே தாங்க முடியல.
கோயம்புத்தூர் புலியகுளம் அந்தோணியார் பள்ளியில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது (1975- எனது வயது அப்போது 15), எனக்கு, கே.ராஜன் என்ற நண்பன்தான் சுஜாதாவின் நூல்களை அறிமுகபடுத்தினான். இன்று எனக்கு வயது 54. அன்றும் சுஜாதாவை ரசித்தேன். இன்றும் ரசிக்கிறேன். எனது மகனுக்கும் சுஜாதாவை பிடிக்கும். அவரைப் பற்றியும், அவரது நூல்களை பற்றியும் எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் பேசமுடியும் ! வியக்க முடியும்!
ReplyDeleteNana, I am really very proud of you and envy because of your association with legend like great Sujatha, though we hail from the same village, your passion over your profession had made you to access such celebrities, wish you to excel in your professional skills as per the need of the situations. By the way, I could sense a good writer emerging from you, even you may not aware, better nurse him well by writing more of wonderful memories you had with other celebrities, keep it up.....
ReplyDeleteசுஜாதா பற்றிய நினைவு கூறல் நெகிழ வைத்து விட்டது. எழுத்தில் மாயாஜாலம் காட்டிய மந்திரவாதி
ReplyDeleteடச்சிங் நண்பரே! ❤️
ReplyDeleteSuper sir.
ReplyDeleteநினைவலைகளின் கண்ணீர் துளிகள்......
ReplyDeleteகண்களை பனிக்கச்செய்துவிட்டன
ReplyDeleteகண்கள் கலங்குவதை கட்டுப்படுத்துவது கடினம்
ReplyDeleteகண்கலங்க வைத்துவிட்டார்கள் நண்பரே
ReplyDeleteசுஜாதா என்கிற ஆளுமைக்கு வயது வித்தியாசம் கிடையாது. அவரின் ஜீனே என்கிற நாய் ஒரு Al . அறிவாற்றலின் எல்லைக்கே சென்று விதி படைத்தவர். நன்றிகள் நானா மற்றும் சுஜாதா. வாழ்க்க நினைவுகள்
ReplyDelete