10. சடகோபன் அருள் காலைக் கதிரவன் புறப்படும் சமயத்தை அருணோதயம் என்பார்கள். பிறகு சூரியோதயம் ஏற்பட்டு எங்கும் வெளிச்சம் பரவுகிறது. சில சமயம் இருண்ட மேகங்கள் அந்த வெளிச்சத்தை மறைக்க, பலமான காற்று வீசத் தொடங்கியவுடன் அம்மேகங்கள் விலகிச் செல்ல மீண்டும் வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது. ஆழ்வார்கள் காலத்துக்கு முன் அருணோதயமாக இருந்த இப்பூவுலகம், அவர்கள் அவதரித்தபின் சூரியோதயமாக விளங்கியது. சூரியனை மேகங்கள் மறைப்பது போல, ஆழ்வார்களின் அருளிச்செயல்களும் ஒருசில காலம் மறைந்திருந்தன. நாதமுனிகள் 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' பிரபந்தத்தை ஏகசந்தையாகப்[1] பன்னீராயிரம் முறை இசைத்தார். அது, பலமான பன்னிரண்டு துவாதச நாமக் காற்றாக உருவெடுத்தது. மறைத்த மேகங்களை விலக்கி, திருப்பள்ளியெழுச்சியாக ஒலித்து, ஞானசூரியனான அரங்கனை எழுப்பிப் பக்தி ஒளியைப் பரவச் செய்தது. இந்த ஒளி நூறு குளிக்கு நிற்குமா போலே இருந்தது.[2] பெருமாளின் எண்ணற்ற திருநாமங்களை ஆயிரம் திருநாமங்களாகப் பீஷ்மர் விஷ்ணு சகஸ்ர நாமமாக ஜபித்தார். அந்த ஆயிரம் திருநாமங்களில் பன்னிரண்டு திருநாமங்கள்[3] முக்கியமாகக் கருதப்படுகிறது. பன்னிரண்டு திருமண் காப்ப...