தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது. "என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?" "ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான். "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்." "தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது. வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது. "கல் சூடா இருக்கில்ல, அதனால!" "இது சரியான பதில் இல்லையே!" "ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!" வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டி...