நான் HCLலில் வேலை செய்த போது என் எதிர் சீட்டில் இருந்தவர் பெயர் குமார். பிறகு வேலையை மாற்றிக்கொண்டு நான் ஃபியூச்சர் ஃசாப்ட்வேர் சென்ற போது, என் பக்கத்து சீட்டில் யாரோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று உற்றுப்பார்த்தால் அது குமார். இரண்டு வருடம் முன் பெங்களூர் சென்று லூசண்டில் சேர்ந்த போது "இங்கேயும் வந்துட்டையா?" என்று குரல் கேட்டு திரும்பி பார்த்தேன். குமார் இருந்தார்!.
நண்பர் குமாரின் குழந்தை ஆதித்தியாவிற்கு (பார்க்க படம்) வயது 4. தற்போது ரத்த புற்றுநோயால்(Acute Lymphoblastic Leukemia (ALL) பாத்திக்கப்பட்டு வேலூர் CMCயில் சிகிச்சை பெற்றுக்கொண்டுடிருக்கிறான். அடுத்த மாதம் Bone Marrow Transplant(BMT) சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறான். எங்களால் ஆன உதவிகளை செய்துகொண்டு இருக்கிறோம்.
உங்களால் உதவ முடிந்த்தால் நான் சந்தோஷப்படுவேன். உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள். உதவுபவர்களுக்கு சுஜாதா எழுதிய புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டு அனுப்பிவைக்கிறேன்.
நன்றி.
ஆதித்தியா பற்றிய விபரங்களுக்கு பார்க்க
http://adityak02.googlepages.com/
http://www.cpaaindia.org/casefile/index.htm#Aditya
என்னை தொடர்புகொள்ள : (0)98458 66770
Comments
Post a Comment