Skip to main content

titbits

* titbits என்ற சொல்லுக்கு சரியான தமிழ் வார்த்தை  இருந்தால் சொல்லுங்கள். (தமிழ் titbits என்று சொல்லவேண்டாம்)


* தேன்கூடு, தமிழ்மணம் ஆகியவற்றில் அறியப்படாத புதிய வலைப்பதிவு உதயமாகியிருக்கிறது. பெயர் : http://www.kirukkal.com/ . யாருடையது என்று கண்டுபிடித்தால் பின்னூட்டத்தில் சொல்லவும். முக்கியமான விஷயம் இந்த வலைப்பதிவில் பின்னூட்ட வசதி கிடையாது. :-)


* போன வாரம் சுஜாதாவுடன் பேசிய போது கிடைத்த சிவாஜி titbits:  படம் 60% முடிவடைந்து விட்டது. இசை அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. கதை ? நல்ல கதை அதை உங்களுக்கு சொல்ல எனக்கு அனுமதி கிடையாது.(clue: 20000000->1-> ?) ரஜினியும் இந்த படத்திற்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்வார் என்கிறார் சுஜாதா. பார்க்கலாம்.


* பவித்திரா ஸ்ரீநிவாசன் ஸ்ரீரங்கத்துக் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறார். மேலும் தகவல்கள் என்னிடத்தில் இல்லை.


* தினகரன் திபாவளி மலரில் ஷங்கர், சுஜாதா கலந்துரையாடல். மத்தாப்பூ, சினிமா என்று எல்லாம் இருக்கிறது.


* வாரம் ஒரு பாசுரம் என்ற தொடர் அம்பலத்தில் வந்துக்கொண்டு இருக்கிறது. விரைவில் கல்கியில் வரப்போகிறது. 


* கணையாழியின் கடைசிப் பக்கங்கள் முழுதொகுப்பாக வரவிருக்கிறது. பதிப்பகம் உயிர்மை.



 

Comments

Post a Comment