Skip to main content

Posts

பஞ்சகவ்ய சிந்தனைகள்

நண்பர் அருண் வடபழனியில் துவக்கியிருக்கும் ப்யூர் சினிமா (Pure Cinema) புத்தகக் கடை சார்பில் இயக்குனர் பாலாஜி சக்திவேலுடன் கலந்துரையாடலுக்கு சனிக்கிழமை சென்றிருந்தேன்.  சில வருஷங்கள் முன் ஒரு காலை நடைபயிற்சியின் போது இயக்குனர் பாலாஜி சக்திவேல் என்னை அழைத்து என் சிறுகதை புத்தகத்தை பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை பேசியிருப்பேன். நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை. அறிமுக செய்துக்கொண்ட போது என்னை நினைவில் வைத்திருந்தது வியப்பாக இருந்தது. அன்றைய கூட்டத்தில் பலரும் இளைஞர்கள். எல்லோருக்கும் சினிமாவில் ஏதாவது ஒன்றை சாதித்துவிட வேண்டும் என்பது அவர்களின் கண்களில் தெரிந்தது. எது நல்ல இலக்கியம் என்று தமிழ் எழுத்தாளர்கள் குழப்புவது போல எது நல்ல சினிமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள். கூடவே உலக சினிமா, இராணிய சினிமா, எதார்த்த சினிமா என்று அவர்கள் குழப்பம் விரிவடைகிறது. துணை இயக்குனராக சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும், தலித் இலக்கியம் மாதிரி தலித் சினிமா என்று எல்லா கேள்விகளுக்கும் பாலாஜி சக்திவேல் பூசி மொழுகாமல் நேரடியாக பதில் அளித்தார். காதல் கோட்டை போன்ற பார்க்...

சாஸ்திரி பவன்

கடைசியில் சொத்தையாக ஒன்று அகப்பட்டு நமக்கு திருப்பம் கொடுக்கும் வேர்கடலை பொட்டலம் மாதிரி தான் நான் சொல்லப்போகும் இந்த கதையும். பெல்கிஜியம் நாட்டில் என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதைப் பற்றி சொல்லியிருக்கிறேனா ? ஐயோ தொலைஞ்சு போச்சா? என்று நீங்கள் கேட்கும் முன்... தொலைஞ்சுப் போகலை திருடுபோனது. எப்படி என்று சொல்லுவதற்கு முன் என்னைப் பற்றியும் என் குடுமியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். என் பெயர் ஸ்ரீநிவாஸராகவன். ஸ்ரீரங்கம். தாயார் சன்னதிக்குள் சட்டென்று உள்ளே நுழையக்கூடிய வடக்கு உத்திர வீதியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்துக்கு நான்கு வீடு தள்ளி எங்க வீடு. மஞ்சள் திருமண் குடுமியுடன் ஸ்ரீரங்கம் தெருவில் கிரிக்கெட் விளையாடி ஈ.ஆர்.ஐ.ஸ்கூலில் படிக்கும் வரை என்னை யாரும் கேலி செய்யல, ஆனா காலேஜ் படிக்கும் போது பின்னாடியிலிருந்து கேலி பேசுவா. முன் நெற்றியில் மழித்துக்கொண்டு இருப்பதால் “கரைய மண்டை” என்பார்கள். விளையாட்டு மைதானம் பக்கம் போனா பின் பக்கம் சுருட்டி வைத்த என் குடுமியை பார்த்து “தலையில பந்து” என்று யாராவது சத்தம் போடுவார்கள்.

ஆசாரியர்கள் வருகை

ஆழ்வார்கள் விஜயம் பற்றி முன்பு எழுதியிருந்தேன். நினைவிருக்கலாம். ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட பின் ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன் “உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார். சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்தபதியிடம் அதைப் பற்றி பேசவில்லை.. பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய  நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் ஓடின போன வருஷ ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக  நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள். ஸ்தபதியிடம் பெருமாள் ம...

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 3 ( நிறைவு )

பெரிய நம்பிகள் திருமாளிகை எண்! ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்த துயரமான நிகழ்வை சொல்லுவதற்கு முன் இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி. காலை 6 மணிக்குப் பெரிய பெருமாளை தரிசிக்க சென்ற போது 50, 100, 250 ரூபாய் என்று டிக்கெட் வரிசை அமைத்து இன்னும் பெரிய பெருமாளாகியிருந்தார். கோயில் முழுக்க கருப்பு-சிகப்பு நாத்திகர் கலரில் ’கோவிந்தா’ என்று கோஷம் போடும் ஆஸ்திகர் கூட்டம். நாழிக்கேட்டான் கோபுர வாசலில் கோயிலுக்கு வரும் பர்முடா, கைலி கூட்டத்தை காவல்துறை திரும்ப அனுப்பிக்கொண்டு இருந்தது. நெற்றியில் திருமண், குடுமி, கச்சத்துடன் அதை புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒரு வெள்ளைக்காரர். பழசு ஆனா புதுசு ! துவாதசி அன்று பெருமாள் துளசி தீர்த்தம் கொடுத்து அருள, அதை வாங்கிக்கொண்டு, கொள்ளிடம் சலவை செய்த மாதிரி இருந்த கோயிலை பார்த்துக்கொண்டே ஆயிரம் கால் மண்டபத்தின் புது தோற்றத்தைக் கொஞ்ச நேரம் ரசித்...

ஐஸ்பாக்ஸ் - சிறுகதை

சென்னை தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை போகும் சாலையின் குறுக்கே இருக்கும் அந்த சின்ன சந்தின் பெயர், 'மாடல் ஹவுஸ் ரோடு லேன்.' தென்னந் துடைப்பத்தை திருப்பிப் பிடித்த மாதிரி பலவண்ண கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சந்துக்கு எதிர்புறம் ஒரு ஜெராக்ஸ் கடை சந்து ஆரம்பத்தில், ஆலிவ் பச்சை நிறத்தில் கவிழ்ந்துகிடக்கும் குப்பைத்தொட்டியைக் கடந்து உள்ளே நுழைந்தால், மொத்தம் ஒன்பது வீடுகள். அதில் மூன்றாவது வீட்டில், ஐஸ்பாக்ஸ் ஆனந்தன் என்கிற ஆனந்தன் வசிக்கிறார் என்பதைத் தவிர இந்த சந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சின்னத்திரைநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் போன்றவர்களை ஷாப்பிங் மால், கடைத்தெரு, தியேட்டர் போன்ற இடங்களில் பார்க்கும்போது, இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே...' என்று நமக்குத் தோன்றும் அல்லவா? ஆனந்தனும் அந்த வகை.

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 2

மா. செல்லப் பெருமாள் கோனார் அவர்கள் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார் என்று போன பகுதியில் பார்த்தோம். அவர் தொகுத்த அந்தப் புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையில் சில பகுதிகளை இங்கே தருகிறேன். “.... அறிந்தோ அறியாமலோ அசுத்தப்பொருளின் மீது காலோ கையோ பட்டுவிட்டால், மனிதன் அதை உணர்ந்தவுடன் அவன் உள்ளம் அருவருப்பின்பாற்பட்டுத் துடிதுடித்துப் போகிறது. உடன் அவன் முதற்காரியமாக தூய நீர்நிலைக்குச் சென்று தன் உள்ளம் போதும் போதும் எனக் கருதும் வரை கால்களைத் தேய்த்துத்தேய்த்துக் கழுவுகிறான். இதனினும் தீவிரமாகவுள்ளவன் நீரில் தான் உடுத்தியுள்ள உடைகளுடன் மூழ்கிக் குளித்து எழுகிறான். அதன் பிறகுதான் அவர்கள் உள்ளம் அமைதி பெறுகிறது. இது மனிதனின் இயல்பாகும் . இங்ஙனே, 1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை அடியேன், பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொள்ளும் நாஸ்தீகவாதியாக அப்படுகுழியில் மூழ்கிக் கிடந்தவனவேன். பெரியபெருமாளான அழகிய மணவாளனின் திருவருளால் 1962ஆம் ஆண்டினின்று ஸ்ரீவைணவன் எனும் உணர்வு வரப்பெற்று...

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 1

மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபனயாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலை பல ஸ்ரீவைஷ்ணவர்களை முகம் சுளிக்க செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குலளைச் செய்தார் அவரைக் காட்டிலும் நான் பெரியவனோ ? அல்லது அந்த பட்சியை காட்டிலும் நம் மாறனோர் நம்பித் தாழ்ந்தவனா ? மேலும் உயர்ந்த குலத்தில் பிறந்த யுதிஷ்டிரர் (தருமர்) தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாக பிறந்த விதுரருக்கு இத...

படம் சொல்லும் கதை

படத்தில் இருக்கும் சிதிலமடைந்த வீடு யாருடையது ? இந்த திருமாளிகையில் அப்படி என்ன விஷேசம் ? என்று அறிந்துக்கொள்ள முதலில் ததியாராதனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் பிறகு கிபி 1122க்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் ! ததீயாராதனம் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் ‘சாப்பாடு’ என்ற சொல்லாக தற்போது பயன்படுகிறது. ஆனால் ததீயாராதனம் என்றால் ‘ததீயர்களை’ ஆராதித்தல் என்று பொருள். ததீயர்கள் என்றால் அடியார்கள். ஆராதித்தல் என்றால் உபசரித்தல் பணிவிடை, உபசாரம் என்ற பல விதமாகச் சொல்லலாம். அதாவது பாகவதர்களை மகிழும்படி செய்தல் ததீயாராதனம். பெரியாழ்வார் திருமொழியில் நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் ( 360 ) என்று பாடியுள்ளார். பேசக்கூடாதவற்றைத் தம் நாவால் பேசமாட்டார்கள். தினமும் வேதம் ஓதி பகவானை வழிபட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆராதனம் செய்துகொண்டு விருந்தோம்புவார்கள் வாழுமிடமான திருக்கோட்டியூர் என்று பாடியுள்ளார். அவர் மேலும் காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்...

’ஜல்லி’ கட்டுக்கதை

"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து ”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?” “ராசியுமா ?” “ஆமாம்.!“ “அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?” “தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “ “இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை” ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது. “நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக

மயில் குயில் ஆச்சுதடி!

உடையாத முந்திரியை எக்ஸ்போர்ட் செய்வதுமாதிரி, அனுபமா கல்யாணத்திற்குப் பின் அமெரிக்காவிற்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டாள். போன சித்திரை மாதம் இருபதாவது திருமண தினத்தை பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் புளியோதரையுடன் கொண்டாடினார்கள். நடிகர்கள் நாட்டை விட்டுப் போவதால் பிரபலம் ஆவது மாதிரி அனுபமாவும் பிரபலம் ஆனாள். “அமெரிக்கா போகிறாயாமே ?.. எங்களை எல்லாம் மறந்துடாதே!” என்ற விசாரிப்புகளுக்கு இடையில் அப்பா “பாட்டை மட்டும் விட்டுவிடாதே..” என்று நாரத கான சபா பக்கம் இருக்கும் மியூசிக்கல் கடையில் கை நிறைய எம்.எஸ்.ஸும், லால்குடியையும் வாங்கித் தந்தார். அம்மா தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ்(மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்), பருப்பு பொடி, குழம்பு பொடி, சுமித் மிக்ஸி என்று அடுக்க ஆரம்பித்தாள். அனுவின் அப்பா மஹாதேவன் ஐ.ஓ.சியில் அந்தக் காலத்து என்ஜினியர்; தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். வேலையில் இருக்கும்போதே ஒன்றரை கிரவுண்டில் மேலும் கீழுமாக இரண்டு மாடி கட்டிக்கொண்டு கோட்டூர்புரத்தில் 'கோட்டூர் கார்டன்ஸ்' காலனியில் பின்பக்கம் வாழையும், வாசலில் மாமரம், மாடியில் அனுபமாவிற்கு சங்கீத டியூச...

சினிமாவும் எழுத்தும்

1ஆம் தேதி சம்பளம் முக்கியம். வேலை முக்கியம். வேலை போக மற்ற நேரத்தில் கதை கட்டுரை எழுதலாம். என்னையே எடுத்துக்கொள் நான் வேலை பார்த்துக்கொண்டு தான் கதை எழுதினேன். முழு நேரமும் எழுதினால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு முறை சுஜாதவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை. மா.வே.சிவகுமார் பற்றி பல அஞ்சலி கட்டுரைகள் படிக்கும் போது இது நினைவுக்கு வருகிறது. தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எப்படியாவது சினிமாவுக்கு போக வேண்டும் என்ற துடிப்பு ஏன் வருகிறது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படி சென்றவர்கள் தங்கள் எழுத்து திறமையை வீணாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். ஐந்து வருடம் முன் ஒரு இயக்குனர் என்னை தி.நகரில் ஒர் இடத்துக்கு வர முடியுமா எங்கள் படத்துக்கு நீங்கள் தான் வசனம் எழுத வேண்டும் என்றார். ”உடனே வர முடியாது, நான் பெங்களூரில் இருக்கிறேன், சனி ஞாயிறு முடியும்” என்றேன். “சார் ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு வாங்க முழுசா டிஸ்கஷன் பக்க செய்திடலாம்.. ” “ஒரு மாசம் எல்லாம் முடியாது.. டிசம்பர் மாசம் இரண்டு வாரம் முழுசா லீவு கிடைக்கும்” “ஓ. அப்பட...

சந்திரஹாசம் - புத்தக விமர்சனம்

”சந்திரஹாசம் புத்தக வடிவில் ஒரு சினிமா!” என்று கடந்த இரண்டு மாதங்களாக ரஜினி, கமல், இளையராஜா ... என்று பல பிரபலங்கள் கையில் வைத்துக்கொண்டு விளம்பரப்படுத்தினார்கள். சினிமாகாரகள் அடாச தமிழ் படத்தையே இந்த மாதிரி படத்தை பார்த்தில்லை என்று சொல்பவர்கள்... ... ஆனால் காமிக் படிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லொரும் புகழ ... 1500 புத்தகம் வெறும் 1000 ரூபாய்க்கு ... ஒரு வித பிரஷர் - ஆடர் செய்து சில வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்தது. பேக்கிங் அருமையாக. இந்த மழை வெள்ளத்திலும் ஓரம் நசுங்காமல் கற்புடன் வந்தது வியப்பை தந்தது. ஆர்வமாக பிரித்தேன். வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. சரசரவென்று பிரித்து படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஓவியங்கள் நன்றாக ...போக போக சுமாராக பிறகு ரொம்ப சுமாராக இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரே ஓவியம் சில இடங்களில் கட் & பேஸ்ட் எரிச்சலை தந்தது. கொடுத்த காசுக்கு தரமான ஒரு புத்தகத்தை எதிர்ப்பாப்பது தவறு இல்லையே. லாங் ஷாட் ஓவியங்கள் நிறைய. ஆனால் அது மட்டும் நிறைய இருந்தால் ஏதோ ஆல்பம் பார்க்கும் எண்ணமே வருகிறது. உற்று நோக்கினால் எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒன்று ரிப்லிகே...

நகர்வலம்! - சிறுகதை சுஜாதா

( இந்த கதையை மீண்டும் இன்று ஒரு முறை படித்தேன் ). அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில்(வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்... எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின் அவ்வப்போது தெரிந்த உடல் வடிவ அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தான். படகு அத்தனை வேகத்தில் செல்வது தெரியவே இல்லை. அதன் வயிற் றில் இருந்த சிறிய அணு மின்சார நிலையத்தின் சக்தியில் அது கடல் பரப்பின்மேல் ஒரு காற்று மெத்தையில் மிதந்து சென்றது. ஆத்மாவுக்கு அந்தப் பிரயாணம் அவன் வாழ்வின் ஆதர்சங்களில் ஒன்று... இன்னும் பதினைந்து நிமிடங்களில் படகு சென்னையை அடையப்போகிறது. சென்னை! அவன் முன்னோர்களின் ஊர்! அவன் தாத்தாவுக்குத் தாத்தாவு...

ரெய்னி டே’ சினாரியோ

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே ( திருவாய்மொழி ) போன வாரம் அலுவலகத்துக்கு போன போது ஒருவரை ஒருவர் “உங்க ஏரியா எப்படி சார் ?” “எங்க ஏரியா பரவாயில்லை” “வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியல ஒரே தண்ணீ... ” ”மழையே இல்லாத மாதிரி எழுதியிருக்கீங்க ?” ”நீங்க சென்னை வந்தா மழை நின்றுவிடுகிறது” என்ற கமெண்ட் இன்று பொய்யானது. இன்று காலை 4.30மணிக்கு எழுந்து போது மழை. குடையுடன் வாக்கிங் போனேன். லேசான மழை தான். காபி ஒன்று குடித்துவிட்டு வெளியே வந்தால் ஏண்டா வெளியில் வந்தோம் என்றாகிவிட்டது. அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை மாதிரி என் சின்ன குடை பறந்து ஆட்டம் போட்டது. மழை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிலர் வேலை செய்துகொண்டு இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. டிவிஎஸ் 50ல் பெரிய சூட்கேசில் நியூஸ் பேப்பர் வைத்துக்கொண்டு தான் சொட்ட சொட்ட நனைந்தாலும் பேப்பர் நனையாமல் பார்த்துக்கொள்ளும் அந்த சிறுவன். ஒரு குடையுடன் பெரிய அலுமினிய பாத்திரத்தில் பால் பாக்கெட்டை சுமந்துக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்...

பரவச பொங்கல்

பரவச பொங்கல் அன்புள்ள சுஜாதா தேசிகன் அவர்களுக்கு, நலமா ? கல்கியில் சமீபத்தில் நீங்கள் எழுதிய கதையை படித்தேன். நன்றாக இருந்தது. உங்கள் ஃபேஸ்புக்கிலும் கமெண்ட் போட்டிருக்கிறேன். உங்களிடமிருந்து ஒர் உதவி தேவைப்படுகிறது. ’Orgasm’ என்று ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன ? ஆய்வுக்காக எனக்கு இந்த தமிழாக்கம் தேவைப்படுகிறது. ஒரு சொல்லாக இருந்தால் நன்றாக இருக்கும். . இணையத்தில் தேடினால் கெட்ட கெட்ட விஷயங்கள் தான் வருகிறது. கூகிளில் தேடிய போது பரவசநிலை, உச்சநிலை, பரவச பொங்கல் போன்ற சொல் பிரயோகங்கள் தான் வருகிறது. சிலர் கிளைமாக்ஸ் போன்ற ஆங்கில வார்த்தையையே உபயோகிக்கிறார்கள். திருப்திபடுதல் கிட்டே வருகிறது ஆனால் திருப்தியாக இல்லை. ”ஐ” படத்தில் வருவது போல ”அதுக்கும் மேலே” என்பது மாதிரியான ஒரு வார்த்தை வேண்டும். எனக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. K.... k......b@gmail.com அன்புள்ள கே... நலம். தேடி பார்த்தேன். கிடைக்கவில்லை. இன்றைய என் அனுபவத்தை சொல்லுகிறேன். அதிலிருந்து அந்த வார்த்தைக்கு விடை கிடைக்கிறதா என்று பாருங்கள். சரியாக பதினோரு மணிக்கு அந்த இடத்த...

பித்துக்குளி முருகதாஸ்

இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. 1981-82 என்று நினைக்கிறேன். என் சித்தி பையனின் உபநயனத்துக்கு சென்றிருந்தேன். குமார போஜனத்துக்கு என்னை உட்கார வைத்தார்கள். என் மனம் முழுவதும் இலையில் இல்லாமல், சற்று நேரத்துக்கு முன் உபநயனத்துக்கு வந்திருந்த ஒருவர் கையடக்க டேப்ரிக்கார்டரின் மீது இருந்தது. அப்போது டேப்ரிகார்டர் புதுசாக வந்திருந்த சமயம். குமார போஜனம் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் ”பசி இல்லை” என்று எழுந்து அந்த டேப்ரிக்கார்டர் மாமாவை தேடி போனேன். “என்ன என்றார்?” “டேப்ரிக்கார்டர்... “ “ஆமாம் டேப்ரிக்கார்டர்.. அதுக்கு என்ன?” “இப்ப போட்டீங்களே அந்த பாட்டு யார் பாடியது?” “எந்த பாட்டு ?” என்று தன் பையை பெருமையாக திறந்து தன் கலக்‌ஷனை காண்பித்தார் அதில் ஏகபட்ட கேஸ்சட்... இதில் எப்படி தேடுவது ? “அலைபாயுதே கண்ணா...” “ஓ அதுவா அது பித்துக்குளி முருகதாஸ்.. “ என்று கேஸ்சட் படத்தை காண்பித்தார். டேப்ரிக்கார்டரை பார்க்காமல் அந்த கேஸ்சட்டை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம்... தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் ”Lord Krishna - Pithukuli Murugadas" பித்துகுளி என்ற பெயர...

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!

இந்தக் கதை உங்களைக் கவருமா என்று தெரியாது. ஆனால் ஒரு உத்திரவாதம் தருகிறேன். பெயர்கள்கூட மாற்றாத, எந்தக் கலப்படமும் இல்லாத என் சொந்த அனுபவம். ஐ.டி கம்பெனியில் இருபது வருஷம் குப்பை கொட்டியபின் எல்லோருக்கும் வரும் அந்த அலுப்பு, எனக்கு வந்த சமயம் பிள்ளை பிடிக்கும் கும்பல் மாதிரி என்னை ஒரு கன்சல்டன்சி பிடித்து அமெரிக்க கம்பெனிக்கு வைஸ் ப்ரெசிடண்டாக செக்கின் செய்தது. அதற்கு நடத்தப்பட்ட இன்டர்வியூவில் அந்தக் கேள்வியை என்னால் மறக்க முடியாது. “பல பெரிய டீமை உருவாக்கியுள்ளீர்கள்...மறக்க முடியாத அனுபவம்?” எனக்கு உடனே ராமகிருஷ்ணாதான் நினைவுக்கு வந்தான். “நெவர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமகிருஷ்ணா” என்று என் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். புதிதாக ஒரு டீமை சில வருடங்களுக்கு முன் தேர்வு செய்துகொண்டிருந்த சமயம் “ஐ வாஸ் அண்டர் லாட் ஆப் பிரஷர்”. ஒரு ‘வாக் இன் இன்டர்வியூ’க்கு வந்திருந்தான். தொள தொள பேன்ட், சட்டையில் ஆங்காங்கே உப்புப் பூத்திருந்தது. பழைய செருப்பு, கையில் லேடிஸ் குடை. தமிழ்நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவன...

சில மதிப்புரைகள்

அப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு பற்றி முன்பு The Hindu, மற்றும் mathippurai.com’ல் வந்த மதிப்புரைகள். நன்றியுடன் இங்கே... In the footsteps of Sujatha Desikan Sujatha has played true to his name in this collection of short stories. An ardent fan of the famous writer, he became his friend and confidante in the later years. The maestro’s style has definitely had an impact on the author, whose treatment of the genre has a strong resemblance to his idol’s, the twist in the end including. Readers, accustomed to Sujatha’s bold ideas, will not be disappointed with this slim volume. Appavin Radio – Desikan Sujatha – Pathu Paisa Pathippagam – A-1502, Brigade Metropolis, Garudarcharpalya, Mahadevapura, White Field Main Road, Bangaluru – 560048. Phone: +91-98458 66770  . நன்றி: The Hindu  அப்பாவின் ரேடியோ சுஜாதாவின் சிறுகதை என்றுமே ஒரு இனிய அனுபவமோ அல்லது அதிர்ச்சியோ கொடுக்கும். சுஜாதாவின் சிறுகதைகளில் சில எனக்கு வரிக்கு வரி மனப்பாடம். அ...

ரத்த நிலா உருவான கதை

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம். ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள். “உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?”  போன்ற கேள்விகளை கடந்து தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு  பிளாஸ்டிக் ! ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான். இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன். பால் பாக்கெட...

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை மேலே படத்தில் இருக்கும் கல்லை பற்றி தெரிந்துக்கொள்ளும் முன் அதற்கு பின்னால் 800 வருட சரித்திரம் இருக்கிறது. உங்களை சுமார் 800 ஆண்டுகள் பின்னோக்கி ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல போகிறேன். ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள். நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும். வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கிபி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார். ( நம்பிள்ளைக்கு லோகாசார்யர் ( ஜகத்குரு ) என்ற பெயரை கந்தாடைத் தோழப்பர் சூட்டினார் ( இந்த வைபவத்தை பிறகு ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் ). தன்னுடைய பிள்ளைக்கு தன் ஆசாரியன் பெயரை சூட்ட விரும்பி ’லோகாசார்யர்பிள்ளை’ என்று பெயர் சூட்டினார். அதுவே பிள்ளை லோகாசார்யன் ) இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க ...