Skip to main content

Posts

மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்

மணவாள மாமுனிகள் திருவஹிந்திரபுரம் இந்த ஆனி மூலம் என் கைக்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யான புத்தகம் புத்தகம் கிடைத்தது. அன்று தான் "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" அவதார தினம். சில ஆண்டுகளுக்கு முன்  திருவஹிந்திரபுரத்துக்கு முதல் முறை சென்றிருந்தேன். தேவநாதப் பெருமாள், ஸ்வாமி தேசிகன் அவர் அங்கே தன் கையாலேயே வெட்டிய அழகான கிணறு என்று எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வரும் போது வடக்கு மாட வீதியில் மணவாள மாமுனிகள் சந்நதியை பார்த்தவுடன் அவரையும் சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று உள்ளே சென்றேன். அதுவரை எங்கள் கூடவே வந்த ஒரு உறவினர் ( அந்த ஊர்க்காரர் தான் ) இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை “நீங்க உள்ளே சென்று சேவித்துவிட்டு வாங்க... அடியேன் இங்கேயே இருக்கிறேன்” என்றார். எனக்குப் புரியவில்லை. சந்நதியின் உள்ளே மணவாள மாமுனிகளைக் காணவில்லை ஆனால் மினியேச்சர் சைசில் பார்த்தசாரதி பெருமாள் இருந்தார் !

நான் இராமானுசன் புத்தகத்தை முன் வைத்து..

நண்பர் Amaruvi Devanathan ஆமருவி தேவநாதன் எழுதிய ’நான் இராமானுசன்’ என்ற புத்தகம் பற்றி தொடர்ந்து இரண்டு வரி முகநூல் டீசர் மூலம் புத்தகம் எதைப்பற்றியது என்று ஒருவாறு தெரிந்தாலும் அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்துக்கொண்டே இருந்தது. உடையவர் திருநட்சத்திரம் அன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டு வாங்கி சில நாள் முன் தான் படித்து முடிக்க முடிந்தது. பிரமம் என்ன ? அதை எப்படி அணுக வேண்டும் என்ற கேள்விகள் பல நூற்றாண்டுகளாக இருந்துக்கொண்டே இருக்கிறது. ஆதிசங்கரர் தொடங்கி இராமானுசர் வரை அதை எப்படி அணுக வேண்டும் என்று தர்க்க ரீதியான காரணங்களையும்(logical reasoning) கொண்டு ஆராய்ந்துள்ளார்கள். பிரம்ம சூத்திரத்தில், சூத்திரம் ஒன்றாக இருந்தாலும், இருவரும் எழுதிய உரையில் வேறுபாடுகள் இருக்கிறது. இதுவே அத்வைத்தம், விசிஷ்டாத்வைதம் என்ற சித்தாந்தமாக இன்றும் நிலவிவருகிறது. ’இதுவே உண்மையான பகுத்தறிவு. நான் இராமானுசன்’, என்ற புத்தகத்தில் உடையவரே இந்த தத்துவங்களுக்கு விளக்கங்கள் அளிப்பது மாதிரி எழுதியிருக்கிறார் ஆமருவி தேவநாதன். பாராட்டுக்கள். "இராமானுசனும், உறங்கா...

ஸ்ரீ மணக்கால் நம்பியும், ஸ்ரீ மடப்பள்ளியும்

இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் ஸ்ரீரங்க விஜயம். பெரிய பெருமாளை சேவிக்க ரூ250/= க்யூவே பெரிதாக இருக்க, ’அப்பால’ இருக்கும் இன்னொரு ரங்கநாதப் பெருமாளாகிய அப்பக்குடத்தானை செவிக்க வண்டியைத் திருப்பினேன். தன் வலது கையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் இந்தப் பெருமாளுக்கும் எனக்கும் ரகசிய சம்பந்தம் ஒன்று உண்டு. சொல்கிறேன். கோயிலடி என்னும் அப்பகுடத்தான் பல வருஷம் முன் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளை சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவை திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார். கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டு சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் ...

இராமானுசனுடையார் - இசையுடன் ஆழ்வார் பாசுரங்கள்.

ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது. பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென். நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் எந்தெந்த காலத்தில் எந்தெந்த திவ்யபிரபந்தம் சேவிக்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீராமானுஜருடைய வாழித் ...

அப்பாவும் ராஜாஜியும்

எனக்கு சுஜாதா மாதிரி என் அப்பாவிற்கு ராஜாஜி. ராஜாஜியை நேரில் சந்தித்ததில்லை ஆனால் அவர் மீது ஒரு அசுரத்தனமான பக்தி இருந்தது. சம்பளம் வந்தவுடன், அந்த காலத்திலேயே ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி'க்கு ’ஐந்து ரூபாய் மணி ஆர்டர்’செய்த ரசீதுகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம், ஆத்ம சிந்தனை போன்ற பலப் புத்தகங்கள் அவரிடம் இருந்தது. ராஜாஜி பற்றி பெரிய தீபாவளி சைஸ் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் ( இது இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்). அவர் மேடைப் பேச்சை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு டைரியில் குறிப்புக்களுடன் எழுதிவைத்திருந்தார். நடுநடுவே அவருக்குப் பிடித்ததை அடிக்கோடுகளுடன்,  இதைத் தவிர ராஜாஜிக்கு அவர் நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் ராஜாஜிக்கு எழுதியவை பெரும்பாலும் ஸ்ரீவைஷ்ணவம் சம்மந்தப்பட்டவை - ஆழ்வார், திவ்யபிரபந்தம், வேதாந்த தேசிகன் நூல்கள். பலவற்றுக்கு ராஜாஜி பதிலும் போட்டிருந்தார்!. ஒரு கடிதத்துக்கு மட்டும் ராஜாஜி கொஞ்சம் கோபமாக என் அப்பாவிற்கு எழுதிய ஒரு பக்க கடிதம் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கடிதத்தின் சாரம் இது தான் “ந...

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

சுஜாதவின் பிறந்த நாளாக நேற்று வழக்கம் போல சில சுஜாதா எழுத்துக்களை இணையத்திலும், புத்தகத்திலும் படித்து இன்புற்றேன். ’கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று அடியேன் தொகுத்த புத்தகத்திலிரிந்து ஒரு கட்டிரை ( ஆனந்த விகடன் 1999ல் எழுதியது) கீழே. இந்த கட்டுரை வந்த சமயம் இணையம் அவ்வளவு முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் பல வெளிநாட்டுக்கு சென்ற இளைஞர்கள் சுஜாதாவை பல குழுமத்தில் காய்ச்சி எடுத்தனர். அதில் என் நண்பர்களும் அடக்கம். அவரிடம் மெகக்கட்டு இதை பற்றி சொன்னேன். கேட்டுக்கொண்டார். திரும்ப என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் போகவில்லை ?” “போகணும் என்று தோன்றவில்லை.. ஆனால் என்னுடன் காலேஜில் படித்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்” “சரி... நீயும் போகலாமே... “ கொஞ்சம் தயங்கி தயங்கி அந்த உண்மையை சொன்னேன் “சார் நீங்க இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு போக மனசு வரவில்லை...” என்றேன். ஒரு சின்ன புன்னகை. இன்னும் என் மனசில் இருக்கிறது. போயிருந்தால் சுஜாதா உட்பட பல விஷயங்களா இழந்திருப்பேன். இனி கட்டுரை.. வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர...

ஸ்ரீரங்க விஜயம்

மூன்று நாள் விஜயமாக திருச்சி, ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சென்னை திருச்சி நெடுஞ்சாலைகளில் 20கிமீட்டருக்கு இருபக்கத்திலும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் முளைத்து, ’சக்கரையுடன் இறக்கப்பட்ட டிகாஷனின் உதவியுடன் அசட்டு தித்திப்பு காபியுடன் திருச்சி வந்து சேர்ந்த போது சித்திரை வெயிலிலும் சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கூட்டமும் பரோட்டாவும் குறையவில்லை. கரூர் பைபாஸ் சாலை, பெங்களூர் 80 அடிச் சாலை மாதிரி இரண்டு பக்கமும்  பிராண்டட் கடைகளும், ஹோட்டல்கலும் வந்துவிட்டது. பேருந்துகள் ராட்சச சத்தத்துடன் இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடித்துக்கொண்டு பறந்து செல்கிறது. ஜங்ஷன் பஸ்டாண்டில் சங்கீதா ஹோட்டலில் எப்போதும் போல கூட்டம் அலைமோதுகிறது. நகர் வலம் வந்த போது, பல இடங்களில் நுங்கு கிடைக்கிறது. முன்பு எல்லாம் பனை ஓலையில் கட்டித்தருவார்கள், தற்போது எல்லாம் கேரி பேக் மயம் தான். அன்று ஆசாரியர்கள் நடமாடிய ஸ்ரீரங்கம் வீதிகளில் இன்று‘கழகங்களின் தேர்தல் பிரச்சார வண்டிகள் ஹரி’ படத்தில் வேகமாக ஓடும் ரவுடிகளின் டாட்டா சுமோ பறக்கும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. தாயார் சந்நிதி நுழைவாயில் இருக்கும் திராவிட கழகம் கட்...

பஞ்சகவ்ய சிந்தனைகள்

நண்பர் அருண் வடபழனியில் துவக்கியிருக்கும் ப்யூர் சினிமா (Pure Cinema) புத்தகக் கடை சார்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுடன் கலந்துரையாடலுக்கு சனிக்கிழமை சென்றிருந்தேன்.  சில வருஷங்கள் முன் ஒரு காலை நடைபயிற்சியின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்னை அழைத்து என் சிறுகதை புத்தகத்தை பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை பேசியிருப்பேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அறிமுக செய்துக்கொண்ட போது என்னை நினைவில் வைத்திருந்தது வியப்பாக இருந்தது. அன்றைய கூட்டத்தில் பலரும் இளைஞர்கள். எல்லோருக்கும் சினிமாவில் ஏதாவது ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. எது நல்ல இலக்கியம் என்று தமிழ் எழுத்தாளர்கள் குழப்புவது போல எது நல்ல சினிமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கூடவே உலக சினிமா, இராணிய சினிமா, எதார்த்த சினிமா என்று அவர்கள் குழப்பம் விரிவடைகிறது. துணை இயக்குனராக சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும், தலித் இலக்கியம் மாதிரி தலித் சினிமா என்று எல்லா கேள்விகளுக்கும் பாலாஜி சக்திவேல் பூசி மொழுகாமல் நேரடியாக பதில் அளித்தார். காதல் கோட்டை போன்ற பார்க்...

சாஸ்திரி பவன்

கடைசியில் சொத்தையாக ஒன்று அகப்பட்டு நமக்கு திருப்பம் கொடுக்கும் வேர்கடலை பொட்டலம் மாதிரி தான் நான் சொல்லப்போகும் இந்த கதையும். பெல்கிஜியம் நாட்டில் என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதைப் பற்றி சொல்லியிருக்கிறேனா ? ஐயோ தொலைஞ்சு போச்சா? என்று நீங்கள் கேட்கும் முன்... தொலைஞ்சுப் போகலை திருடுபோனது. எப்படி என்று சொல்லுவதற்கு முன் என்னைப் பற்றியும் என் குடுமியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். என் பெயர் ஸ்ரீநிவாஸராகவன். ஸ்ரீரங்கம். தாயார் சன்னதிக்குள் சட்டென்று உள்ளே நுழையக்கூடிய வடக்கு உத்திர வீதியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்துக்கு நான்கு வீடு தள்ளி எங்க வீடு. மஞ்சள் திருமண் குடுமியுடன் ஸ்ரீரங்கம் தெருவில் கிரிக்கெட் விளையாடி ஈ.ஆர்.ஐ.ஸ்கூலில் படிக்கும் வரை என்னை யாரும் கேலி செய்யல, ஆனா காலேஜ் படிக்கும் போது பின்னாடியிலிருந்து கேலி பேசுவா. முன் நெற்றியில் மழித்துக்கொண்டு இருப்பதால் “கரைய மண்டை” என்பார்கள். விளையாட்டு மைதானம் பக்கம் போனா பின் பக்கம் சுருட்டி வைத்த என் குடுமியை பார்த்து “தலையில பந்து” என்று யாராவது சத்தம் போடுவார்கள்.

ஆசாரியர்கள் வருகை

ஆழ்வார்கள் விஜயம் பற்றி முன்பு எழுதியிருந்தேன். நினைவிருக்கலாம். ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட பின் ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன் “உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார். சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்தபதியிடம் அதைப் பற்றி பேசவில்லை.. பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய  நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் ஓடின போன வருஷ ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக  நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள். ஸ்தபதியிடம் பெருமாள் ம...

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 3 ( நிறைவு )

பெரிய நம்பிகள் திருமாளிகை எண்! ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்த துயரமான நிகழ்வை சொல்லுவதற்கு முன் இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி. காலை 6 மணிக்குப் பெரிய பெருமாளை தரிசிக்க சென்ற போது 50, 100, 250 ரூபாய் என்று டிக்கெட் வரிசை அமைத்து இன்னும் பெரிய பெருமாளாகியிருந்தார். கோயில் முழுக்க கருப்பு-சிகப்பு நாத்திகர் கலரில் ’கோவிந்தா’ என்று கோஷம் போடும் ஆஸ்திகர் கூட்டம். நாழிக்கேட்டான் கோபுர வாசலில் கோயிலுக்கு வரும் பர்முடா, கைலி கூட்டத்தை காவல்துறை திரும்ப அனுப்பிக்கொண்டு இருந்தது. நெற்றியில் திருமண், குடுமி, கச்சத்துடன் அதை புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒரு வெள்ளைக்காரர். பழசு ஆனா புதுசு ! துவாதசி அன்று பெருமாள் துளசி தீர்த்தம் கொடுத்து அருள, அதை வாங்கிக்கொண்டு, கொள்ளிடம் சலவை செய்த மாதிரி இருந்த கோயிலை பார்த்துக்கொண்டே ஆயிரம் கால் மண்டபத்தின் புது தோற்றத்தைக் கொஞ்ச நேரம் ரசித்...

ஐஸ்பாக்ஸ் - சிறுகதை

சென்னை தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை போகும் சாலையின் குறுக்கே இருக்கும் அந்த சின்ன சந்தின் பெயர், 'மாடல் ஹவுஸ் ரோடு லேன்.' தென்னந் துடைப்பத்தை திருப்பிப் பிடித்த மாதிரி பலவண்ண கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சந்துக்கு எதிர்புறம் ஒரு ஜெராக்ஸ் கடை சந்து ஆரம்பத்தில், ஆலிவ் பச்சை நிறத்தில் கவிழ்ந்துகிடக்கும் குப்பைத்தொட்டியைக் கடந்து உள்ளே நுழைந்தால், மொத்தம் ஒன்பது வீடுகள். அதில் மூன்றாவது வீட்டில், ஐஸ்பாக்ஸ் ஆனந்தன் என்கிற ஆனந்தன் வசிக்கிறார் என்பதைத் தவிர இந்த சந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சின்னத்திரைநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் போன்றவர்களை ஷாப்பிங் மால், கடைத்தெரு, தியேட்டர் போன்ற இடங்களில் பார்க்கும்போது, இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே...' என்று நமக்குத் தோன்றும் அல்லவா? ஆனந்தனும் அந்த வகை.

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 2

மா. செல்லப் பெருமாள் கோனார் அவர்கள் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார் என்று போன பகுதியில் பார்த்தோம். அவர் தொகுத்த அந்தப் புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையில் சில பகுதிகளை இங்கே தருகிறேன். “.... அறிந்தோ அறியாமலோ அசுத்தப்பொருளின் மீது காலோ கையோ பட்டுவிட்டால், மனிதன் அதை உணர்ந்தவுடன் அவன் உள்ளம் அருவருப்பின்பாற்பட்டுத் துடிதுடித்துப் போகிறது. உடன் அவன் முதற்காரியமாக தூய நீர்நிலைக்குச் சென்று தன் உள்ளம் போதும் போதும் எனக் கருதும் வரை கால்களைத் தேய்த்துத்தேய்த்துக் கழுவுகிறான். இதனினும் தீவிரமாகவுள்ளவன் நீரில் தான் உடுத்தியுள்ள உடைகளுடன் மூழ்கிக் குளித்து எழுகிறான். அதன் பிறகுதான் அவர்கள் உள்ளம் அமைதி பெறுகிறது. இது மனிதனின் இயல்பாகும் . இங்ஙனே, 1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை அடியேன், பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொள்ளும் நாஸ்தீகவாதியாக அப்படுகுழியில் மூழ்கிக் கிடந்தவனவேன். பெரியபெருமாளான அழகிய மணவாளனின் திருவருளால் 1962ஆம் ஆண்டினின்று ஸ்ரீவைணவன் எனும் உணர்வு வரப்பெற்று...

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 1

மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபனயாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலை பல ஸ்ரீவைஷ்ணவர்களை முகம் சுளிக்க செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குலளைச் செய்தார் அவரைக் காட்டிலும் நான் பெரியவனோ ? அல்லது அந்த பட்சியை காட்டிலும் நம் மாறனோர் நம்பித் தாழ்ந்தவனா ? மேலும் உயர்ந்த குலத்தில் பிறந்த யுதிஷ்டிரர் (தருமர்) தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாக பிறந்த விதுரருக்கு இத...

படம் சொல்லும் கதை

படத்தில் இருக்கும் சிதிலமடைந்த வீடு யாருடையது ? இந்த திருமாளிகையில் அப்படி என்ன விஷேசம் ? என்று அறிந்துக்கொள்ள முதலில் ததியாராதனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் பிறகு கிபி 1122க்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் ! ததீயாராதனம் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் ‘சாப்பாடு’ என்ற சொல்லாக தற்போது பயன்படுகிறது. ஆனால் ததீயாராதனம் என்றால் ‘ததீயர்களை’ ஆராதித்தல் என்று பொருள். ததீயர்கள் என்றால் அடியார்கள். ஆராதித்தல் என்றால் உபசரித்தல் பணிவிடை, உபசாரம் என்ற பல விதமாகச் சொல்லலாம். அதாவது பாகவதர்களை மகிழும்படி செய்தல் ததீயாராதனம். பெரியாழ்வார் திருமொழியில் நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் ( 360 ) என்று பாடியுள்ளார். பேசக்கூடாதவற்றைத் தம் நாவால் பேசமாட்டார்கள். தினமும் வேதம் ஓதி பகவானை வழிபட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆராதனம் செய்துகொண்டு விருந்தோம்புவார்கள் வாழுமிடமான திருக்கோட்டியூர் என்று பாடியுள்ளார். அவர் மேலும் காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்...

’ஜல்லி’ கட்டுக்கதை

"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து ”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?” “ராசியுமா ?” “ஆமாம்.!“ “அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?” “தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “ “இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை” ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது. “நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக

மயில் குயில் ஆச்சுதடி!

உடையாத முந்திரியை எக்ஸ்போர்ட் செய்வதுமாதிரி, அனுபமா கல்யாணத்திற்குப் பின் அமெரிக்காவிற்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டாள். போன சித்திரை மாதம் இருபதாவது திருமண தினத்தை பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் புளியோதரையுடன் கொண்டாடினார்கள். நடிகர்கள் நாட்டை விட்டுப் போவதால் பிரபலம் ஆவது மாதிரி அனுபமாவும் பிரபலம் ஆனாள். “அமெரிக்கா போகிறாயாமே ?.. எங்களை எல்லாம் மறந்துடாதே!” என்ற விசாரிப்புகளுக்கு இடையில் அப்பா “பாட்டை மட்டும் விட்டுவிடாதே..” என்று நாரத கான சபா பக்கம் இருக்கும் மியூசிக்கல் கடையில் கை நிறைய எம்.எஸ்.ஸும், லால்குடியையும் வாங்கித் தந்தார். அம்மா தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ்(மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்), பருப்பு பொடி, குழம்பு பொடி, சுமித் மிக்ஸி என்று அடுக்க ஆரம்பித்தாள். அனுவின் அப்பா மஹாதேவன் ஐ.ஓ.சியில் அந்தக் காலத்து என்ஜினியர்; தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். வேலையில் இருக்கும்போதே ஒன்றரை கிரவுண்டில் மேலும் கீழுமாக இரண்டு மாடி கட்டிக்கொண்டு கோட்டூர்புரத்தில் 'கோட்டூர் கார்டன்ஸ்' காலனியில் பின்பக்கம் வாழையும், வாசலில் மாமரம், மாடியில் அனுபமாவிற்கு சங்கீத டியூச...

சினிமாவும் எழுத்தும்

1ஆம் தேதி சம்பளம் முக்கியம். வேலை முக்கியம். வேலை போக மற்ற நேரத்தில் கதை கட்டுரை எழுதலாம். என்னையே எடுத்துக்கொள் நான் வேலை பார்த்துக்கொண்டு தான் கதை எழுதினேன். முழு நேரமும் எழுதினால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு முறை சுஜாதவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை. மா.வே.சிவகுமார் பற்றி பல அஞ்சலி கட்டுரைகள் படிக்கும் போது இது நினைவுக்கு வருகிறது. தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எப்படியாவது சினிமாவுக்கு போக வேண்டும் என்ற துடிப்பு ஏன் வருகிறது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படி சென்றவர்கள் தங்கள் எழுத்து திறமையை வீணாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். ஐந்து வருடம் முன் ஒரு இயக்குனர் என்னை தி.நகரில் ஒர் இடத்துக்கு வர முடியுமா எங்கள் படத்துக்கு நீங்கள் தான் வசனம் எழுத வேண்டும் என்றார். ”உடனே வர முடியாது, நான் பெங்களூரில் இருக்கிறேன், சனி ஞாயிறு முடியும்” என்றேன். “சார் ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு வாங்க முழுசா டிஸ்கஷன் பக்க செய்திடலாம்.. ” “ஒரு மாசம் எல்லாம் முடியாது.. டிசம்பர் மாசம் இரண்டு வாரம் முழுசா லீவு கிடைக்கும்” “ஓ. அப்பட...