இஞ்சி மேடு என்ற படித்துறை ! ஒரு நாள் ’அவர்’ கையில் உபகாரத்துடன் (பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் பூமாலை. பழங்கள்) மதுராங்கத்தில் சக்கரவர்த்தி திருமகனை மங்களாசாசனம் செய்வதற்காகச் சென்றார். பெருமாள் புறப்பாடு, அதனால் கையில் உபகாரத்துடன் காத்துக்கொண்டு இருக்க வேண்டியிருந்தது. “சமர்பிக்க தாமதம் ஆகிறதே! உபகாரத்தைச் சுத்தமான இடத்தில் வைத்துவிடலாமே” என்றார் கூட இருந்தவர். அதற்கு அவர் “சுமப்பதும் சம்பர்ப்பிப்பது இரண்டும் கைங்கரியமே! சுமந்து மாமலர் நீர் சுடர்தூபங்கொண்டு’ என்றும் ‘புனைந்த கண்ணி நீர் சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்’ என்று ஆழ்வார் ‘சுமப்பது, ஏந்தி’ இருப்பதைக் கைங்கரியமாகவே சொல்லுகிறார்” என்றார் அன்று ’பயிலுஞ்சுடரொளி’ ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழி சொல்லுகின்ற அர்த்தத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ‘அவர்’ 42ஆம் பட்டம் இஞ்சிமேடு அழகிய சிங்கர்(1) அர்ச்சையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸ்ரீ மாலோலனுக்கு உபகாரமாகப் பழம் முதலியவற்றைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது தட்டை ஏந்திக்கொண்டு தட்டைக் கீழே வைக்காமல் நிற்பார்....