Skip to main content

Posts

Showing posts from 2022

2022

2022  கடைசியில் திருஷ்டி சுற்றிப் போடுதல் போல ’இந்த வருடம் என்ன செய்தேன்’ என்று ஒரு பதிவை வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் எழுதுவது மரபு.  கொரோனாவிற்குப் பின்  பயணம் அதிகரித்து, இந்த வருடம் 194 நகரங்கள், 22K கிமீ பயணம் செய்திருக்கிறேன் என்று கூகிள் செப்பியது.   உருப்படியாக செய்த விஷயம் இரண்டரை.  1)பதம் பிரித்த பிரபந்தம் இரண்டாம் பதிப்பு; அதை ஸ்ரீ உ.வே கிருஷ்ண பிரேமி ஸ்வாமி, ஸ்ரீ உ.வே பட்டண்ணா ஸ்வாமி, ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி, ஸ்ரீ உ.வே வேளுக்குடி கிருஷ்ணன் போன்ற பல பெரியோர்களிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றது. ஸ்ரீ உ.வே டாக்டர் வெங்கடேஷ் அவர்கள் எழுதிக்கொடுத்த பாராட்டுரை மகிழ்ச்சியைக் கொடுத்தது.  எண்பது வயத் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்கள் உங்கள் புத்தகத்தை மேலும் செம்மைப் படுத்த வேண்டும் என்று இரண்டு மணி நேரம் தொலைப்பேசியில் புத்தகத்தில் உள்ள பிழைகளை சுட்டிக் காட்டி தமிழ் வகுப்பு எடுத்தார்.  அடுத்து,  2) ஸ்ரீராமர் சென்ற பாதையில் யாத்திரை சென்று வந்தது.  0.5)கல்கியில் ’கடைசிப் பக்கம்’ இரண்டு வருடம் தொடர்ந்து எழுதி முடித்தது ( அதைப் படித்...

ஆனைச்சாத்தன்

திருப்பாவையில் ஆண்டாள் கூறும் ஆனைச்சாத்தன் என்ற பறவை எது ? இப்போது அதை பார்க்க முடியுமா ? சென்ற வருடம் மதுரை தமிழ்ப் பேராசிரியர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் அடியேனிடம் ஆண்டாள் கூறும் ‘ஆனைச்சாத்தன்’ என்ற பறவையைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள் என்றார். ஆனை - யானை, யானைக்கு மேல் பறக்கும் பறவையின் பெயர் என்று ஒரு கருத்தும், ‘ஆ’ என்றால் மாடுகள். மாடுகளுக்கு மேல் உட்கார்ந்து இருக்கும் பறவை என்ற இன்னொரு கருத்தும் உண்டு. கொஞ்சம் தேடிய போது, வைணவ உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் (காலம் கிபி 1230) ‘ஆனைச்சாத்தன்’ என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அவர்களுடைய காலத்தில் அந்தப் பறவையின் பெயர் வழக்கில் இருந்திருக்கிறது அதனால் வேறு பெயர்களை அவர்கள் உபயோகிக்கவில்லை என்று தெரிகிறது. திருப்பாவை அரும்பத உரையில் ’ஆனைச்சாத்தன் - வலியன் என்னும் பாரத்வாஜபக்ஷிகள்’ என்று ஒரு குறிப்பு வருகிறது. ’பாரத்வாஜ்’ என்று வடமொழியிலும் தமிழிலும் ’’வலியன்' என்ற ஒரே பொருள் தருகிறது. திரு பி எல் சாமி ’சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்’ என்ற புத்தகத்தில் பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சலீம் அலி தன் ஆங்கிலப் புத்தகத்தில் வரும் குறிப்...

கோதை கீதை - 1

கோதை கீதை - 1   திருப்பாவை - 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் எல்லா திருப்பாவை புத்தகங்களிலும், உபன்யாசங்களிலும் ’மாதங்களில் நான் மார்கழி மதமாக இருக்கிறேன்’ என்று கண்ணன் கீதையில் சொன்ன ‘மாஸாநாம் மார்க்க சீர்ஷோ ஹம்’ என்ற கீதையின் ( 10.35 ) வரியை மேற்கோள் காட்டி ஆரம்பிப்பது மரபு. நாமும் அப்படியே ஆரம்பித்து ‘நன்னாள்’ என்ற அடுத்த வார்த்தைக்குத் தாவிடலாம். மார்கழி மாதம், முழு நிலவுடன் கூடிய பௌர்ணமி! நோன்பைத் தொடங்க ஒரு சுபமுகூர்த்தம் வாய்த்தது என்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் பஞ்சாகம் பார்த்து ஆரம்பிக்கவில்லை, இது தற்செயல். சுபமுகூர்த்தம் என்ற கரடுமுரடான சொல்லுக்கு அழகிய தமிழ் சொல் ’நன்னாள்’. சுபமுகூர்த்தம் என்பது மாதம், பக்ஷம், காலம் என்று பஞ்சாங்கத்தை வாத்தியார் ஸ்வாமி அலசக் கொடுக்க வேண்டும். ஆண...

கோதை கீதை - அவதாரிகை

 கோதை கீதை - அவதாரிகை திருமழிசைப்பிரான் பாசுரம் இது சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் அன்று தேர்த்தட்டில் கண்ணன் ஓதிய கீதையை( சரம ஸ்லோகம்) அறியாதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்கிறார் வேதப்பிரான் பட்டர் திருப்பாவை குறித்து இப்படிச் சொல்லுகிறார். பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழ் திருப்பாவை முப்பதும் தெரியவில்லை என்றால் உங்களை இந்த பூமி சுமப்பதே வீண் என்கிறார். ஆக, கீதை, திருப்பாவை இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் வேஸ்ட் என்று சொல்லி விட்டார்கள் கீதையையும் திருப்பாவையையும் சேர்த்து ’கோதை கீதை’ என்ற தலைப்பில் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். ’ஸர்வோபநிஷதோ காவோ’ என்று ஆரம்பிக்கும் கீதையின் தியான ஸ்லோகத்தின் பொருள் - உபநிஷதங்கள் என்னும் பசுக்களிலிருந்து கோபாலன் என்ற பால்காரன் அர்ஜுனன் என்ற கன்றுக்கு கறந்த பாலாகிய க...

தொண்டரடிப்பொடி ‘ஃபார்முலா’

 தொண்டரடிப்பொடி ‘ஃபார்முலா’  கணக்கு போடுவதற்கு எப்படி ’ஃபார்முலா’ அவசியமோ அது போல ஸ்ரீ வைஷ்ணவத்தைக் கற்றுக்கொள்ள மிக முக்கியமான ஃபார்முலா ’தொண்டரடிப்பொடி’யாக இருப்பது.  பல கோயில்களுக்கு சென்று பெருமாளை வழிபடுகிறோம். ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டு இருக்கிறான், திருமலையில் நின்றுகொண்டு இருக்கிறான். ஆனால் அந்தப் பெருமாள்களுக்கு மிகவும் உகந்த இடம் எது தெரியுமா ? அது அடியவனின் நெஞ்சம்.  சதா சர்வ காலமும் பெருமாளை நினைத்துக்கொண்டு இருக்கும் ஆசாரியனே தனக்குத் தெய்வம் என்றும் நான் அவருடைய உடமை என்று எண்ணுவதால் அந்த அடியவனின் தூய நெஞ்சில் உறைந்து போய் பெருமாளுக்கு  விரும்பிய உறையுமிடமாகிறது.  கோயில் முற்றத்தில் அடியார்களின் திருவடிகளால் ஏற்படும் சேறு என உடம்புக்கு அணிகலன் என்றும் அகன்ற மூவுலகங்களைப் பெறுவதைக் காட்டிலும் பாகவதர்களுக்கு ஆட்படுவதே எல்லாவற்றையும் விடப் பெரியது என்பதை அறிகிறோன். அடியார்களுக்கு ஆட்படுவதே எனக்கு வேண்டுவது. இதை விடப் பெரிய பேறு வேறில்லை என்கிறார் நம்மாழ்வார்.  அவருடைய  சிஷ்யரான மதுரகவி ஆழ்வார் “தேவ மற்றறியேன்” ”அவன் பொன்னடி மெய்ம்ம...

காந்தாராவும் காப்பியும்

 காந்தாராவும் காப்பியும்  பல வருடங்கள் முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த பத்தாவது நாள் கொரியாவிற்கு அனுப்பினார்கள். போகும் போது என் பாஸ் பெரிய நிறுவனம் புதிதாக ஒன்றைத் தயாரிக்க போகிறார்கள். அதன் விவரக்குறிப்புகளை ஒழுங்காக எழுதிக்கொண்டு வா என்று அறிவுரையுடன் பெட்டிப் படுக்கையுடன் கிளம்பினேன். கொ(பெ)ரிய மேலதிகாரியைச் சந்தித்தேன். ”உங்களுடைய தயாரிப்பு எப்படி வேண்டும் அதைக் குறித்து சொல்லுங்கள்” என்று குறிப்பை எழுத புத்தகத்தை திறந்தேன். அவர் என் கையில் டேபிள் மீது இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து, இதே மாதிரி ’ஈயடிச்சான் காப்பி’ செய்து கொடுங்கள் என்று ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துக்கொண்டார். அவர் கொடுத்தப் புத்தகம் பெரிய அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு.  ”இதை அப்படியே கா.அடித்தால் பிரச்சனைகள் வராதா ?” போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன். நீங்கள் செய்து கொடுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். செய்து கொடுத்தோம். அதில் அவர்கள் சிற்சில மாற்றங்கள் செய்து சில புதிய அம்சங்கள் சேர்த்து ப...

யாதவாப்யுதயம் - தமிழில்

யாதவாப்யுதயம் - தமிழில்  இன்றைய 'கூல்’ ப்ரோ குழந்தைகள் தமிழ் மொழியைப் படிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் சமஸ்கிருதம் எல்லாம் ’டூ- மச்’ . சமீபத்தில் ’தாங்கள் பதிப்பித்த பதம்  திவ்யப்  பிரித்த பிரபந்தம் ஆங்கிலத்தில் கிடைக்குமா ?’ என்று ஓர் அன்பர் கேட்டார். நிலைமை இப்படி இருக்க ஸ்வாமி தேசிகன் அருளிய சமஸ்கிருதப் பொக்கிஷங்கள் என் தாத்தா காலத்தோடு போய்விட்டது.  ஆண்டவன் ஆசிரமம், அல்லது அஹோபில மடத்தில் ஸ்பான்சர்களின்  உபயத்தால் அதைப் பதிப்பிக்கிறார்கள். ஆனால் அதை வாங்கி படிக்க வேண்டிய நம் குழந்தைகள் அமெரிக்கா சென்றுவிட்டார்கள். என்னைப் போன்றவர்கள் அந்த மாதிரி புத்தகங்களை  திருப்பிப் பார்த்து எல்லாம் சமஸ்கிருதம் என்று கீழே வைத்துவிடுவேன். இன்று சமஸ்கிருதப் பொக்கிஷங்களுக்கு ’சப்-டைட்டில்’ தேவைப்படுகிறது. யாரையும் குறை சொல்ல முடியாது, ஆனால் இது தான் இன்றைய நிலைமை. கோதா ஸ்துதி, பாதுகா  சஹஸ்ரம்  போன்ற பிரபலமானவை தமிழ் விளக்கத்துடன் கிடைக்கிறது. அதைத் தவிர உபன்யாசம்  போன்றவைகலால்  பலரிடம் சென்று சேருகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் பாகவதம் தொட...

இடைகழி மெய் விளக்கு

 இடைகழி மெய் விளக்கு   முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களின் திருவந்தாதிகள் முதல்/இரண்டாம்/மூன்றாம் திருவந்தாதி என்ற வரிசையில் இயற்பாவில் வருகிறது. 'ஞான தமிழ் புரிந்த நான்' என்று சொல்லும் ஆழ்வார்களுக்கு ஸ்வாமி தேசிகனின் இந்தப் பாசுரத்தை தமிழில் அருளியிருக்கிறார்  பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால் மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால் நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே மருளற்ற தேசிகர் வான் உகப்பால் இந்த வையம் எல்லாம் இருள் அற்று இறைவன் இணை யடிப் பூண்டு உய எண்ணுதலால் தெருள் உற்ற செந்தொழில் செல்வம் பெருகிச் சிறந்தவர் பால் அருள் அற்ற சிந்தையினால் அழியா விளக்கினரே முதலாழ்வார்களின் வைபவத்தை அதன் மேன்மையையும் இப்படி ரத்தான சுருக்கமாகச் சொல்ல ஸ்வாமி தேசிகனாலேயே முடியும். என்ன பொருள் என்று பார்க்கலாம்  முதல் பாசுரத்தில்  - முதலாழ்வார்கள் மூவர் எழுதும் பாடல்களே பாடல்.  முன்பு ஒரு காலத்தில் அதிகமாக நெருங்கியதால் திருக்கோவலூரில் ஒரு வீட்டின் இடைகழியிலேய...

திருப்பாவைப் பிரியனின் தீபாவளி

 திருப்பாவைப் பிரியனின் தீபாவளி  ’ஆறு வித்தியாசம்’ படம் போல இருக்கும் முதல் படத்தில் சட்டென்று உங்கள் கண்களுக்கு ஒரு வித்தியாசம் புலப்பட்டால் தொடர்ந்து படிக்கலாம்.   சமீபத்தில் அடியேன் யாத்திரை சென்று வந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம். ஒரு வாரத்துக்கு முன் "பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி"  என்று ஆண்டாள் கூறுவது போல் நிஜமாகவே பனி சொட்ட பீகார் மாநிலத்தில் ‘சீதாமர்ஹி’ என்ற இடத்துக்குச் சென்றேன்.  அயோத்தியா ராம ஜென்ம பூமி என்றால் ‘சீதாமர்ஹி’ சீதை ஜென்ம பூமி! ஆம் சிதை அவதார ஸ்தலம்.   இவ்வளவு ராம பக்தர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள் என்று இளைஞர்களும், சின்ன பசங்களும் பைக்கில் பல இடங்களில் அலைந்து திரிந்து  பால் வாங்கி க்யூவில் நின்ற எங்கள் எல்லோருக்கும் ‘சாய்’  கொடுத்து உபசரித்தார்கள்.  எங்கள் ஊர் பெருமாளை சேவிக்க இவ்வளவு கூட்டமா என்று பூரிப்பில் இருந்ததை கண்கூட பார்க்க முடிந்தது.  ஒருவர் என்னிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க ‘அயோத்தியா’ என்றேன். அதற்கு அவர் ராம ஜென்மப் பூமியிலிருந்து சீதையின் ஜென்மப் பூமிக்கு வந...

தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்!

 தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனே! இன்னுமொரு நூற்றாண்டிரும்! வருடம் - 1273 . காஞ்சிபுரம். ஸ்ரீ வரதராஜர் கோயில். காலை.  நடாதூர் அம்மாள் என்ற வைணவ பெரியவர் மரப் பலகை மீது அமர்ந்து காலக்ஷேபம் செய்துகொண்டு இருந்தார். அவரை சுற்றி, வடக்கு திருவீதிப் பிள்ளை, சுரதபிரகாசிக பட்டர் போன்ற பெரியவர்கள் கூர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயம் பளிச் என்ற திருமண்ணுடன் குட்டி ராமானுஜர் போல ஐந்து வயதுக் குழந்தை, தன் மாமாவான கிடாம்பி அப்புள்ளார் கையை பிடித்துக்கொண்டு சிரித்த முகத்துடன் உள்ளே வர, எல்லோரும் அந்தக் குழந்தையை வியந்து, ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். நடாதூர் அம்மாள் மெய்மறந்து “அடடா ! என்ன முகப்பொலிவு! நம் ராமானுஜரே குழந்தையாக நடந்து வருவது போல இருக்கிறதே!” என்று தன் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் “கிடாம்பி அப்புள்ளாரே! இந்தக் குழந்தை யார் ? ” என்று கேட்க, அப்புள்ளார் “என் சகோதரியின் மகன். என் மருமான். பெயர் ’திருவேங்கட நாதன்’ ” என்றார். உடனே அந்தக் குழந்தை நடாதூர் அம்மளை விழுந்து சேவித்தது. அம்மாள் குழந்தையை கையில் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு மீண்டும் த...

பொன்னியின் செல்வன் - 1 - சில எண்ணங்கள்

 பொன்னியின் செல்வன்  - 1 - சில எண்ணங்கள்  ’கல்கியின்’ பொன்னியின் செல்வனை மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். பிறகு ம.செ அழகான ஓவியங்களுடன்,  அடுத்து பத்ம வாசன் ஓவியங்களுடன், . கடைசியாக விகடன் பிரசுரம் செய்த அழகான புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். இதைத் தவிர காமிக்ஸ் புத்தகம் போல் வந்தவற்றையும் விட்டுவைக்கவில்லை.  பொன்னியின் செல்வன் நாடகமாக 2014ல் வந்த போது மியூசிக் அகடமியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். பாம்பே கண்ணன் அவர்கள் ஒலிச் சித்திரமாக வந்த போது முழுவதையும் அலுவலகம் செல்லும் போது, வாக்கிங் போது கேட்டு மகிழ்ந்தேன்.  மணிரத்தினம் இதைப் படமாக எடுக்கிறார் என்ற போது அதையும் விட்டு வைக்காமல் முதல் நாள் பார்க்க வேண்டும் என்று இன்று காலை சென்று வந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களில் மணிரத்தினம் மட்டும் அதைச் செய்து முடித்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு வாழ்த்துகள்.   பொன்னியின் செல்வனைப் படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  - சில/பல இளம் பாட்டிகள் நான் இன்னும் பொ.செ படிக்கவில்...

கொங்கில் பிராட்டி மற்றும் கொங்கில் ஆச்சான் கதைகள்

கொங்கில் பிராட்டி கதை ஸ்ரீராமானுஜர் திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தினால் தம்முடைய திரிதண்டம் காஷாயங்களை ஆழ்வானுக்கு கொடுத்துத் தாம் வெள்ளை சாற்றிக்கொண்டு திருநாராயணத்துக்கு போகும் வழியில் என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வாசகர்களை ஸ்ரீராமானுஜருடன் பயணம் செய்ய அழைக்கிறேன். கூரத்தாழ்வான், பெரிய நம்பிக்கு என்ன ஆனதோ என்று மனம் கலங்கிய ராமானுஜர், அரங்கனே துணையாக நீலகிரித் தொடரை சிஷ்யர்களுடன் வந்தடைந்தார். அன்று ஏழாம் நாள் உபவாசம், மாலை இருட்டு சூழ்ந்துகொண்டது நல்ல மழை வேறு. தூரத்தே கொஞ்சம் வெளிச்சம் தெரிய சீடர்கள் அதை நோக்கி வழி கேட்க சென்றார்கள். விளக்கு எரிந்த இடத்தில் வேடுவர்கள் சிலர் இருந்தார்கள். அவர்களிடம் “வழி எங்கே?” என்றார்கள். சீடர்களைப் பார்த்த வேடுவர்கள் “நீங்க எங்கிருந்து வருகிறீர்கள் ?”என்று கேட்க “கோயிலிலிருந்து(ஸ்ரீரங்கத்திலிருந்து) வருகிறோம்” என்று பதில் சொல்ல “அங்கு எம்பெருமானார் நலமா ?” என்று பரிவுடன் கேட்கச் சீடர்கள் வியப்புற்று “எம்பெருமானாரை உங்களுக்கு எப்படித் தெரியும் ?” அதற்கு வேடுவரின் தலைவன் “நாங்கள் நல்லான் சீடர்கள் எங்களுக்கு நல்லான் உபதேசிக்கும் போது த்வயத்தை உப...

ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு

 ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு 

வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு

 வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு 

இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு

  இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு 

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

கண்டேன் தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! ‘தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !’ மீண்டும் பதிப்பிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து அதை ஆர்டர் செய்து, யாம் பெற்ற இன்பம் பெருக.. என்று கல்கி கடைசிப் பக்கத்தில் எழுதியது நினைவு இருக்கலாம். ( இல்லாதவர்கள் இங்கே படிக்கலாம் )  என் அப்பாவுடன் அந்தக் கால அச்சகத்துக்குச் சென்றிருக்கிறேன். அழுக்கு முண்டா பனியனுடன் , வேட்டியா லுங்கியா என்று அடையாளம் தெரியாத  வஸ்துவை உடுத்திக்கொண்டு  60 வாட் விளக்கு வெளிச்சத்தில், சோடா புட்டி கண்ணாடியுடன்,  கையெல்லாம் மைக் கறையுடன் ஒவ்வொரு எழுத்தாக அச்சுக்கோப்பதைப் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி கஷ்டமான வேலைக்குப் போக கூடாது என்று நினைத்ததுண்டு.  இந்தக் காலத்தில் ஏசி அறையில் கணினியின் உதவியுடன் DTP போன்றவை வளந்தாலும், அந்தக் கால அச்சுப்புத்தகங்கள் குறிப்பாக உரைகள் போல இந்தக் காலத்தில் டைப் செட் செய்ய ஆட்கள் இல்லை. இன்று ஒரு வித டெம்பிளேட் வைத்துக்கொண்டு கட் & பேஸ்ட் செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியே மீண்டும் டைப் செட் செய்தாலும் பிழைகள், அலைன்மெண்ட் என்று அனுமார் வால் போல வேலை நீண்டு கொண்ட...

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் !

தமிழ்த்தாத்தாவின் கம்பராமாயணம் ! கல்கியால் ‘ரசிகமணி’ என்று அழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரம் முதலியார் அவர்கள் கல்கியில் ‘கம்பர் தரும் ராமாயணம்’ என்ற தொடரை எழுதினார் (அந்தக் காலத்தில் இலக்கியம் என்ற ஒரு பகுதி கல்கியில் இருந்தது!) பிறகு அது நூலாக வந்தது. பல வருஷங்கள் மறுபதிப்பு இல்லை. ஒருமுறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள், இதைப் பற்றி வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்களிடம் மெரினாவில் நடையின்போது சொல்ல, அவர் உடனே டி.கே.சியின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அந்த நூலின் மூன்று பாகங்களையும் தேடிப் பிடித்து வெளியிட்டார். இந்த விஷயத்தை என்னிடம் கூறிய சுஜாதா “புத்தகம் வரும். ஒரு பிரதி வாங்கிவிடுங்கள் பொக்கிஷம்” என்றார். புத்தகம் வந்தபோது பதிப்பகத்துக்குச் சென்று வாங்கியது இன்றும் நினைவு இருக்கிறது. அந்தச் சமயம் சுஜாதா என்னிடம் ‘டி.கே.சியின் கடிதங்கள்’ புத்தகம் படித்திருக்கிறார்களா ? என்று கேட்டார். உங்கள் மூலம் தான் டி.கே.சியே எனக்குத் தெரியும் என்றேன்.அப்போது அவரிடம் இருந்த ‘டி.கே.சி. கடிதங்கள்’ என்ற புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்து “படித்துப் பாருங்கள். திரும்பத் தரவேண்டாம்” என்றார். டி.கே.ச...

மதி நலம்

 மதி நலம்  சமீபத்தில் ‘மதி நலம்’ என்று ஆழ்வார்களே சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.  அதற்குப் பதில் சொல்லுவதற்கு முன்  திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவிற்கு எழுதிய அஞ்சலிக்  கட்டுரையில் இப் பகுதியைப் படித்துவிடுங்கள்.  “திருமாலின் திருவடியில் சேரப்போகும் நாள் சமீபித்துவிட்டது என்ற எண்ணம் வந்ததோ என்னவோ, ஆழ்வார் பாசுரங்களின் சிறப்பு பற்றி சமீபகாலமாக கல்கியில் எழுதிவந்தார். முதல் கட்டுரை வெளிவந்தபோது படித்துவிட்டு, 'குறிப்பிட்ட பாசுரத்தைப் பற்றி உங்கள் கண்ணோட்டத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இறுதிப் பகுதியில் அந்தப் பாசுரம் பற்றி முன்னோர்கள் தப்பாக வியாக்கியானம் செய்தார்கள் என்று ஏன் சொல்லியிருக்கிறீர்கள்? அவர்கள் பெரிய மகான்கள். அவர்களுடைய நோக்கில் எழுதியிருக்கிறார்கள். அதை ஏன் குறை சொல்லவேண்டும்?' என்று போனில் சொன்னேன். அதன்பின் அத்தகைய விமர்சனத்தை விட்டுவிட்டு, பாசுரத்தின் இலக்கியச் சிறப்பைப் பற்றி மட்டுமே எழுதினார். 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' என்பதை உணர்ந்த பெருந்தகை அவர். இதை எதற்குச் சொல்லுகிறேன் என்றால், ஆசாரியர்கள் ஆ...