Skip to main content

Posts

பிராண்டிங் நம்பிக்கை

பிராண்டிங் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். அந்த பொருளின் மீது மக்களுக்கு ஒரு வித நம்பிக்கை ஏற்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளை இதில் கொட்டுகிறார்கள். எம்பிஏ படித்து இந்த களத்தில் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்க பல வருடங்களாக கட்டிக்காத்த ”இரண்டு நிமிட” நூடுல்ஸ் நம்பிக்கை இரண்டே நிமிஷத்தில் நூடுல்ஸ் ஆனது. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நடிகர் அல்லது நடிகையை அழைத்து திரும்பவும் அதே பொய்யை சொல்லி அவர்களுடைய பிராண்ட் இமேஜை மீட்க பல கோடிகள் செலவாகும். போன வாரம் இரவு 11:45மணிக்கு தனியாக காரில் வந்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரத்தில் சிகப்பு, நீல நிற விளக்கு சிமிட்டிக்கொண்டு நின்ற காவல்துறை வண்டி. அதிகாரிகள் கை அசைத்து கார், பைக்கில் பயணம் செய்யும் எல்லோரையும் குடிபோதையில் வண்டி ஓட்டுகிறோமா என்று ஒரு ஸ்டிராவில் ஊதச் சொல்லி பரிசோதனை செய்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு முன்னால் ஓர் ஆடி கார் ஊதிவிட்டு புறப்பட்டது. அடுத்து நான். என்னை பார்த்துவிட்டு நீங்க ஊத வேண்டாம் போகலாம் என்று அனுப்பிவிட்டார். என் நெற்றியில் நான் தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீ...

நகரம் - க்யூவும் க்யூ சார்ந்த இடமும்

என்னுடைய ஒரு நாளை எப்படிக் கழிக்கிறேன்? சுருக்கமாக இரண்டு மதிப்பெண் கேள்விக்கான விடை மாதிரி சொல்ல வேண்டும் என்றால் ”வாகன நெரிசலில் கார் ஓட்டிக்கொண்டு, வழியில் சுமாரான வரிசையைத் தேர்ந்தெடுத்து சுங்கச் சாவடியில் கட்டணம்கட்டிக் கடந்து, கூட்டத்தோடு கூட்டமாக மின்தூக்கியின் (அது தாம்பா லிஃப்ட்) உதவியுடன் ஐந்தாவது மாடியில் இருக்கும் என் அலுவலகம் வந்தடைகிறேன். இதே மாதிரி வீடு திரும்பும்போது வழியில் எக்ஸ்டரா பழமுதிர்ச் சோலையில் காய்கறி வாங்குகிறேன்” கொஞ்சம் விளாவாரியாக (பத்து மதிப்பெண் மாதிரி) இப்படி விவரிக்கலாம். வாகன நெரிசலில் வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் போது நம்மையறியாமலே முன் செல்லும் கார், பைக் என்று எதையும் விட்டு வைக்காமல் முந்துகிறேன் பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே. எங்கேயும் எல்லோரும் யாரையாவது முந்திக்கொண்டே செல்கிறார்கள். அடுத்தவர் நம்மை முந்திக்கொண்டு செல்லும் போது நமக்கு ஒரு விதமான எரிச்சல் வருகிறது. நம்மை முந்திக்கொண்டு சென்றவர், பின்னாடி வருபவர் எல்லோரும் அடுத்த போக்குவரத்து சிக்னல் முன் ஒன்றாக பச்சைவரக் காத்து நிற்கிறோம். எல்.ஈ.டி 5.4.3.2.1 பச்சை விளக்கு வந்தவுடன் திர...

பிறவிப் பெருங்கடல்

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன் துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே. - நம்மாழ்வார் திருவாய்மொழி அடிக்கடி கேட்ட பாசுரம் தான். சிம்பிளான விளக்கம் - உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன். அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன். தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன். எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே. உடலை ஒழுங்காக வைத்திருந்தால், மனம் ஒழுங்காக இருக்கும் என்று ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். மனம் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்பது இன்னொரு சித்தாந்தம் ! இரண்டாவது என் தந்தைகடைப்பிடித்தது. பயம் கலந்த உயிராசை எல்லோருக்கும் இருக்கிறது. சின்ன தலைவலி, கால் குடைச்சல், முகத்தில் பரு என்று எந்த உபாதை வந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகிறோம். பூரான் வீட்டுக்குள் நுழைந்தால் உடனே அடித்துவிடுகிறோம். கொசு கடித்தால் உடனே நசுக்கி வேட்டியில் சின்ன ரத்த கறையாக்குகிறோம் நல்ல ஆரோ...

அணில்

எங்கள் வீட்டில் அசைவ உணவு கிடையாது. இதில் என்ன விஷேசம், ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் இது சகஜம் தானே என்று கேட்கலாம். இன்று நிலமை அப்படி இல்லை. “முட்டை கூட சாப்பிட மாட்டீங்களா ?” என்று ஆச்சரியமாக கேட்க ஆரம்பித்துவிட்டர்கள். ”முட்டையை முழுசா சாப்பிட வேண்டாம்... கேக் சாப்பிடலாமே...?” ஸ்ரீரங்கம் வைஷ்ணவ குடும்பங்களில் ஒருவர் ஐடி படித்து, அமெரிக்காவில் நுழைந்த கையோடு, பீட்சா, பர்கரும் கூட அவர்கள் வாயில் நுழைந்துவிட்டது. “நான் சாப்பிடுவது வெஜ் பிட்சா ... பாருங்க பச்சை கலர் புள்ளி இருக்கு..வெஜிடேரியன்” என்று சாப்பிடும் அந்த பிட்சா மாமிசம் செய்த அதே அவனில் அதே தட்டில் செய்யப்பட்டது என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள். மாமிசம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பது அவர்கள் இஷ்டம். விவாதிக்க போவதில்லை. நான் சாப்பிடுவது இல்லை. அதற்கு சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களாக இருக்கலாம். பகிர்கிறேன். “பையன் எப்படி சூம்பி போய் இருக்கான்... நல்ல நாட்டு முட்டையாக வாங்கி நானே ஆம்லெட் போட்டு தரேன்” என்று பக்கத்து வீட்டு மணி மாமா என் அப்பாவிடம் சொல்லுவார். “எங்களுக்கு வேண்டாமே..” என்றால்...

ஆனந்தவள்ளி

நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் சென்று இருந்தேன். கோயில் வாசலில், வயதான ஒரு பெண்மணி பழைய பெயிண்ட் டப்பாவில் தண்ணீர் வைத்துக்கொண்டு தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் நம்மாழ்வார், உடையவர், பெருமாள் சிலைகளுக்கு கையால் திருமஞ்சனம் செய்துக்கொண்டு இருந்தார். பேச்சு கொடுத்தேன். “உன் பேர் என்னம்மா ?” அவளுடைய பெயரை இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லேசாக சிரித்துவிட்டு “ஆனந்த வள்ளி” என்றாள். ”தினமும் இந்த மாதிரி தண்ணி தெளிப்பையா ?” “ஆமாங்க.. தூசியா இருக்கு, ஜனங்க எதையாவது தடவுறாங்க. சிலபேர் விளக்கு வைக்கிறார்கள்..அழுக்காகுது... அதனால் தினமும்” “இந்த ஊரா ?” “இல்லை பக்கத்துல சுங்குவார்சத்திரம்.. காலையில எட்டு மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் எழு மணிக்கு கிளம்பிடுவேன்” “தினமுமா அங்கிருந்தா வர ?” “ஆமாம்.. நாளைக்கு(இன்று) திருவாதிரை சீக்கிரம் வரமுடியாது...அதனால இங்கேயே பக்கதுல ஒரு மண்டபத்துல படுத்துப்பேன். கையில ஒரு செட் துணி இருக்கு” கொஞ்சம் நேரம் கழித்து “இந்த மாதிரி தண்ணி ஊத்தினா மழை வருது...” ”அப்படியா?” “நிஜம்தாங்க” ”மழைவந்தா ஆந்த தண்ணி...

திருச்சி பாப்பு

’திருச்சி பாப்பு’ என்று செல்லமாக அழைக்கப்படும் என் அம்மா ஆசார்யன் திருவடி அடைந்து இரண்டு வாரம் ஆகிறது. டிசம்பர் மாதம், பெனடிரிலுக்கு இருமல் அடங்காமல் மருத்துவரிடம் சென்ற போது “எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடலாம்” என்றார். எக்ஸ்ரேயைப் பார்த்த போது டாக்டருக்கும் எங்களுக்கும் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அதில் ஒரு நுரையீரல் தெரியவில்லை. ”அம்மாவிற்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் லாஸ்ட் ஸ்டேஜ்” என்று டாக்டர் சொன்ன போது, தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ”கேன்சர் ஒரு சாபம் அல்ல குணப்படுத்த முடியும்” என்று எழுதியிருக்கும் அந்த பிங்க் நிற பலகை ஞாபகத்துக்கு வந்தது.

சுஜாதாவிடம் கற்றதும் பெற்றதும்

"என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்" - கற்றதும் பெற்றதும்  சுஜாதாவிற்கு சிறுகதை மேல் அளவுகடந்த  காதல் என்று சொல்லலாம். எந்த எழுத்தாளர் பற்றிக் கேட்டாலும் அவர்கள் எழுதிய ஒரு நல்ல சிறுகதையை உடனே நினைவுகூர்வார். ஒரு முறை சுஜாதாவைக் கடுமையாக விமர்சனம் செய்த எழுத்தாளரைப் பற்றி பேச்சு வந்தபோதும் அந்த எழுத்தாளர் எழுதிய ஒரு நல்ல கதையின் தலைப்பைச் சட்டென்று சொன்னார். வியந்துபோனேன். 'எல்லோரிடமும் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது' என்று பலமுறை சொல்லியிருக்கார்.

வணக்கம் சென்னை - 5

  திடீரென்று ஒரு நாள் பாரிஸ் கார்னரை ஒரு ரவுண்ட் அடிக்கலாம் என்று புறப்பட்டேன். பாரிஸ் கார்னர், எலிஃபெண்ட் கேட், பிராட்வே, பூக்கடை, சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன் என்று பல இடங்கள் ஒரே இடத்தைக் குறிப்பிடுகிறது என்று நினைக்கிறேன். இதே மாதிரி சென்னையில் வேறு இடங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்த கடைகளின் அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. ஒரு தெரு முழுக்க செண்ட் விற்பனை, மற்றொரு தெரு முழுக்க பாத்திரக்கடை; ஜவுளி கடை, நகை என்று தெருவிற்கு தெரு வித்தியாசமாக இருக்கிறது.  பைராகி மடம் என்று அழைக்கப்படும் பிரசன்ன வேங்கடேச பெருமாள்  கோயிலை அந்த கோயில் எதிர்த்த மாதிரி இருப்பவர்களுக்கு கூட தெரிவதில்லை. 400 வருடம் பழமை மிகுந்த இந்தக் கோயில் அங்கே வசிக்கும் மார்வாடி, சேட் உபயத்தில் ஸ்ரீநிவாசர் நன்றாக இருக்கிறார். அர்ச்சகர் புன்னகையுடன் எல்லோரையும் தங்கள் வீட்டுக்கு வரவேற்பதைப் போல வரவேற்று பெருமாள் சேவை செய்து வைக்கிறார். அர்ச்சனையை ராகத்துடன் பாடி அசத்துக்கிறார். கோயிலில் இருக்கும் ஆண்டாள் கொள்ளை அழகு. நிச்சயம் பார்க்க வேண்டிய இடம். திருப்பதிக்கே லட்டு மாதிரி திருப...

திருச்சிடா - 2

2007ல் சுஜாதாவுடன் திருச்சி மலைக்கோட்டை ரயிலில் பயணம் செய்த பிறகு ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் மலைக்கோட்டை ரயிலில் கடந்த வாரம் திருச்சிக்குச் சென்றேன். சென்டரல் ஸ்டேஷனை விட எக்மோர் சுத்தமாக இருக்கிறது. நிறைய பேர் ‘ரயிலில் நீர்’ வாங்காமல் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். எக்மோர் ஸ்டேஷனில் எல்.ஈ.டி. அறிவிப்புத்திரை வைரம் போல ஜொலிக்கிறது. ரயில் பெட்டிகள் சுத்தமாக, மொபைல் சார்ஜ் செய்ய வசதி எல்லாம் எனக்குப் புதுசு. மாம்பலம் வரும் முன்பே இளைஞர்களின் செல்ஃபோனில் படம் ஆரம்பித்து முதல் பாட்டு வந்துவிடுகிறது. வழக்கம் போல், ஸ்ரீரங்கத்துக்குப் பிறகு ராக்போர்ட் எஸ்பிரஸ் தவழ்ந்து திருச்சி ஜங்ஷன் வந்து சேருகிறது. முகமூடி அணிந்துகொண்டு பணிப் பெண்கள் சுத்தமான ஸ்டேஷனை இன்னும் சுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். திருச்சி அவ்வளவாக மாறவில்லை. இன்னுமும் மெயின்கார்ட் கேட்டிலிருந்து வரும் பேருந்துகள், கோர்ட் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் பிள்ளையார் கோயிலோடு ஏமாற்றிவிட்டு போகிறது. பின்னாடி ஏதாவது பஸ் வந்தால் இரண்டு கண்டக்டர்களும் விசிலில் பேச, பஸ் அசுர வேகத்தில் பறக்கிற...

வணக்கம் சென்னை - 4

சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது. தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார் சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்ற...

ஆழ்வார்கள் விஜயம்

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி நாள்களிலும் தொடர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் கூடவே வந்தார்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (இருபது வருடம் இருக்கும்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய-- கூகிள் இல்லாத காலத்தில்-- ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். பதினாறு வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். ஆழ்வார்கள் கோஷ்டி பல இடங்கள...

பகல் வேஷம்

வெயில் இல்லாத இன்று காலை ’ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா படங்களை பார்த்துக்கொண்டு இருந்தபோது வெளியே கானம் ஒன்று கேட்டது. ராம கானம். அனுமாரை தவிர இவ்வளவு நல்ல ராம கானத்தை யார் பாட முடியும் என்று வெளியே பார்த்தபோது அனுமாரே பாடிக்கொண்டு இருந்தார். காலில் சலங்கை, பிளாஸ்டிக் மூக்கு, ஜிகினா பேப்பர் கீரிடம், தாடிக்கு ஏதோ புசுபுசு துணி, நெற்றியில் பச்சை பெயிண்ட் என்று அனுமார் வேஷம் போட்டு பிச்சை எடுத்து வந்தார் அவர். அவர் அடுத்த வீட்டுக்கு சென்ற பிறகும் அவர் குரலின் வசீகரம் என்னை இழுத்தது. அவரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் வந்து அவரை தேடிக்கொண்டு சென்றேன். தேடுவது கஷ்டமாக இல்லை. அவர் குரல் வந்த திசையை நோக்கி சென்றேன்.

வணக்கம் சென்னை - 3

சென்னை வெயிலும் வேர்வையும் பழகிவிட்டது. சினிமாக் கதாநாயகன் பாடல் காட்சியில் விதவிதமாக உடை மாற்றுவது போல வேர்த்துக்கொட்டும் போது மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த முறை நான் கவனித்த சில விஷயங்கள். இரண்டு இலக்கியம் ஒரு ஆன்மீகம் என்று மூன்று விழாக்களுக்குச் சென்றிருந்தேன். எழுத்தாளர் ஜெயகாந்தன் விழாவில் என் பக்கத்தில் உட்கார்தவர் கை பேசியில் பேசியது பத்து அடி சுற்றளவில் உட்கார்ந்த எல்லோருக்கும் கேட்டது. மறுமுனை என்ன சொன்னது என்று தெரியாது. ஆனால் இவர் பேசியது இது தான்.

தூது சென்ற தூதுவளை

தூதுவளை கொடி போன வாரம் தூதுவளை கீரை ( இதன் தாவரப் பெயர் Solanum trilobatum என்பதாகும். செடி முழுக்க ஏன் இலையில் கூட முட்கள் இருக்கும்) சென்னையில் எங்கே கிடைக்கும் என்று விசாரிக்க தொடங்கினேன். “மைலாப்பூர் போங்க சார் அங்கே தான் எல்லாம் கிடைக்கும்” “சைதாப்பேட்டையிலே டிரை பண்ணுங்களேன்?” “பெஸ்ட் திருவல்லிக்கேணி கங்கனா மண்டபம் தான் சார்” கடைசியில் தி.நகர் மார்கெட்டில் ஒரு பாட்டியிடம் கேட்க “முள்ளு அதிகம்.. இப்ப எல்லாம் பறிப்பதற்கு ஆள் இல்லை...கஷ்டம், நாளைக்கு வாங்க” அடுத்த நாள் ஒரு பாக்கெட் நிறைய தூதுவளை கீரையை தருவித்துத் தந்தார். “யாருக்காவது சளி, இருமலா ?” “இல்லை இது ஆளவந்தாருக்கு” என்றேன். ஆளவந்தாருக்கும் தூதுவளைக்கு என்ன சம்பந்தம் ? ஆளவந்தார் வாழி திருமாமத்தில் ”பச்சை இட்ட ராமர் பதம் பகருமவன் வாழியே” என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று பார்க்கும் முன் அவர் சரித்திரத்தின் ஒரு பகுதியை சுருக்கமாக பார்க்கலாம்: ஆளவந்தார், காட்டுமன்னார் கோயில் ஆளவந்தார் கிபி 976 ஆம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாதமுனிகள...

வணக்கம் சென்னை - 2

ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன. பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்! சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற ...

வணக்கம் சென்னை - 1

கடந்த சில வாரங்களாகச் சென்னை வாசம். பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், நுழையும் எல்லாச் சாலைகளிலும் ஒரு தடுப்பு வைத்து ஒத்தையடிப் பாதையாகவோ, அல்லது அம்பு குறிப் போட்டு ஒரு வழிப்பாதையாகவோ மாற்றுவழியில் திருப்பிவிடுகிறார்கள். மெட்ரோ, மேம்பாலம் பழுது என்று ஏதாவது காரணம் இருக்கிறது. கடைசியாக பசுல்லா சாலையில் திருப்பிவிடப்பட்ட போது அங்கிருந்த சங்கீதா ஹோட்டலைக் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் மரத்துக்குக் கீழே “மெட்ராஸ் காஃபி ஹவுஸ்” என்று சின்னதாக முளைத்திருக்கிறது. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும், ”கும்பகோணம் காபி” கடை இறைந்து கிடைக்கிறது. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஐயங்கார் பேக்கரி, தலப்பாக்கட்டி பிரியாணி, கோவை பழமுதிர் நிலையம் எல்லாம் இந்த வகை தான். அலுவலகம் செல்லும் போது பண்பலையில் தினமும் ஒரு முறையாவது கோச்சடையான் -மெதுவாகத்தான்; சைவம் - அழகு பாடல்களைக் கேட்டுவிட முடிகிறது. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பித்தாலும் மஞ்சப்பை ”பாத்து பாத்து” பாடலிருந்து தப்பிப்பது கஷ்டம். கொசுக்களை விரட்டும் புதிய LG ஏஸி; ”கேரியர் ஏஸி பொருத்திய ராசி நான...

பொன்னியின் செல்வன் - நாடகம்

அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்பதை நம்பிச் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது தலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் இருந்தது. அலுவலகம் செல்லும் வழி எல்லாம் பொன்னியின் செல்வன் நாடகம் பற்றி விளம்பரத்தைப் பார்த்து டிக்கெட் முன்பதிவுச் செய்யலாம் என்று முயற்சி செய்த போது டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார்கள். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று மியூசிக் அகாடமிக்கு சென்ற போது டிக்கெட் கவுண்டர் பக்கம் ஒருவர் என்னை அணுகி “என்ன சார் டிக்கெட் வேணுமா ? என்றார் “ஆமாம்” “கொஞ்சம் எக்ஸ்டரா ஆகும்” “அவ்வளவு ?” “பார்த்துக் கொடுங்க... என்று ஒரு டிக்கெட் கொடுத்தார்” ( எவ்வளவு கொடுத்தேன் என்பது இங்கே தேவையில்லை என்பதால் அதை பற்றி நோ கமெண்ட்ஸ்) பிளக்கில் டிக்கெட் வாங்குவது குற்றம், படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று உள் மனது சொன்னாலும், கல்கியின் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தப்பை செய்தேன். நாடகம் எப்படி இருக்கும்... ஐந்து பாகங்களை எப்படிச் சுருக்க போகிறார்கள், காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தவர்கள் பலர் மனதில் ஓடுவதைப...

கையெழுத்து

தினமும் பல ஆச்சரியங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அவற்றை கவனிப்பதில்லை.சலூனில் இத்துணூண்டு க்ரீமைக் கொண்டு ஷேவிங் பிரஷ்ஷால் தேய்க்கத் தேய்க்க அட்ஷயப் பாத்திரத்திலிருந்து வருவது போல நுரை வருவது; நூலில் சுற்றப்பட்ட சமோசா கோபுரத்தை கீழே விழாமல் எலக்டரிக் ரயிலில் கூட்டத்தின் மத்தியில் விற்கும் அந்தச் சின்னப் பையன்; எப்போது போனாலும் சரவணபவன் சாம்பார் ஒரே மாதிரி இருப்பது; பர்வீன் சுல்தானா எல்லா ஆக்டேவிலும் ஸ்ருதி பிசகாமல் பாடுவது... புத்தகக் கண்காட்சிக்குப் போன போது இதே மாதிரி இன்னொரு ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது.

தற்செயல்

சென்னையில் ஒரு நாள்

திங்கள் அன்று சென்னயில் இருந்தேன். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும் முன் ஏழே முக்காலுக்கு ராயர்ஸ் கஃபேவுக்கு ரொம்ப நாள் கழித்துச் சென்றேன். பெரிய க்யூ நின்று கொண்டு இருந்தது. முதல் பந்தியிலேயே இடம் கிடைத்தது. முதலில் எல்லோருக்கும் கப்பில் கெட்டிச் சட்னி தருகிறார்கள், மற்றபடி எதுவும் மாறவில்லை. சுடசுடப் பொங்கல், வடை, இட்லி என்று சாப்பிட்டுவிட்டுப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றேன். Tamil Calendar ! நுழைந்தவுடன் ஒரே மலைப்பாக இருந்தது. பல வருஷங்கள் முன்பு புத்தகக் கண்காட்சியில் பதிப்பகங்கள் சார்ந்து ஸ்டால்கள் இருக்கும். ஆனால் தற்போது பல ஸ்டால்களில் பல பதிப்பகங்களின் புத்தகங்கள் விசிரி போல அடுக்கி வைத்திருக்கிறார்கள். நீயா நானா கோபினாத் பல ஸ்டால்களில் சிரித்துக்கொண்டு இருக்கிறார். பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு மலிவாகத் தருகிறாரார்கள். பதிப்பகங்கள் சார்ந்த ஸ்டால்களில் பார்த்திவிட்டு மினி சூப்பர் மார்கெட் ஸ்டால்களைச் சுலபமாகக் கடந்து சென்றேன். கீதா பிரஸ் ஹரன் பிரசன்னாவை கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தேன். பார்த்தவுடன் சிரித...