Skip to main content

Posts

ஆதித்தியா

[%image(20061014-Aditya_1.jpg|150|200|Aditya)%] நான் HCLலில் வேலை செய்த போது என் எதிர் சீட்டில் இருந்தவர் பெயர் குமார். பிறகு வேலையை மாற்றிக்கொண்டு நான் ஃபியூச்சர் ஃசாப்ட்வேர் சென்ற போது, என் பக்கத்து சீட்டில் யாரோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று உற்றுப்பார்த்தால் அது குமார். இரண்டு வருடம் முன் பெங்களூர் சென்று லூசண்டில் சேர்ந்த போது "இங்கேயும் வந்துட்டையா?" என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். குமார் இருந்தார்!. நண்பர் குமாரின் குழந்தை ஆதித்தியாவிற்கு (பார்க்க படம்) வயது 4. தற்போது ரத்த புற்றுநோயால்(Acute Lymphoblastic Leukemia (ALL) பாத்திக்கப்பட்டு வேலூர் CMCயில் சிகிச்சை பெற்றுக்கொண்டுடிருக்கிறான். அடுத்த மாதம் Bone Marrow Transplant(BMT) சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறான். எங்களால் ஆன உதவிகளை செய்துகொண்டு இருக்கிறோம். உங்களால் உதவ முடிந்த்தால் நான் சந்தோஷப்படுவேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உதவுபவர்களுக்கு சுஜாதா எழுதிய புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டு அனுப்பிவைக்கிறேன். நன்றி. ஆதித்தியா பற்றிய விபரங்களுக்கு பார்க்க http://adityak02.googlepages.co...

titbits

* titbits என்ற சொல்லுக்கு சரியான தமிழ் வார்த்தை  இருந்தால் சொல்லுங்கள். (தமிழ் titbits என்று சொல்லவேண்டாம்) * தேன்கூடு, தமிழ்மணம் ஆகியவற்றில் அறியப்படாத புதிய வலைப்பதிவு உதயமாகியிருக்கிறது. பெயர் : http://www.kirukkal.com/ . யாருடையது என்று கண்டுபிடித்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். முக்கியமான விஷயம் இந்த வலைப்பதிவில் பின்னூட்ட வசதி கிடையாது. :-) * போன வாரம் சுஜாதாவுடன் பேசிய போது கிடைத்த சிவாஜி titbits:  படம் 60% முடிவடைந்து விட்டது. இசை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. கதை ? நல்ல கதை அதை உங்களுக்கு சொல்ல எனக்கு அனுமதி கிடையாது.(clue: 20000000->1-> ?) ரஜினியும் இந்த படத்திற்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்கிறார் சுஜாதா. பார்க்கலாம். * பவித்திரா ஸ்ரீநிவாசன் ஸ்ரீரங்கத்துக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். மேலும் தகவல்கள் என்னிடத்தில் இல்லை. * தினகரன் திபாவளி மலரில் ஷங்கர், சுஜாதா கலந்துரையாடல். மத்தாப்பூ, சினிமா என்று எல்லாம் இருக்கிறது. * வாரம் ஒரு பாசுரம் என்ற தொடர் அம்பலத்தில் வந்துக்கொண்டு இருக்கிறது. விரைவில் கல்கியில் வரப்போகிறது.  *...

உதவ முடியுமா ?

நண்பர் பாலாவின் இந்த பதிவை முதலில் படியுங்கள் . தொடர்ந்து பாலா செய்து வரும் நல்ல முயற்சி இது.  இந்த முறை நானும் உதவலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என் வலைப்பதிவை படிக்கும் நீங்களும் உதவலாம்.  என்னை தொடர்பு கொள்ள : mobile:  98458 66770 desikann@gmail.com நன்றி, தேசிகன்  

சக்கரை இனிக்கிற சக்கரை

நாளை எனக்கு முப்பத்தாறு வயது முடிந்து முப்பத்தியேழு வயது ஆரம்பிக்கிறது. ஸ்கூல் படிக்கும் போது பிறந்த நாளிற்கு அம்மா பாயசம் அல்லது சக்கரை பொங்கல் செய்வாள். அதை நான் சாப்பிட மாட்டேன். யாராவது ஃபைவ்ஸ்டார் தருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பேன். பாட்டியை சேவித்து ஆசிர்வாதம் வாங்கியபின் "தேசிகா இந்தா ஏதாவது மிட்டாய் வாங்கிக்கோ" என்று பணம் தருவார். அதில் ஒரு ஃபைஸ்டார் வாங்கிக்கொள்வேன். கல்யாணம் முடிந்த பின் முதல் வருடம் மட்டும் மாமியார் வீட்டில் பாயசம் செய்தார்கள். இந்த பிறந்த தினதில் யாராவது எனக்கு மிட்டாய் கொடுத்தாலும் சாப்பிடமுடியாது. ஏன் என்று தெரிந்துக்கொள்ள மேலே படிக்கவும். போன மாசம் என் மனைவியின் கண் பரிசோதனைக்கு உடன் சென்றிருந்தேன். கண்ணை பரிசோதனை செய்துகொண்ட என் மனைவி "நீங்களும் உங்க கண்களை செக் செஞ்சிக்கோங்கோ.." "எனக்கு எல்லாம் நல்லா தான் தெரிகிறது" "அதை டாக்டர் சொல்லட்டுமே" டாக்டர் கண்களில் டார்ச் லைட் அடித்து கண்களை கூச வைத்து, நான் இரண்டு சொட்டு கண்ணீர் விட்ட பின், சில எழுத்துக்களை காண்பித்தார். "முதல் வரிசையை படியுங்கள்...

ஆடித் தள்ளுபடியில் வேதாளம்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஆடி மாசத்தில் தோசை வார்க்க ஆரம்பித்தான். அப்போது எக்ஸ்சாஸ்ட் ஃபேன் வழியாக வேதாளம் வந்தது. "என்ன விக்ரமா, வைஃப் வீட்ல இல்லையா, நீ தோசை வார்க்கற ?" "ரொம்ப நாளா உன்னைத்தான் ஆளக் காணோமேன்னு பாத்தேன், வந்துட்டியா ?" விக்கிரமாதித்தன் அலுத்துக்கொண்டான். "நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு எனக்கே தெரியாதே. சரி சரி எனக்கும் ஒரு ஸ்பெஷல் நெய் ரோஸ்ட் போடு, சாப்டுட்டுப் போறேன்."   "தோடாஆஆ.. இதுல ஒன்னும் குறைச்சலில்லை!" பேசிக்கொண்டே தோசைக்கல்லில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கல் சூடாகிவிட்டதா என்று பார்த்தான் விக்கிரமாதித்தன். தோசைக்கல்லில் பட்ட தண்ணீர் "ஸ்ஸ்ஸ்.." என்ற சத்தத்தோடு அதில் குதித்தது. வேதாளம், "தண்ணி ஏன் குதிக்றது தெரியுமா ?" கேட்டது. "கல் சூடா இருக்கில்ல, அதனால!" "இது சரியான பதில் இல்லையே!" "ஆரம்பிச்சுட்டயா உன் வேலையை? சரி, சொல்லித் தொலை!" வேதாளம் தொடர்ந்தது. "நீ தோசைக்கல்லுல தெளிக்கற தண்ணி இந்த அறையோட தட்ப வெப்ப நிலையில இருக்கும். ( 30 டி...

திருப்பதி

திருப்பதிக்கு போக வேண்டும் என்று மனைவி சொன்ன போது அஜித் படம் என்று நினனத்துக்கொண்டு "அதுக்கு என்ன போயிட்டு வந்தால் போச்சு" என்றேன். "கீழ் திருப்பதியிலிருந்து மேலே நடந்து போகணும்" என்றதும், எனக்கு அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "நான் நடந்துடுவேன் உன்னால் நடக்க முடியுமான்னு பார்த்துக்கோ" அந்த பிரசித்திபெற்ற பயணம் இரண்டு வாரத்துக்கு முன் நடந்தது. பெங்களூரிலிருந்து KSRTC volvo பேருந்தில் இரவு 11:00 மணிக்கு குடும்பத்துடன் கிளம்பினோம். நாலுமணிக்கு நல்லா தூங்கும் போது "கோவிந்தா கோவிந்தா" என்று பின் சீட்டில் இருந்தவர் பக்தி பரவசத்தால் சத்தம் போட திருப்பதி வந்து சேர்ந்தோம். திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒரு நாளைக்கு 100,000 மேல் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரோம், ஜெருசலம், மெக்கா விட இது அதிகம். நாங்கள் சென்ற தினம் எங்களையும் சேர்ந்து 100,002.5  இருந்திருப்பார்கள் (குழந்தைக்கு அரை டிக்கேட்)  [%image(20060730-top_view_gopuram.jpg|150|112|Top view)%] பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு மேல் திரு...

‘THEENE.eot’ உமர் மறைவு

இன்று தமிழ் தளங்களில் 90% மேலாக THEENE.eot என்ற எழுத்துரு தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. நான் என் 'வீட்டுப்பக்கத்திற்கு' இதை இலவசமாக உபயோகபடுத்தும் முன் அனுமதி கேட்டு உமர் அவர்களுக்கு ஒரு மின்ஞ்சல் அனுப்பினேன். சில நாட்களில் எனக்கு ஒரு பதில் போட்டிருந்தார். கூடவே நான் கேட்ட அச்சுபிச்சு கேள்விகளுக்கு அடக்கத்துடன் பதிலும் எழுதியிருந்தார். நேற்று மாலை அவரின் சொந்த ஊரான அதிராம்பட்டனத்தில் இறைவனடி சேர்ந்ததாக சில வலைப்பதிவுகளில் பார்த்தேன். என் தந்தை இறந்ததற்கு பின் இன்று தான் அழுகை வந்தது. இத்தனைக்கும் நான் அவரை பார்த்ததில்லை. இவர் இன்று நம்முடன் இல்லை ஆனால் அவரின் Theene.eot நம்முடன் இருக்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். உமர் பற்றி மற்றவர்கள்: யுனிகோடு உமர் அவர்களின் மறைவ http://vettippechu.blogspot.com/2006/07/blog-post_13.html திரு. உமர் மரணம் http://www4.brinkster.com/shankarkrupa/blog/  யுனிகோட் உமர் தம்பி மரணம். http://abumuhai.blogspot.com/2006/07/blog-post_115273113453333253.html  உமருக்கு அஞ்சலி http://manimalar.blogspot.com/20...

உயிர் நண்பன்

ராஜாராமனுக்கு 'அந்த' நினைவு திரும்பவும் வந்த போது சன் நியூஸ் சிறப்பு பார்வை ஓடிக்கொண்டிருந்தது. 'அந்த' நினைவு அடிக்கடி வருகிறது. இந்த ரகசியத்தை தவிர எல்லாவற்றையும் ஒன்று விடாமல் தன் மனைவியிடம் சொல்லியிருக்கிறார் - ஸ்கூல் பஸ்ஸில்  ஒண்ணுக்கை அடக்க முடியாமல் ஜட்டியிலேயே போனது, சிகரெட் குடித்தது, கல்யாணி பீர் என்று எதையும் விட்டு வைக்கவில்லை.  இப்போது அவர் மகன் காலேஜில் படிக்கிறான், இன்னும் அவர் மனைவியிடம் சொல்லவில்லை. சன் நியூஸ் சிறப்பு பார்வையின் போது 'அந்த' நினைவுடன் ராஜாராமனுக்கு ஓர் அவஸ்தையும் ஏற்பட்டது. ராஜாராமனுக்கு முன் டாக்டர் தோன்றி "என்னப்பா ஆச்சு?" என்று கேட்டால், அவருக்கு அதை விவரிக்க முடியாது. "கொஞ்சம் uneasy" என்று தான் சொல்லமுடியும். அஜீரணமா, நெஞ்செரிச்சலா, வாய்வு தொல்லையா என்று சொல்ல தெரியாத ஒர் அவஸ்தை. தண்ணீர் குடித்தார். அமிர்தாஞ்சனத்தை தடவிக்கொண்டார். மூச்சை நன்றாக இழுத்து விட்டார். கொஞ்சம் ஜெலுசில் குடித்தார். மத்தியானம் என்ன சாப்பிட்டேன்னு  என்று நினைவு படுத்தி பார்த்துக்கொண்டார். கோலங்கள், செல்வி தொடர்களுடன் அவஸ்தையும் தொ...

தஞ்சை பெரியகோயில்

முன்பு சோழர் பற்றி ஒரு பதிவு எழுதியது ஞாபகம் இருக்கலாம். ( படிக்காதவர்கள் இங்கு பார்க்கவும் ) நேற்று குரு சுப்பிரமணியம் அவர்களின் வலைப்பதிவில் இந்திய கோயில்களை பற்றிய ஒரு விவரணப்படம் படம் ஒன்று கிடைத்தது என்று எழுதியிருந்தார். நானும் முன்பு எப்போதோ டிவியில் இதை பார்த்திருக்கிறேன். ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில்களள பார்க்க பார்க்க ஒர் வித சந்தோஷம் கிடைக்கிறது. மூன்று வருடத்திற்கு முன் Birds eye viewவில் நான் வரைந்த ஸ்ரீரங்கம் படமும் ஹெலிக்காப்டரில் ஸ்ரீரங்கமும் ஒத்துப்போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. [%popup(20060621-srirangam_birds_eye_view.jpg|500|351|படம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்)%] 52 நிமிடம் ஓடும் இந்த படத்தை எல்லோரும் ஒரு முறை பார்க்க சிபாரிசு செய்கிறேன்.

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை - பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'. பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமி...

நன்றி தேன்கூடு !

 இன்றைய தேன்கூடு 'வாசகர் பரிந்துரையில்' என் வலைப்பதிவு பற்றி வந்துள்ளது. தேன்கூடு குழுவிற்கும், வாசகர்களுக்கும் என் நன்றிகள்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி' மொட்டைக் கடுதாசி - எஸ்.வி.ராமகிருஷ்ணன் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பத...

கும்பகோணம்

[%image(20060609-kootani_vans.jpg|175|131|kootani)%] தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் பிரசார வாகனங்கள் இங்கும் அங்கும் சென்றுகொண்டிருந்த நேரத்தில்  குடும்பத்துடன் கும்பகோணம் சென்றிருந்தேன். சென்னையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம். வீராணம் குழாய், மதுராந்தகம் ஏரி, பண்ருட்டி பலாப்பழம், ரோடில் காயந்துகொண்டிருக்கும் கருப்பு உளுந்து, சுவரில் மாம்பழச் சின்னம் போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே போனால் 7 மணி நேரம் ஆகிறது.     [%image(20060609-uppiliappan_gopuram.jpg|175|131|uppiliappan)%] கும்பகோணம் வந்தடைந்து மதியம் சாப்பிட்டபின் முதல் கோயிலாக திருவிண்ணகர் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் சென்றோம். திருமங்கையாழ்வார் , பேயாழ்வார் , நம்மாழ்வார் பாடிய இந்தக் கோயில் கும்பகோணத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது. பெருமாள் ஒப்பிலியப்பன் - ஒப்பற்றவன் என்று பொருள். இக்கோயில் தளிகையில்(பிரசாதத்தில்) உப்பு சேர்ப்பதில்லை அதனால் பெருமாள் 'உப்பிலியப்பன்' என்றும் அழைக்கப்படுகின்றார். (கோயிலிக்குள் உப்பையோ உப்பு சம்பந்தப்பட்ட உணவையோ எடுத்துச் சென்றால் நரகத்துக்குச் செல்வா...

மீண்டும் மூளைக்கு வேலை

போன வருடம் டிசம்பர் மாதம் " மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை " என்ற பதிவுவை பார்த்திருப்பீர்கள். இன்னுமும் எனக்கு 'நான் இந்த Levelல்' இருக்கிறேன் எனக்கு உதவுங்கள்  என்று  ஈமெயிலில் என்னன சிலர் கேட்பதுண்டு. இந்த புதிர் இணையத்தில் நிஜமாகவே ஒரு பெரும் வெற்றி அடைந்தது. இதை தயாரித்த IIM Indore மாணவர்கள் இதற்கு தனியாக http://www.playklueless.com என்ற வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் . அதில் Hall of Fame என்ற தொடுப்பில் வரிசை எண் 455ல் ஒரு விஐபி பேர் இருக்கிறது :-)

சித்திர நாலாயிரம்

நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம். [%image(20060529-srinivasan.jpg|200|267|S.R.Srinivasan)%] நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார். [%image(20060529-srinivasan_and_others.jpg|200|150|Srinivasan + crowd)%] உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார். அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்க...

writersujatha.com

சற்று முன் எனக்கு திரு.சுஜாதாவிடமிருந்து வந்த மின்னஞ்சல். Dear Desikan, My website is up and running. the first book is fifty short stories Till now about fifty books have been inputted and are being progressively uploaded Please announce it in your blog Eventually all my books are going to be available thru Paypal on a nominal payment per book.  It may not be fair to give free access to my stories anymore as others will be paying. Hence I suggest you delink my stories from your website.  We will discuss this when you are in Chennai next regards Sujatha As per the request, I have removed the short stories from my site. :-(

சில்வியா - நேர்காணல் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா ஆரம்பித்திற்கும் தொடர். போன முறை பேசிய போது 8-9 வாரம் போகும் என்றார். இதை பற்றி தீபக் எழுதியுள்ளார் . ஆரம்பம் என்னும்  கொஞ்சம்  வேகமாக  இருந்திருக்கலாம்  ( "அப்படீன்னா?" என்றார் வசந்த். "அப்படியா?" என்றார் கணேஷ். மற்றும் ரசிக்கும் படி இருந்தது ).   அடுத்ததாக நிலாச்சாரலில் சுஜாதா அவர்களின் நேர்காணல். கிட்டத்தட்ட ஒரு டஜன் கேள்விகள். கேள்விகளை விட பதில் சின்னது. பதில் எழுதும் போது, பக்கத்து விட்டு அழும் குழந்தை, மேல் மாடி ஸ்டிரியோ அவரை டிஸ்டர்ப் செய்ததா என்று கேட்க வேண்டும். நேர்கணலுக்கு எடுத்து செல்லும் லிங்க் இங்கே

எழுபத்தொன்று - சுஜாதா

[%image(20060504-sujatha_hindu_pic.jpg|351|263|Sujatha)%] அதிகாலையிலிருந்து போன்கால்கள், பொக்கேக்கள், பரிசுகள், ஏதோ நேற்றுப் பிறந்தவன்போல என்னை உணரவைக்கும்  இந்தப் புதிய சங்கதிகளை என்னை விட என் எழுத்துக்கு நண்பர்கள் தரும் மரியாதையாக எண்ணி அதில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். பேரெழில் குமரன் ஒரு மிகப் பெரிய வாழ்த்து அட்டையில் என் போட்டோக்களை அமைத்து  லாமினேட் பண்ணி அனுப்பியிருந்தார். குறைந்தபட்சம் அதைத் தயாரிக்க இரண்டு நாளாகியிருக்கும். அவர் என் பரம ரசிகர். மகனுக்கு வசந்த் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொன்னார். எழுபத்தோரு வயதைக் கடந்த இந்த தினத்தில் பி.ஜி.உட்ஹவுசின் over Seventy என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுபது வயதைக் கடந்ததும் இந்தப் புத்தகத்தை எழுதினார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த மாற்றங்களை அவருடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வுடன் எழுதினார். 'என்னப்பா! உனக்கு எழுபது வயதாகிறதாமே! பார்த்தால் 105 வயசான மாதிரி தெரிகிறாய். ஏன் இதைப் பற்றி எழுதி இன்னும் காசு பண்ணவில்லை?' என்று துவங்கி சில அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். ''அமெரிக்காவில் இப்போதெல்லா...

பெண்களூர்-0 7

போன வாரம் புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கும் இடத்தில் என்னையும் சேர்த்து ஒரு நான்கு பேர் தான் இருந்தார்கள். [%image(20060420-bangalore_violence.jpg|100|142|Violence)%] விசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயில் வந்துள்ளது என்றார்கள். நானும் கிளம்பினேன். வரும் வழியில் நடு ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஸிராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்டப்பட்டு வேகமாகப் போய்கொண்டிருந்தன. சுமார் இரண்டு கீமீ தூரத்துக்கு வாகன நெரிசல்... பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து டிவியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையிலிருந்தே எங்கும் வன்முறை, பதட்டம் என்று டிவியில் சோக இசையில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு கன்னட சேனல்கள், இரண்டு செய்தி சேனல்கள் தவிர மற்றவைகளில் எல்லாம் பூச்சிகள் தான் தெரிந்தது. டிவியில் பார்த்த வன்முறை செய்பவர்கள் 15-25 ...

கல்கி – அசோகமித்திரன்

இந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் ) ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே?’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்?’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன...